தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஐபிஎல் 2020 தொடர் தொடங்கினால், தொடரின் ஆரம்பத்தில் அரங்கத்திற்குள் ரசிகர்கள்அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஸ்டுடியோக்களில் ஆறு அடி இடைவெளியில் வர்ணனையாளர்கள் உட்கார வேண்டும், டக் அவுட்டில் குறைவான நபர்கள் இருக்கவே அனுமதி, வீரர்கள் அறையில் 15 க்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கக் கூடாது, போட்டிக்கு பிறகான பரிசு வழங்கும் நிகழ்வில் தனி நபர் இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுதல், மற்றும் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும், இரண்டு வாரங்களில் நான்கு கோவிட் சோதனைகள் ஆகிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் டி 20 போட்டிகளுக்கான ஐபிஎல் உரிமையாளர்களுக்கு விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியம் தயாரித்த Standard Operating Procedure (எஸ்ஓபி) இல் உள்ள சில முக்கிய விதிமுறைகள் இவை.
ஐபிஎல் -13 ஐ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த, அரசாங்கத்தின் ஒப்புதல்பெற வேண்டியுள்ளது என்றாலும், பிசிசிஐயின் கோரிக்கையைப் பெற்ற பின்னர் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த நிகழ்வை நடத்துவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மற்ற அணிகளால் நெருங்க முடியாத சிஎஸ்கேவின் வெற்றிப் பயணம் – ஓர் பார்வை
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், இது களத்தில் உள்ள வீரர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனைவிகள் மற்றும் தோழிகள் (WAG கள்) மற்றும் உரிமையாளர் கூட “bio-bubble” விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
“அவர்கள் bio-bubbleல் இருந்தால், அதை யாரும் உடைத்து மீண்டும் சேர முடியாது” என்று அந்த அதிகாரி கூறினார்.
“WAG க்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீரர்களுடன் பயணிக்க முடியுமா என்பதை பிசிசிஐ தீர்மானிக்காது, நாங்கள் அதை உரிமையாளர்களிடம் விட்டுவிட்டோம். ஆனால் நாங்கள் ஒரு நெறிமுறையை வெளியிட்டுள்ளோம், அதில் எல்லோரும், பஸ் டிரைவர்கள்உட்பட bio-bubbleஐ விட்டு வெளியேற முடியாது,” என்று அந்த அதிகாரி கூறினார். “அடுத்த வாரம் நாங்கள் அவர்களை சந்தித்தவுடன் SOP உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்களிடம் ஏதேனும் குறைகள் இருந்தால், அவர்கள் மீண்டும் குழுவிற்கு வரலாம், நாங்கள் அதைப் பற்றி விவாதிப்போம். ”
ஒவ்வொரு வீரரும் போட்டியின் தொடக்கத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் நான்கு கோவிட் சோதனைகளுக்கு உட்படுவார்கள் என்றும் எஸ்ஓபி கூறுகிறது. புறப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் இரண்டு சோதனைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனிமைப்படுத்தலின் போது இரண்டு சோதனைகள் நடைபெறும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின் படி SOP தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தனித்தனியாக ஐபிஎல் அணிகளில் சேர்ந்துள்ளனர், ஆனால் இதுபோன்ற தளர்வு எதுவும் இந்த முறை அனுமதிக்கப்படாது. அவர்கள் தங்கள் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் bio-bubbleல் நுழைய வேண்டும்.
பெரும்பாலான உரிமையாளர்கள் 20 வீரர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்டுள்ளனர், கணிசமான support ஊழியர்கள் உள்ளனர். SOP இன் சில முக்கிய வழிகாட்டுதல்கள் தங்குமிடத்தைப் பற்றியது. ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டவுடன் அவற்றை மாற்ற அணிகள் அனுமதிக்கப்படாது.
உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஓர் இந்தியர் – ஹீ ஈஸ் ஜடேஜா
முன்பதிவுகளின் போது தள்ளுபடிகள் பெற வாரியம் உதவும் என்றாலும், பி.சி.சி.ஐ ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஹோட்டல் ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஹோட்டல்கள், ஆடை அறைகள் மற்றும் பிற நியமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் இல்லாத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ SOPs-ஐ ஒளிபரப்பாளர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்..
கோவிட் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைவு என்பதால், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் முதல் ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த அதிகாரி கூறினார். ஆனால் பி.சி.சி.ஐ எந்த வாய்ப்பையும் எடுக்கவில்லை. “நாங்கள்ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தொடரின் தொடக்கத்தில், ரசிகர்களின்றி போட்டி நடைபெறும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
Gulf News செய்தியின்படி, ஐக்கிய அரபு அமீரகம் புதன்கிழமை 375 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 59,921 ஆக உள்ளது, 53,202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Ipl 2020 regulations no fans 4 tests in two weeks for players
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி