scorecardresearch

CSK VS MI Live Streaming: ஐபிஎல் 2020 ‘லைவ்’; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது?

IPL 2020 tamil news: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இந்த ஆட்டத்தின் அப்டேட்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது.

CSK VS MI Live Streaming: ஐபிஎல் 2020 ‘லைவ்’; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது?

CSK VS MI Live Streaming:: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்துடன் ஐபிஎல் 2020 சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை எப்போது, எங்கே ‘லைவ்’வில் பார்ப்பது? என்கிற விவரங்களை இந்தச் செய்தியில் காணலாம்.

ஐபிஎல் வரலாற்றில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் சீசன் இது. இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (சி எஸ் கே) மோதுகின்றன.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகள் என்ற அடிப்படையில் தொடக்க ஆட்டத்தில் இந்த அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுமே வெற்றிகரமான அணிகள் ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 என 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ருசித்திருக்கிறது. சென்னை அணி 2011, 2012, 2018 என 3 முறை டோனி தலைமையில் சாம்பியன் ஆகியிருக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் குயிண்டன் டீ காக், ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆகிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். எனினும் ரோகித் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் பட்சத்தில் இவர்கள் இருவரில் யாருக்கு? என்கிற கேள்வி எழும். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய குயிண்டன் டீ காக்-கிற்கே அதிக வாய்ப்பு!

குறுகிய வடிவ போட்டிகளில் உலகின் சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா, மும்பை அணிக்கு பெரும் பலம்! யார்க்கர் மன்னன் மலிங்கா இல்லாதது சற்றே பலவீனம். எனினும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வருகை மும்பைக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

4 முறை கோப்பையை வென்றிருந்தாலும், அடுத்தடுத்து இரு ஆண்டுகள் ஒருபோதும் மும்பை அணி கோப்பையை வென்றதில்லை. இந்த செண்டிமெண்டை உடைக்க இந்த முறை அந்த அணி போராடும்.

சென்னை அணி சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் என இரு நட்சத்திரங்களை இழந்துவிட்டு களத்திற்கு வருகிறது. முழுக்க டோனியின் கேப்டன்சியை நம்பி சென்னை நிற்கிறது. வாட்சன், டுபிளிசிஸ், ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் நட்சத்திரங்களாக தென்படுகிறார்கள். டோனியின் கேப்டன்ஷிப்பும், கூட்டு முயற்சியுமே சென்னையின் பலமாக இருக்கும்.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் கோப்பையை தவறவிட்ட சென்னை, இந்த ஆட்டத்தில் அதற்கு பழி வாங்கலாம். முதல் ஆட்டத்தில் கிடைக்கும் வெற்றி, ஒரு நல்ல உத்வேகத்தை உருவாக்கும். எந்த அணி அந்த உத்வேகத்தை பெறப்போகிறது? என்பதை பார்க்கலாம்.

CSK VS MI Live Streaming: எங்கே, எப்போது?

வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

நேரலை பார்ப்பது எப்படி?

இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமச் சானல்களில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம். தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் லைவ் ஸ்டீரிமிங் காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இந்த ஆட்டத்தின் அப்டேட்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2020 tamil news csk vs mi live streaming csk vs mi live score card