காய்ந்துப் போயிருந்த ரசிகர்களுக்கு தித்திப்பான நிகழ்வாய் மையம் கொண்டுள்ள ஐபிஎல் 2020 சீசன் செப்.19ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணிகளும் துபாய் சென்றிருக்கும் நிலையில், வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா சோதனை முடிந்து, அனைவருக்கும் நெகட்டிவ் ;என்று வந்தால் மட்டுமே, தொடர் தொடங்கும். அதன்பின், போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வீரர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அதனால் ஒட்டுமொத்த தொடர் கூட ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.
ஆகையால், அனைத்து அணியின் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் என அனைவரும் தங்கள் குலதெய்வங்களை ஏற்கனவே கிலோ கணக்கில் பரிகாரங்களை வேண்டிக் கொண்டு தொடர் முழுமையாக முடிய காத்திருக்கின்றனர்.
ஹலோ துபாய்யா? – கடல் கடந்தும் கடை விரித்த அஷ்வின் (வீடியோ)
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி வீரர்கள் இடையே டீம் மீட் நடைபெற்றிருக்கிறது. அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
மீட்டிங்கில் பேசிய கேப்டன் கோலி, 'எனக்கு இது புது அனுபவமாக உள்ளது. மீட்டிங்கில் 38 பேர் பங்கு பெற்றுள்ளீர்களா? அடேங்கப்பா! நான் அனைவரையும் பார்க்க விரும்புகிறேன்' என்று ஒவ்வொருவராக கோலி ஸ்க்ரோல் செய்து பார்க்க, டி வில்லியர்ஸ், சாஹல் என வரிசையாக அனைவரும் தெரிந்தனர். இதில், என்ன நினைத்தாரோ என்னவோ, சாஹலை பார்த்தவுடன் கோலி சிரித்துவிட்டார்.
தொடர்ந்து பேசிய கோலி, வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு நெறிமுறைகளை மிகக் கடுமையாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நம்மில் ஒருவர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த தொடரே பாதிக்கப்படலாம். அதை எவரும் விரும்பமாட்டார்கள் என்றார்.
குவாரன்டைன் எனக்கு தான்; என் உடம்புக்கு இல்ல – பயிற்சி தொடங்கிய ஜடேஜா (வீடியோஸ்)
மேலும், நமது முதல் பயிற்சி செஷனுக்கு என்னால் காத்திருக்க முடியவில்லை. அதை நாம் கொண்டாடப் போகிறோம். முதல் நாளில் இருந்தே சிறப்பான அணிக்கட்டமைப்பை உருவாக்க அது வாய்ப்பாக அமையும்.
அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் அனைவரும் அணியில் சமம் என்பதையும், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர வைப்பதும் எனது கடமையாகும்" என்று தெரிவித்தார்.
இதில், எத்தனை பேர் மியூட் போட்டுட்டு, கடலை சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்களோ!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil