Ipl 2021 cricket Tamil News: ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. இதையடுத்து தொடருக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்று நடந்த வலைப்பயிற்சியின் போது இந்திய வீரர் சேடேஷ்வர் புஜாரா சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகள் மட்டும் விளையாட தேர்வு செய்யப்படும் சேடேஷ்வர் புஜாரா, இந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். புஜாராவை சிஎஸ்கே அணி வாங்கியதற்காக மற்ற அணிகளின் உரிமையாளர் கைகளைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
புஜாரா ஐபிஎல் தொடரர்களில் பெரிதும் சோபிக்காததால், அவர் 2014ம் ஆண்டு நடந்த போட்டிக்கு பிறகு பங்கேற்கவில்லை. தற்போது மீண்டும் ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார். இன்று நடந்த வலை பயிற்சில் சிக்க்ஸர்களை பறக்கவிட்ட புஜாரா, 20 ஓவர் போட்டிகளில் தன்னை நிரூபிக்க இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா எனபதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Puji was on fire 🔥@cheteshwar1 #csk pic.twitter.com/CNbPXi786q
— Ravi Desai 🇮🇳 Champion CSK 💛🏆 (@its_DRP) March 30, 2021
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி, 'டெஸ்ட் போட்டிகளில் அவர் படைத்த சாதனைகளுக்கு கவுரப்படுத்தவே புஜாராவை ஐபிஎல் தொடரருக்கான சென்னை அணியில் தேர்வு செய்தோம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "சமீபத்திய போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளும் இந்திய அணிக்காக அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அவர் இதுபோன்ற ஒரு மரியாதைக்கு தகுதியானவர். ஒரு வீரர் தனது வியர்வையையும் இரத்தத்தையும் நாட்டிற்குக் கொடுப்பதாக நான் உண்மையாக உணர்கிறேன். நான் அவருக்காக உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்”என்று பாலாஜி கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.