Advertisment

ஐபிஎல் 2021-ல் டோனி : காத்திருக்கும் இத்தனை சாதனைகள்

Chennai Super Kings captan M S DHONI’S Full list of records in ipl Tamil News: ஐ.பி.எல் 2021ல் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி பதிவு செய்யவுள்ள சாதனைகளின் விபரங்களை இங்கு காண்போம்.

author-image
WebDesk
New Update
ஐபிஎல் 2021-ல் டோனி : காத்திருக்கும் இத்தனை சாதனைகள்

Ipl 2021 cricket Tamil News: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் 9ம் தேதி முதல் துவங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 10ம் தேதி நடக்கும் 2வது போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நீடித்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல் தொடர்களில் இதுவரை என்னென்னெ சாதனைகள் செய்துள்ளார் என்பதையும், இந்தாண்டு நடக்கவுள்ள தொடரில் என்னென்னெ சாதனைகளை படைக்க உள்ளார் என்பதையும் இங்கு சுருக்கமாக காணலாம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஒரு சிறந்த வீராகவும், ஐ.பி.எல் கேப்டன்களில் மிக வெற்றிகரமான ஒரு கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் ஐ.பி.எல் தொடர் வரலாற்றிலே கடந்த ஆண்டு நடந்த தொடரில் தான் சி.எஸ்.கே அணி மிக மோசமான விளையாடியது. மேலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக கடுமையாக போராடியது. மறுபுறம், தோனி 14 போட்டிகளில் சராசரியாக 25 ரன்களிலும், 116.27 ஸ்ட்ரைக் வீதத்திலும் 200 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஐபிஎல்லில் விளையாடிய 13 ஆண்டுகளில் ரன்கள் மற்றும் சராசரியைப் பொறுத்தவரை அவரது மோசமான நிலை இதுவாகும். அதே போல் அவரின் வொர்க்லோடு வீதத்தைப் பொறுத்தவரை, இது 2017 க்குப் பிறகு அவரது இரண்டாவது மோசமான செயல்திறன் ஆகும்.

இது குறித்து விளையாட்டு செய்தியாளர் டேனி மோரிசன் கேப்டன் தோனியிடம், 'இந்த தொடர் தான் சி.எஸ்.கே அணியின் இறுதி தொடரா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி ‘நிச்சயமாக இல்லை’ என்று கூறினார்.

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் தோனிக்கு ஆதரவாக சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, கடந்த ஆண்டு தொடரில் அவர் விளையாடிய போது 14 மாதங்கள் கொண்ட நீண்ட இடைவெளி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே அவருடைய பாமிர்க்கு எளிதில் திரும்புவார் என நம்பலாம்.

இரண்டாவதாக, தோனி அதிக ஸ்திரத்தன்மை மற்றும் ஒரு சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணியைக் கொண்டுள்ளார். இது அவரை அழுத்தம் இல்லாத கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கும்.

ஐ.பி.எல் தொடரில் எம்.எஸ் தோனியின் இதுவரையான சாதனைகள்

எம்.எஸ். தோனி 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், இது ஒரு வீரர் விளையாடிய அதிகபட்ச போட்டிகளாகும்.

எம்.எஸ். தோனி ஆர்.சி.பி.க்கு எதிராக 832 ரன்கள் எடுத்துள்ளார், இது ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக ஒரு வீரர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடர்களில் இதுவரை 209 சிக்ஸர்களை அடித்துள்ளார். எனவே அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திலும், ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளார்.

ஐ.பி.எல். தொடர்களில் தன்னுடைய பெயரில் 100 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் எம்.எஸ். தோனி ஆவார்.

எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே அணியை 6 ஏப்ரல் 2013 முதல் 2019 ஏப்ரல் 14 வரை தொடர்ச்சியாக 85 போட்டிகளுக்கு வழிநடத்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடர்களில் டெத் ஓவர்களில் (17-20) அதிக (141) சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் எம்.எஸ்.தோனி ஆவார்.

2021 ஐபிஎல் தொடரில் தோனி பதிவு செய்யவுள்ள சாதனைகள்

ஐ.பி.எல் தொடர்களில் 150 விக்கெட்களை எடுத்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற, எம்.எஸ் தோனிக்கு இன்னும் இரண்டு ஆட்டமிழப்புகள் தேவை.

179 ரன்கள்: இந்த சீசனில் எம்.எஸ் தோனி 179 ரன்கள் எடுத்தால், அவர் 7000 டி- 20 ரன்களை முடிப்பார். மேலும் எம்.எஸ் தோனி இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால், சி.எஸ்.கே அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Chennai Super Kings Ipl Ipl Cricket Ipl News Ms Dhoni Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment