“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா..” – தல தோனியை பாசத்துடன் வரவேற்ற ரெய்னா (வீடியோ)

அப்புறம் என்ன தோனி வந்தாச்சு… பயிற்சியை தொடங்கியாச்சு… இனி, தினம் சேப்பாக் ஸ்டேடியம், மனித குரல்களின் ஆக்ரோஷத்தால் ஆடிப் போவது உறுதி. சும்மாவே ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளக்கும்; இதுல அவரு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் பக்கமே திரும்பாமல் இருந்து மீண்டும் கிரீசுக்கு வந்திருக்காப்ள. அப்போ ரசிகர்களின் விசில் சப்தம் கர்ஜனை என்று தான் அடையாளப்படுத்த வேண்டும். சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி – பறக்கவிட்ட இரு ‘கான்ஃபிடன்ட்’ சிக்ஸர்கள் (வீடியோ) இனி அடுத்த 2 […]

ipl 2020 raina welcomes dhoni video
ipl 2020 raina welcomes dhoni video

அப்புறம் என்ன தோனி வந்தாச்சு… பயிற்சியை தொடங்கியாச்சு… இனி, தினம் சேப்பாக் ஸ்டேடியம், மனித குரல்களின் ஆக்ரோஷத்தால் ஆடிப் போவது உறுதி. சும்மாவே ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளக்கும்; இதுல அவரு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் பக்கமே திரும்பாமல் இருந்து மீண்டும் கிரீசுக்கு வந்திருக்காப்ள. அப்போ ரசிகர்களின் விசில் சப்தம் கர்ஜனை என்று தான் அடையாளப்படுத்த வேண்டும்.

சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி – பறக்கவிட்ட இரு ‘கான்ஃபிடன்ட்’ சிக்ஸர்கள் (வீடியோ)

இனி அடுத்த 2 மாதத்துக்கு தோனிக்கு சென்னை வாசம் தான். ஆனா ஒன்னு.. கப்பு ஜெயிக்குறதுக்காக சிஎஸ்கேவுக்கு சப்போர்ட் பண்றாங்களோ இல்லையோ, தோனி எனும் ஒரு நபரை பார்ப்பதற்கே ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அவரு இல்லாத சிஎஸ்கே டீமையே வேண்டாம்-னு சொல்லிடுவாங்க போல…

சரி விஷயத்துக்கு வருவோம்….

சென்னையில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு தல தோனி வந்து சேர்ந்த போது, குட்டி தல ரெய்னா அவரை ஆரத்தழுவி வரவேற்பது போன்ற வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதுவும், இந்த வீடியோவை “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” எ ஃப்லிம் பை விக்ரமன் சார் என்ற கேப்ஷனுடன் சிஎஸ்கே பதிவிட்டுள்ளது.

தல….. வா தல… வா தல…. இந்த வாட்டி வட்டியோடு திருப்பிக் கொடு தல….!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2020 raina welcomes dhoni video

Next Story
சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி – பறக்கவிட்ட இரு ‘கான்ஃபிடன்ட்’ சிக்ஸர்கள் (வீடியோ)ipl 2020 csk dhoni chepauk warm up video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com