Shamik Chakrabarty
ipl 2020 sponsors : இந்திய- சீனா எல்லை தகராறு காரணமாக, வரும் ஐபிஎல் தொடரில் பங்குப்பெற்றுள்ள சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் குறித்து அடுத்த வாரம், மறுஆய்வு செய்யப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து எதிர்ப்புகள் மேலூங்கி உள்ளன.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களாக சீன நிறுவனம் விவோ நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சர்’ உரிமத்தை சீன அலைபேசி நிறுவனமான விவோ நிறுவனம் ரூ. 2,199 கோடிக்கு வரும் 2022 வரை பெற்றுள்ளது.இந்நிறுவனம் பிசிசிஐக்கு வருடத்துக்கு ரூ.400 கோடி வழங்கி வருகிறது.
இதுவரை இந்த ஸ்பான்சர்ஷிப் டீலிங்கில் எந்தவித பிரச்சனையும் எழும்பாத நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்தனர். இதனால்,சீன பொருட்களை இந்தியாவில் புறகணிக்க வேண்டும் என குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு: தேர்வில்லாமல் பாஸ்!
இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால், நேற்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ரசிகர்கள் பலர் புரியாமல் பேசுவது போல இருக்கிறது. ஒரு சீன நிறுவனத்திடம் இருந்து ஸ்பான்சர் பெறுவதற்கும், சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும் போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடம் இருந்து பெறும் பணத்தில் ஒரு பங்கை பி.சி.சி.ஐ.-க்கு செலுத்துகிறார்கள்.
இதுதவிர அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு பி.சி.சி.ஐ. 42 சதவீத வரி செலுத்துகிறது. எனவே இது இந்தியாவுக்கான ஆதரவு மட்டுமே. சீனாவிற்க்கு அல்ல. ஒருவேளை நாங்கள், சீன நிறுவனத்திற்கு கிரிக்கெட் மைதானம் கட்ட ஒப்பந்தம் கொடுத்தால் அது சீன பொருளாதாரத்திற்கு உதவுவதாக அர்த்தம். எனவே இந்நிறுவனத்துடனான ஸ்பான்சர் ஒப்பந்தம் தொடரும்.” என்றார்.
இதற்கு சமூகவலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்தியாவின் வடக்கு அண்டை நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரலும் சேர்ந்து ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிலையில், இந்திய- சீனா எல்லை தகராறு காரணமாக, வரும் ஐபிஎல் தொடரில் பங்குப்பெற்றுள்ள சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் குறித்து அடுத்த வாரம், மறுஆய்வு செய்யப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுக் குறித்து ஐபிஎல் நிர்வாகம் பதிவிட்டுள்ள ட்விட்டில், “ நமது துணிச்சலான ஜவான்களின் தியாகத்தின் விளைவாக ஏற்பட்ட எல்லை சண்டையை கவனத்தில் கொண்டு, ஐபிஎல் நிர்வாக சபை அடுத்த வாரம் ஐபிஎல்லின் பல்வேறு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது. இறுதியில் இந்திய நாட்டின் கொடியையும் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்ஷிப்கள்:
*சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்.
* பணம் செலுத்தும் நிறுவனமான Paytm, சீன நிறுவனமான அலிபாபாவிடம் முதலீடு செய்துள்ளது.
* ஐபிஎல்லின் ஆன்லைன் லீக் பாட்னரான ட்ரீம் 11 மற்றும் லீக்கின் இணை ஸ்பான்சரான ஸ்விக்கி ஆகியோர் சீன இணைய நிறுவனமான டென்செண்டுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”