Advertisment

IPL 2021: முதல் ஆட்டமே செம த்ரில்; மும்பையை சாய்த்த பெங்களூரு

MI VS RCB live score Tamil News: மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது

author-image
WebDesk
New Update
IPL 2021 live: ipl 2021 opening match Mumbai Indians vs rcb bengaluru live, match summery, commentary, live score

IPL 2021 live: ஐபிஎல் போட்டிகள் என்றாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த வகையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடப்பட்டு வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த போட்டிகளில் களமிறங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களின் அதிரடிக்கு ஆட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. மற்றும் அறிமுகமாகும் புது முகங்களும், பழைய முகங்களும் மைதானத்தில் வான வேடிக்கை காட்டுவார்கள்.;

Advertisment

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும் தொற்று அச்சம் நீடித்து இன்னும் வருவதால், இந்தாண்டு நடக்கவுள்ள தொடரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகள் பூட்டப்பட்ட மைதானத்திற்குள் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கவுள்ளது.

இன்று முதல் கோலாகலமாக துவங்க உள்ள ஐபிஎல் தொடரின் 14 வது சீசனில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.


  • 23:46 (IST) 09 Apr 2021
    பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

    மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது. அந்த அணியில் அதிரடியாக ஆடி இறுதி ஓவரில் ரன்-அவுட் ஆகிய ஏபி டிவில்லியர்ஸ், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை சிதறவிட்டு 48 ரன்கள் சேர்த்தார். மேலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி 33 ரன்களிலும், மேக்ஸ்வெல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய புது மாப்பிள்ளை ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் மற்றும் குருனால் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


  • 23:05 (IST) 09 Apr 2021
    பெங்களூரு அணிக்கு 18 பந்துகளில் 34 ரன்கள் தேவை!

    17 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் பெங்களூரு அணி 18 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய காட்டாயத்தில் உள்ளது


  • 22:46 (IST) 09 Apr 2021
    வலுவான நிலையில் பெங்களூரு அணி!

    160 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. மேலும் கேப்டன் கோலியோடு மறுமுனையில் களமிறங்கிய துவக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய சொற்ப ரன்னில் அவுட் ஆக, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 34 ரன்களோடு களத்தில் உள்ளார். 4 பவுண்டரிகளை ஓடவிட்டுள்ள கேப்டன் கோலி 33 ரன்களுடன் மறுமுனையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது


  • 21:27 (IST) 09 Apr 2021
    பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

    மும்பை அணியில் கிறிஸ் லின் பிறகு களமிறங்கிய, அந்த அணியின் விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிஷன் 28 ரன்னிலும், முன்னணி ஆல் - ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவ்ர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சன், மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்துள்ளது மும்பை அணி.


  • 20:52 (IST) 09 Apr 2021
    49 ரன்னில் அவுட் ஆனா லின்!

    களமிறங்கிய முதல் போட்டியிலே 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய மும்பை அணியின் கிறிஸ் லின், வாஷிங்டன் சுந்தர் வீசிய 12.5 ஓவரில் ஆண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    135/4 (16 ஓவர்களில் 135 ரன்களை சேர்த்துள்ள மும்பை அணி அதன் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரர் ஹார்டி பாண்டிய உட்பட 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது


  • 20:49 (IST) 09 Apr 2021
    49 ரன்னில் அவுட் ஆனா லின்!

    களமிறங்கிய முதல் போட்டியிலே 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய மும்பை அணியின் கிறிஸ் லின், வாஷிங்டன் சுந்தர் வீசிய 12.5 ஓவரில் ஆண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    135/4 (16 ஓவர்களில் 135 ரன்களை சேர்த்துள்ள மும்பை அணி அதன் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரர் ஹார்டி பாண்டிய உட்பட 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது


  • 20:22 (IST) 09 Apr 2021
    அதிரடி காட்டும் கிறிஸ் லின்!

    மும்பை அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் 3 சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் விளாசி 41 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார்.

    மறுமுனையில் உள்ள சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகளை ஓடவிட்டு 24 ரன்கள் சேர்த்துள்ளார். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 86 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:08 (IST) 09 Apr 2021
    முதல் சிக்ஸர்.... முதல் ரன் அவுட்... கேப்டன் ரோகித்

    2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முதல் சிக்ஸரை பதிவு செய்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அவருடன் களமிறங்கிய துவக்க வீரர் லின் ரன் எடுக்க தயங்கியதால் 19 ரன்களில் ரன் அவுட் ஆகியுள்ளார்


  • 20:06 (IST) 09 Apr 2021
    100 வது ஐபிஎல் போட்டியில் சாஹல்

    பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது 100 வது ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.


  • 19:41 (IST) 09 Apr 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் ஓவரை வீசுகிறார். பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் லின்னை இறங்கியுள்ளது.


  • 19:23 (IST) 09 Apr 2021
    களமிறங்கும் இரு அணி வீரர்களின் பட்டியல்

    மும்பை இந்தியன்ஸ் அணி

    ரோஹித் சர்மா (கேப்டன்), கிறிஸ் லின், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சன், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

    விராட் கோலி (கேப்டன்), ரஜத் பாட்டீதர், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல்


  • 19:19 (IST) 09 Apr 2021
    துவக்க வீராக களமிறங்கும் லின்!

    லின் தனது முதல் எம்ஐ தொப்பியை கேப்டன் ரோஹித்திடமிருந்து பெறுகிறார். எனவே அவர் இந்த போட்டியில் துவக்க வீராக களமிறங்குவார் என எதிர்ப்பர்கலாம். மேலும் அந்த அணியின் துவக்க வீரர் இஷான் கிஷன் 3வது வீராக களமிறங்குவார் என தெரிகிறது.


  • 19:12 (IST) 09 Apr 2021
    டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

    மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.


  • 18:49 (IST) 09 Apr 2021
    நேருக்கு நேர்

    இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக சந்தித்த 27 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 போட்டிகளையும் வென்றுள்ளன. ட்ராவில் முடிந்த ஒரு போட்டியை, சூப்பர் ஓவரில் வென்றுள்ளது பெங்களூரு அணி.


  • 18:48 (IST) 09 Apr 2021
    பெங்களூரு அணியின் பந்து வீச்சு!

    பெங்களூரு அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை, சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி போன்ற வீரர்கள் உள்ளதால், அந்த அணி பந்து வீச்சில் அசத்தும் என எதிர்பார்க்கலாம்.


  • 18:46 (IST) 09 Apr 2021
    கவனிக்கப்படும் வீரர்களாக உள்ள ஆல்-ரவுண்டர் வீரர் மேக்ஸ்வெல் மற்றும் கைல் ஜாமிசன்

    இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் வீரர் மேக்ஸ்வெல் (ரூ.14¼ கோடி) மற்றும் ஆல்-ரவுண்டர் வீரர் கைல் ஜாமிசன் (ரூ.15 கோடி) வருகை பெங்களூரு அணிக்கு கூடுதல் வலுவாக அமையலாம். மேலும் இருவரும் இந்த போட்டியில் கவனிக்கப்படவேண்டிய வீரர்களாக இருப்பார்கள்.


  • 18:23 (IST) 09 Apr 2021
    5முறை கோப்பையை வசப்படுத்திய மும்பை இந்தியன்ஸ்!

    இதுவரை 5முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த தொடரிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆகவே இன்று நடக்கவுள்ள முதல் போட்டியில் வென்று, அந்த அணிக்கு நல்ல துவக்கத்தை தர வேண்டும் என எதிர்பார்க்கும்.

    மறுபுறம் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகக்கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று நடக்கும் போட்டியை கைப்பற்றவே நினைக்கும்.


  • 17:59 (IST) 09 Apr 2021
    சொந்த மைதானத்தில் போட்டிகள் இல்லை!

    8 அணிகளுக்கிடையான லீக் போட்டிகள் சொந்த மைதானங்களில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்தாண்டு நடக்கவுள்ள போட்டிகள் அந்த அணிகளின் சொந்த மைதானங்களில் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதாங்களில் மட்டுமே நடைபெறும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தொடரின் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று அழைக்கப்படும் அகமதாபாத்தில் மே 30-ந்தேதி அன்று அரங்கேறுகிறது.


  • 17:42 (IST) 09 Apr 2021
    அதிரடி காட்ட தயாராக இருக்கும் வீரர் படை

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் 8 அணிகளும் தங்குகள் அணியில் பெரிதும் சோபிக்காத வீரர்களை விடுவித்துக்கொண்டன. மேலும் புது முகங்களையும், அனுபமிக்க வீரகளையும் தேர்வு செய்து கொண்டன. அப்படி தேர்வு செய்த வீரர்களை நன்றாக பட்டை தீட்டி வைத்துள்ளன.


  • 17:38 (IST) 09 Apr 2021
    8 அணிகள்

    இன்று முதல் கோலாகலமாக துவங்க உள்ள ஐபிஎல் தொடரின் 14 வது சீசனில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.


  • 17:37 (IST) 09 Apr 2021
    மாலை 7 மணிக்கு துவங்கும் தொடரின் முதல் போட்டி

    மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை ஹாட்ஸ்டார் ஆஃபிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலை செய்யப்படுகிறது.


Sports Cricket Ipl Live Cricket Score Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2021 Star Sports Mi Vs Rcb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment