ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம் - நிர்வாகக் குழு தலைவர் தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம் - நிர்வாகக் குழு தலைவர் தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவிட்-19 தொற்றுநோயால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி 20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைக்க ஐ.சி.சி திங்கள் கிழமை முடிவு எடுத்தது. இதனால், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது சாத்தியமாகி உள்ளது.

“ஐபிஎல் நிர்வாகக் குழு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் கூடும். மேலும் அனைத்து முடிவுகளும் (இறுதி அட்டவணை உட்பட) அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இப்போதைக்கு, 60 ஆட்டங்களை உள்ளடக்கிய முழு அளவிலான ஐ.பி.எல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும் என்பதுதான் திட்டம்” என்று ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

publive-image

தற்போதைய சூழ்நிலையில் நிகழ்வை நடத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, பதில் அளித்த படேல் “போட்டிகள் ஒரு பக்கம் செயல்படும். கூட்டம் இல்லாமல் போட்டி வெளியே நடந்தாலும் உள்ளே நடந்தாலும் பிரச்னை இல்லை” என்று கூறினார்.

Advertisment
Advertisements

ஐசிசி அறிவிப்பதற்கு முன்பே, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஏற்கனவே தங்கள் திட்டங்களில் செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு மைதானம் கிடைக்காததால், அணிகளுக்கு போட்டியைத் தயார் செய்ய குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும்.

வெளிநாட்டு வீரர்கள் அந்தந்த நாடுகளிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவார்கள்.

“எங்கள் வீரர்களுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்கள் பயிற்சி தேவைப்படும், இல்லாவிட்டால். பி.சி.சி.ஐ தேதிகளை அறிவித்தவுடன் எங்களுடைய எல்லா திட்டங்களையும் இறுதி செய்வோம். ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் என்று தெரிகிறது, அதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ஒரு அணியின் உரிமையாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்-க்குப் பிறகு இந்தியா நான்கு டெஸ்ட் தொடர்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒரு முக்கியமான விஷயமாகும்.

ஐ.பி.எல்.இல் இல்லாத சேதேஸ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி போன்ற டெஸ்ட் வல்லுநர்கள், ஐ.பி.எல். காலத்தில் அகமதாபாத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மோட்டேரா ஸ்டேடியத்தில் பாதுகாப்பான சூழலில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தொடருக்கு பயிற்சி அளிக்க வாய்ப்புள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Uae Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: