IPL 2021 Updates: டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணிக்கு சென்னை அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. களம் கண்ட முன்னணி வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க ரன்களுடன் வெளியேறினர். அசத்தலான துவக்கம் கொடுத்த டு பிளெசிஸ் 36 ரன்களுடனும், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டிய ராயுடு 27 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
200 ரன்கள் கொண்ட இலக்கை நிர்ணயிக்க போராடிய சென்னைக்கு மிடில் - ஓவரில் சுணக்கம் ஏற்படவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்தது.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியை, தனது அசாத்திய பந்து வீச்சால் முட்டுக்கட்டை போட்டது சென்னை அணி. அந்த அணியில் துவக்க வீரர் பட்லரை தவிர களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி போராடிய திவடியா 20 ரன்களுடன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் முதல் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் வரையிலான அனைத்து ஜோடியையும், வலுவான ரன்களை சேர்க்க விடாமல் தொடர் தாக்குதலை நடத்தியது. அரைசதம் கடக்க முயன்ற பட்லரை கிளீன் போல்ட் செய்து, ஆட்டத்திற்கு திருப்பு முனை அமைத்து கொடுத்தார் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா. தொடர்ந்து கேட்ச் பிடித்தும் அசத்திய அவர், 4 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சாய்க்க உதவினார்.
துல்லியமாக பந்துகளை வீசி ராஜஸ்தான் அணியை மிரட்டிய சென்னை அணியில், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கடந்த 2 ஆண்டுகள் நடந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி, இந்த சசீசனின் முதல் போட்டியிலே பதிலடி கொடுத்துள்ளது. மேலும் 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 2ம் இடத்திற்கு தாவியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
- 23:55 (IST) 19 Apr 2021பந்து வீச்சில் மிரட்டிய சென்னைக்கு அபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், பந்து வீச்சில் மிரட்டிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
A resounding victory for @ChennaiIPL against rr by 45 runs.
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
4 fine catches and 2 wickets for @imjadeja 👏👏vivoipl pic.twitter.com/xMtP2v2elLMoeen Ali bags the Man of the Match award for his all-round performance with the bat and the ball.@ChennaiIPL win their second game of vivoipl 2021 and add 2 more points to their tally.
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
Scorecard - https://t.co/gNnQUUgwcg pic.twitter.com/EvAr0Suo8p - 22:54 (IST) 19 Apr 2021கிறிஸ் மோரிஸ் அவுட்; ரன் சேர்க்க தடுமாறும் ராஜஸ்தான்...!
189 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் மோரிஸ் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
BRB! In awe of Jaddu 😍 cskvrr whistlepodu yellove 🦁💛 @imjadeja pic.twitter.com/XMATJUVqgm
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 19, 2021 - 22:49 (IST) 19 Apr 2021பட்லர், மில்லர், டியூபே அவுட்; இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
சிறப்பாக ஆடி வந்த ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் பட்லர் 49(35) அரைசதம் கடப்பார் என நினைக்கையில் ஜடேஜாவின் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் அந்த அணியின் சிவம் டியூபே எல்பிடபிள்யூ-வில் க்ளீன் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடந்தார். தொடர்ந்து களமிறங்கிய மில்லர், மொயீன் அலி ஓவரில் ல்பிடபிள்யூ-வில் ஆட்டமிழந்தார்.
Wickets are tumbling for rr.
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
Moeen Ali picks up his first wicket and Miller departs for just 2 runs.
Live - https://t.co/vRHaGGSTjJ cskvrr vivoipl pic.twitter.com/KL3O6YWQ5w - 22:40 (IST) 19 Apr 2021பட்லர், டியூபே அவுட்; இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
சிறப்பாக ஆடி வந்த ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் பட்லர் 49(35) அரைசதம் கடப்பார் என நினைக்கையில் ஜடேஜாவின் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் அந்த அணியின் சிவம் டியூபே எல்பிடபிள்யூ-வில் க்ளீன் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடந்தார்.
- 22:07 (IST) 19 Apr 2021சஞ்சு சாம்சன் அவுட்...!
189 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி, அதன் கேப்டனும், அதிரடி வீரருமான சஞ்சு சாம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 22:00 (IST) 19 Apr 2021சென்னை அணிக்கு முதல் விக்கெட்...!
189 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி, அதன் துவக்க வீரர் மனன் வோஹ்ரா 1 சிக்ஸர் 1 பவுண்டரியை சிதறவிட்டு சாம் குர்ரான் வீசிய பந்தில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 21:35 (IST) 19 Apr 2021ராஜஸ்தானுக்கு 189 ரன்கள் இலக்கு!
கேப்டன் தோனியின் விக்கெட்டுக்கு பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சரிய விட்ட சென்னை அணிக்கு ஆறுதல் விதமாக டுவைன் பிராவோவின் சிக்ஸர் அமைந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் காண்கிறது.
- 21:08 (IST) 19 Apr 2021தோனி அவுட்; வலுவான ரன்களைச் சேர்க்குமா சென்னை!
சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டுக்கு பிறகு களம் கண்ட கேப்டன் தோனி 2 பவுண்டரிகளை ஓடவிட்டு 18(17) ரன்கள் எடுத்து சேதன் சகாரியா பந்தில் ஆட்டமிழந்தார்
- 20:45 (IST) 19 Apr 20213 கேட்ச்களை பிடித்த ரியான் பராக்; அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா அவுட்...!
நிதான ஆட்டத்தை தொடர்ந்த சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஜோடியில், 3 சிக்ஸர் அடித்து அதிரடி காட்டிய ராயுடு 27 ரன்களில் சேதன் சகரியா வீசிய பந்தில் ரியான் பராக் வசம் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மோரிஸ் வசம் கேட்ச் கொடுத்து சுரேஷ் ரெய்னா அவுட் ஆனார்
- 20:42 (IST) 19 Apr 20213 கேட்ச்களை பிடித்த ரியான் பராக்; அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா அவுட்...!
நிதான ஆட்டத்தை தொடர்ந்த சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஜோடியில், 3 சிக்ஸர் அடித்து அதிரடி காட்டிய ராயுடு 27 ரன்களில் சேதன் சகரியா வீசிய பந்தில் ரியான் பராக் வசம் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மோரிஸ் வசம் கேட்ச் கொடுத்து சுரேஷ் ரெய்னா அவுட் ஆனார்
- 20:27 (IST) 19 Apr 2021சிக்ஸர்களை பறக்க விட்ட மொயீன் அலி அவுட்; நிதான ஆட்டத்தில் சென்னை அணி!
20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்த மொயீன் அலி ராகுல் தெவதியா வீசிய பந்தில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 20:01 (IST) 19 Apr 2021டு பிளெசிஸ் அவுட்.... 45/2
சென்னை அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ( 2சிக்ஸர், 4 பவுண்டரி, 17 பந்துகள் 33 ரன்கள்) கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 19:49 (IST) 19 Apr 2021கெய்க்வாட் அவுட்...!
சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சரியான துவக்கம் கிடைக்கமால் தடுமாறி வரும் நிலையில், இன்றை ஆட்டத்தில் 10 ரன்களுடன் பெவிலியன் திருப்பியுள்ளார்.
- 19:47 (IST) 19 Apr 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்...!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ் களம் கண்டுள்ளனர்.
- 19:18 (IST) 19 Apr 2021களமிறங்கும் இரு அணி வீரர்களின் விபரம்
ராஜஸ்தான்
ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்
சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, சாம் குர்ரான், எம்.எஸ். தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சஹார்
- 19:15 (IST) 19 Apr 2021பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
- 18:03 (IST) 19 Apr 2021தீவிர பயிற்சியில் சென்னை அணி...!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றை போட்டியில் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
All hands for some skyers! 🏏cskvrr whistlepodu yellove @msdhoni pic.twitter.com/zOIjbl6dqE
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 19, 2021 - 17:58 (IST) 19 Apr 2021உத்தேச அணி விபரம் பின்வருமாறு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, சாம் குர்ரான், ஷார்துல் தாக்கூர், தீபக் சஹார்
ராஜஸ்தான் ராயல்ஸ்
மனன் வோஹ்ரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், டேவிட் மில்லர், சிவம் டியூப், ராகுல் தவதியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஸூர் ரஹ்மான், சேதன் சகரியா
- 17:56 (IST) 19 Apr 2021இரு அணி வீரர்களின் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கே.எம். ஆசிப், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ஃபாஃப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர், என் ஜகதீசன், கர்ன் சர்மா, லுங்கி என்ஜிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜுல், தாகூர், சாம் குர்ரான், ஆர் சாய் கிஷோர், மொயீன் அலி, கே க ow தம், சேதேஸ்வர் புஜ்ரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோஹ்ரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லர், ராகுல் தவாட்டியா, மஹிபால் லோமர், ஸ்ரேயாஸ் கோபால், மாயங்க் மார்க்கண்டே, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி, சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேதன் சகரியா, கே.சி. காரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்தீப் யாதவ், ஆகாஷ் சிங்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.