அல்ரெடி டிரெண்டிங்கில் #CSKvsMI - இதோ வந்தாச்சு ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்வுப் பூர்வமாக இத்தொடர் அமையும் என்பதில் சந்தேகமில்லை

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்வுப் பூர்வமாக இத்தொடர் அமையும் என்பதில் சந்தேகமில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2020, tamil nadu news today live

IPL 2020, tamil nadu news today live

கிரிக்கெட் ரசிகர்களின் முக்கியமான திருவிழா ஐபிஎல் என்றால் மிகையாகாது. மொட்டை அடித்து, அலகு குத்தி, தீ மிதிக்காதது மட்டும் தான் மிச்சம். 'அவ்வளவு வெறித்தனம் மாப்ளைக்கு' என்பது போல், ஒவ்வொரு அணி ரசிகர்களும் மோதிக் கொள்வார்கள்.

Advertisment

குறிப்பாக, சென்னை - மும்பை மோதல் என்றால் குழாயாடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்.

publive-image

எல்லாவற்றையும் தாண்டி, 'தல' தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மீண்டும் களத்துக்கு திரும்ப உள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. அதேபோல், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்வுப் பூர்வமாக இத்தொடர் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில் 2020 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

இதில், சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

சிஎஸ்கே போட்டிகள் விவரம்:

மார்ச் 29 - சென்னை vs மும்பை (மும்பை)

ஏப்ரல் 2 - சென்னை vs ராஜஸ்தான்

ஏப்ரல் 6 - சென்னை vs கொல்கத்தா (கொல்கத்தா)

ஏப்ரல் 11 - சென்னை vs பஞ்சாப்

ஏப்ரல் 13 - சென்னை vs டெல்லி (டெல்லி)

ஏப்ரல் 17 - சென்னை vs பஞ்சாப் (பஞ்சாப்)

ஏப்ரல் 19 - சென்னை vs ஹைதராபாத்

ஏப்ரல் 24 - சென்னை vs மும்பை

ஏப்ரல் 27 - சென்னை vs பெங்களூரு

ஏப்ரல் 30 - சென்னை vs ஹைதராபாத் (ஹைதராபாத்)

மே 4 - சென்னை vs ராஜஸ்தான் (ராஜஸ்தான்)

மே 7 - சென்னை vs கொல்கத்தா

மே 10 - சென்னை vs டெல்லி

மே 14 - சென்னை vs பெங்களூரு (பெங்களூரு)

எடுறா ஆட்டோவ!! போட்றா #CSKvsMI ஹேஷ் டேக்க!!!

Chennai Super Kings

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: