ஐ.பி.எல் போட்டி அட்டவணை வெளியீடு!

ipl 2020 uae Match Schedule: குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதி போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

ipl 2020 uae Match Schedule: குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதி போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

author-image
WebDesk
New Update
ஐ.பி.எல் போட்டி அட்டவணை வெளியீடு!

ஐ.பி.எல் போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதி லீக் போட்டியில் நவம்பர் 3ம் தேதியன்று ஹைதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதி போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

போட்டி அட்டவணை: 

 

Advertisment
Advertisements

 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்களின் விவரம்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா (இந்த ஆண்டு பங்கேற்க வில்லை ) , கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, டுவைன் பிராவோ, சாம் சாம் கர்ரன், கரன் சர்மா, ஷேன் வாட்சன், ஷர்துல் தாகூர், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் (பங்கேற்க வில்லை), முரளி விஜய், ஜோஷ் ஹசில்வுட்,  இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி, மிட்செல் சான்ட்னர், கே.எம். ஆசிப், நாராயண் ஜெகதீசன், மோனு குமார், ருதுராஜ் கெய்க்வாட், ஆர்.சாய் கிஷோர்

 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதும் போட்டிகள்: 

19-ம் தேதி : சென்னை அணி vs மும்பை அணி

22-ம் தேதி : சென்னை அணி  vs  ராஜஸ்தான் அணி

25-ம் தேதி: சென்னை அணி  vs டெல்லி அணி

அக்டோபர் 2-ம் தேதி : சென்னை அணி  vs  ஹைதராபாத் அணி

அக்டோபர் 4-ம் தேதி  : சென்னை அணி  vs பஞ்சாப் அணி

அக்டோபர் 7-ம் தேதி : சென்னை அணி  vs கொல்கத்தா அணி

அக்டோபர் 10 -ம் தேதி : சென்னை அணி  vs பெங்களுர் அணி

அக்டோபர் 13-ம் தேதி : சென்னை அணி  vs ஹைதராபாத் அணி

அக்டோபர் 17- ம் தேதி : சென்னை அணி  vs டெல்லி அணி

அக்டோபர் 19-ம் தேதி : சென்னை அணி  vs ராஜஸ்தான் அணி

அக்டோபர் 23-ம் தேதி : சென்னை அணி  vs மும்பை அணி

அக்டோபர் 25-ம் தேதி : சென்னை அணி  vs பெங்களூர் அணி

அக்டோபர் 29-ம் தேதி : சென்னை அணி  vs கொல்கத்தா அணி

நவமபர் 1-ம் தேதி : சென்னை அணி  vs பஞ்சாப் அணி

இந்த ஆண்டு போட்டி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. முன்பு பிற்பகல் போட்டிகள் மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இரவு விளையாட்டு இரவு 8 மணிக்கு தொடங்கும். இந்த சீசனில் 10 பிற்பகல் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும், இரவு விளையாட்டுக்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

பி.சி.சி.ஐ தனது டிக்கெட் விற்பனையை அதிகரிக்க இரவு 8 மணிக்கு போட்டியை நடத்தியது. இருப்பினும், இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெறுவதால், ஒளிபரப்பாளர்களுக்கு இரவு 7:30 மணியே பிரைம் டைம் என்பதால் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mahendra Singh Dhoni Ipl Ipl Cricket Csk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: