‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்

Pakistan pacer Shoaib Akhtar about IPL 2021 Postponement Tamil News: ஐ.பி.எல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் “மனித உயிர்களைக் காப்பாற்றுவதை விட முக்கியமானது எதுவுமில்லை” என்று கூறியுள்ளார்.

IPL 2021 CRICKET Tamil News: “Nothing More Important Than Saving Lives" says Pakistan pacer Shoaib Akhtar 

IPL 2021 CRICKET Tamil News: ஐ.பி.எல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று செவ்வாய் கிழமையன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்கள் லட்சுமிபதி பாலாஜி, மைக் ஹஸ்ஸி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வீரர் ஒருவர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் போன்றோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடரில் கலந்து கொண்ட மேலும் சில வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினர் சிலருக்கும் ஏற்கவே தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். எனவே இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் தொடரை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால், தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ அறிவித்தது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த சோதனை காலங்களில் மனித உயிர்களை காப்பாற்றுவதை விட வேறு எதுவும் முக்கியமில்லை’ என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், ஐ.பி.எல் தொடர் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக தனது சமீபத்திய யூடூப் வீடியோவில் வெளிப்படுத்தி இருந்தார்.

“ஐபிஎல் ரத்து செய்யப்படுவது குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பரிந்துரைத்தேன். இந்தியாவில் தற்போதைய கடுமையான நெருக்கடியின் போது மனித உயிர்களைக் காப்பாற்றுவதை விட முக்கியமானது எதுவுமில்லை” என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் 56 லீக் போட்டிகளில் இதுவரை 29 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 cricket tamil news nothing more important than saving lives says pakistan pacer shoaib akhtar

Next Story
வீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்துIPL 2021 Updates: BCCI cancelled IPL 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com