புவி ஈர்ப்பு சக்தியை மிஞ்சிய நிக்கோலஸ் பூரண்: பிரபலங்கள் வாழ்த்து

நிக்கோலஸ் பூரண் சிக்ஸர் லைனில் பந்தை தடுத்து நிறுத்திய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில்,  நிக்கோலஸ் பூரண் சிக்ஸர் லைனில் பந்தை தடுத்து நிறுத்திய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. பஞ்சாப் அணியின் பீல்டிங் பயற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் எழுந்து நின்று  பூரணுக்கு மரியாதை எழுத்தினர்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில்”என் வாழ்நாளில்  நான் கண்ட மிகச் சிறந்த பீல்டிங்” என்று குறிபிட்டார்.

 

 

நேற்றைய போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான, 224 என்ற கடுமையான இலக்கை சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

 

புவி ஈர்ப்பு விசையை மிஞ்சும் அளவிற்கு நிகோலஸ் பூரண் அந்தரத்தில் பறந்து ஃபீல்டிங் செய்தார். மிகவும் அற்புதமான பீல்டிங் என  சேவாக் டிவிட்டரில் பதிவிட்டார்.

பாராட்டு மழையில்   நிகோலஸ் பூரண்: 

 

 

இதற்கிடையே, நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர், தனது டுவிட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி முற்றிலும் நம்பமுடியாத வெற்றி!. நான் ஒரு தசாப்தமாக சஞ்சு சாம்சனை அறிந்திருக்கிறேன். 14 வயதில் சஞ்சுவிடம் சொன்னேன். அவர் ஒரு நாள் அடுத்த எம்.எஸ். தோனியாக இருப்பார் என்று. அந்த நாள் இதோ. இந்த ஐ.பி.எல்லில் அவரது இரண்டு அற்புதமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, உலகத்தரம் வாய்ந்த வீரர் வந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று பாராட்டி பதிவிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2020 nicholas poorans gravity defying catch

Next Story
ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com