IPL 2021 CRICKET Tamil News: இந்தியாவில் அதிகரித்தும் வரும் கொரோனா தொற்றால், இந்திய பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கடந்த செவ்வாய்யன்று பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கி உதவும் பணியைத் தொடங்கியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயக்கம் வழியாக உதவுள்ளதாகவும், கொரோனவை எதிர்த்து போராட நிதி திரட்ட உள்ளதாகவும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி தங்களின் வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தனர்.
கொரோனவை எதிர்த்து போராட நிதி திரட்டும் இந்த முயற்சிக்கு நடிகை அனுஷ்கா ஷர்மா ரூ.2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் மேலும் 7 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
As our country battles the second wave of Covid-19, and our healthcare systems are facing extreme challenges, it breaks my heart to see our people suffering.
So, Virat and I have initiated a campaign #InThisTogether, with Ketto, to raise funds for Covid-19 relief. pic.twitter.com/q71BR7VtKc— Anushka Sharma (@AnushkaSharma) May 7, 2021
This is our chance to help. To support. To extend ourselves and do our bit. So, let’s do everything we can. We are #InThisTogether https://t.co/XTuqyHsJi4#ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@actgrants @ketto pic.twitter.com/lhr5Vy1iZh
— Anushka Sharma (@AnushkaSharma) May 7, 2021
இந்த நிலையில், சிவசேனாவின் இளைஞர் பிரிவான யுவசேன உறுப்பினரான ராகுல் என் கனல் என்பவர் கேப்டன் கோலியை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"கொரோனா நிவாரணத்திற்காக அவர் துவங்கியுள்ள இந்த இயக்கம் மிகவும் மதிக்க தக்கது. அவரை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவருடை இந்த முயற்சிக்கு என்னுடை பாராட்டுகளும், பிராத்தனைகளும்" என்று பதிவிட்டுள்ளார்.
Meeting our Captain...Respect and love for the movement he has started working on for COVID relief... No words just Respect and Prayers for all his efforts !!! @imVkohli 🙏 pic.twitter.com/qZEQEKzgM7
— Rahul.N.Kanal (@Iamrahulkanal) May 5, 2021
ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொடிய வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு உதவ ஆக்ஸிஜன் ஆதரவு தொடர்பான உள்கட்டமைப்பிற்கு பங்களிக்க நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் முன்களப்பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம் ஒரு போட்டியில் நீல நிற ஜெர்சி அணியவும் அந்த அணி திட்டமிட்டிருந்தது. தொடரில் பாதியில் கைவிடப்பட்டதால் அந்த ஏற்பாடு நிறுத்தப்பட்டது.
நடந்த 7 போட்டிகளில் 2ல் மட்டும் தோல்வியை தழுவிய கேப்டன் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5ல் வெற்றியை சுவைத்திருந்தது. மேலும் வலுவான அணியாக வலம் வந்த அந்த அணி தொடரை கைப்பற்ற பெரிதும் முனைப்பு காட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.