ஐபிஎல் போட்டிகள்: பார்முக்கு வந்த விராட், முதலிடத்தை தக்கவைத்த டெல்லி

டெல்லி அணி தற்போது 6 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.      

நேற்றைய ஐ பி எல் கிரிக்கெட்டில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

பெங்களுரு vs ராஜஸ்தான் :

அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு  நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களுரு அணி ராஜஸ்தான் அணியை  எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூர் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களும், படிக்கல் 63 ரன்களும் எடுத்தனர்.

யுஸ்வேந்திர சாஹல்  (4 ஓவரில் 24 ரன் 3 விக்கெட் )  ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம், 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணி தரவரிசைப் பட்டியலில் இரண்டவாது இடத்தை பிடித்தது.

 

 

டெல்லி – கொல்கத்தா :  சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு  நடைபெற்ற போட்டியில் தில்லி அணி – கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா, டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தது. டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது.  அணியில் அதிகபட்சகாக சிரேயாஸ் சந்தோஷ் ஐயர் 88 ரன்களும், பிரிதிவ் ஷா 66 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து, களமிறங்கிய  கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு, 210 ரன் மட்டுமே அடித்தது. 18 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில், இயான் மோர்கன் (44 ), ராகுல் த்ரிபாட்டி (36) , நிதீஷ் ராணா (58) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

சிரேயாஸ் சந்தோஷ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி அணி தற்போது 6 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2020 rcb vs rr dc vs kkr ipl points table indian premier league 2020

Next Story
சிஎஸ்கே தொடர்ந்து 3-வது தோல்விIPL 2020, CSK vs SRH, CSK hatric defeat
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express