“நாங்க திரும்பி வருவோம்”- சிஎஸ்கேவின் வீடியோவிற்கு அன்பு மழை பொழியும் ரசிகர்கள்!

Chennai Super Kings Shares Memorable Recap Video Tamil News: ஐபிஎல் தொடர்களில் 3 முறை சாம்பியன் பட்டத்தை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு நடந்த தொடரில் மறக்கமுடியாத சில தருணங்களை வீடியோ வடிவில் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

IPL 2021 cricket Tamil News: "We Will Be Back" Chennai Super Kings Share Memorable Recap Video

IPL 2021 cricket Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல் 2021) 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொண்ட சில வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பதைத் தொடர்ந்து மீதமுள்ள போட்டிகளை ஒத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா தொற்று முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த இரண்டு வீரர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் விருத்திமான் சஹா மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது.

இந்த தொடரில் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்றனர் என்ற தகவல் வெளியாகி வந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த சில வீரர்கள் மட்டும் இன்னும் தாயகம் நோக்கிய பயணத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர்களில் 3 முறை சாம்பியன் பட்டத்தை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு நடந்த தொடரில் மறக்க முடியாத சில தருணங்களை வீடியோ வடிவில் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் “நாங்க திரும்பி வருவோம்” என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ பதிவிற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் அன்பு மழையை பொழிந்து வருவதோடு, தங்களின் நெகிழ்ச்சியான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த தொடரில் பிளே- ஆஃப் சுற்றோடு வீடு திரும்பிய சென்னை அணி, இந்தாண்டுக்கான தொடரில் 10 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தில இருந்தது. மேலும் நடந்த 7 போட்டிகளில் 5ல் வெற்றியை சுவைத்திருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 cricket tamil news we will be back chennai super kings share memorable recap video

Next Story
இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இதுதான்… டிராவிட் கணிப்புCricket news in tamil: Rahul Dravid predicts 3-2 win for India in England
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express