IPL 2021 live updates: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணிக்கு எதிர்பாராத ரன்கள் கிடைக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக்கிற்கு சரியான துவக்கம் கிடைக்காமல் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கேப்டன் ரோகித் பின்னர் களம் கண்ட சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து வலுவான ஸ்கோரை சேர்க்க நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். 4 பவுண்டரிகளை ஓடவிட்ட சூர்யகுமார் அவேஷ் கான் பந்தில் 24 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் தனி ஒருவராக ரன்களைச் சேர்க்க போராடினார். அதிரடி காட்ட முயன்ற இஷான் கிஷன் அவுட் ஆகவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
பந்து வீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த டெல்லி அணியில், அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ககிசோ ரபாடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அசாத்திய பந்து வீச்சை தொடர்ந்த அமித் மிஸ்ரா கேப்டன் ரோகித் சர்மாவை 7வது முறையாக சாய்த்து சாதனை படைத்தார்.
தொடர்ந்து 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி அணி, பவர் - பிளே முடிவில் அதன் முதல் விக்கெட்டை இழந்தது. களத்தில் இருந்த தவான், ஸ்மித் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை ஓடவிட்ட ஸ்மித் 33 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை நிதானம் காட்டியும், அவ்வப்போது சில பாவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் பறக்க விட்ட துவக்க வீரர் தவான் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷாப் பந்த் 7 ரன்களுடன் அவுட் ஆகினார். இறுதி வரை வெற்றி இலக்கை அடைய போராடிய லலித் யாதவ் 22 ரன்களும், சிம்ரான் ஹெட்மியர் 10 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் மந்தமாவே பந்துகளை வீசிய மும்பை அணியினர் தோல்வியை தழுவினர்.
கடந்த ஆண்டு நடந்த லீக் போட்டி மற்றும் இறுதி போட்டிகளில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவிய டெல்லி அணி, லீக்கின் முதல் போட்டியிலே பதிலடி கொடுத்துள்ளது. மேலும் 3வது வெற்றியை சுவைத்த டெல்லி அணி அட்டவணையில் 2ம் இடத்திற்கு தாவியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
- 00:16 (IST) 21 Apr 2021டெல்லிக்கு 3வது வெற்றி; இறுதி வரை போராடிய மும்பைக்கு 2வது தோல்வி!
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பந்து வீச்சில் அசத்திய டெல்லியின் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
That's that from Match 13 of vivoipl as @DelhiCapitals win by 6 wickets to register their third win of the season.
— IndianPremierLeague (@IPL) April 20, 2021
Scorecard - https://t.co/XxDr4f4nPU dcvmi pic.twitter.com/g3bqYZTl6fA well deserved Man of the Match award for @MishiAmit for his bowling figures of 4/24 as @DelhiCapitals win by 6 wickets.vivoipl dcvmi pic.twitter.com/5AGgIapm9Y
— IndianPremierLeague (@IPL) April 20, 2021 - 23:09 (IST) 20 Apr 2021கேப்டன் பண்ட் அவுட்...!
138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், தற்போது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. 1 பவுண்டரியை ஓடவிட்ட அந்த அணியின் கேப்டன் பண்ட் ஹார்டிக் பாண்டியா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தற்போது அந்த அணி 18 பந்துகளில் 22 ரன்களை சேர்க்க வேண்டும்.
- 22:55 (IST) 20 Apr 2021தவான் அவுட்...!
138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், தற்போது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை ஓடவிட்ட தவான் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்
- 22:25 (IST) 20 Apr 2021ஸ்மித் அவுட்...!
138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது 2வது'விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியில் 4 பவுண்டரிகளை ஓடவிட்ட ஸ்மித் 33 ரங்களுடன் ஆட்டமிழந்தார்
- 22:18 (IST) 20 Apr 2021ரன் சேர்ப்பில் நிதானம் காட்டும் டெல்லி!
138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. களத்தில் உள்ள தவான் 20 ரங்களுடனும், ஸ்மித் 33 ரங்களுடனும் இருக்கின்றனர்.
- 22:04 (IST) 20 Apr 2021பவர் - பிளே முடிந்தது... நிதான ஆட்டத்தில் டெல்லி அணி...!
138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. களத்தில் தவான் 12 ரங்களுடனும், ஸ்மித் 18 ரங்களுடனும் உள்ளனர்.
- 20:39 (IST) 20 Apr 2021சரியும் விக்கெட்டுகள்; ரன் சேர்க்க தடுமாறும் மும்பை அணி!
6 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை அணி ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணியின் இஷான் கிஷன், ஜெயந்த் யாதவ் களத்தில் உள்ளனர். 89/6 - 13
- 20:22 (IST) 20 Apr 2021ரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்ட்யா அவுட்; நிதான ஆட்டத்தில் மும்பை அணி!
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரர் குயின்டன் டி கோக், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் போன்றோர் ஆட்டமிழந்த நிலையில், 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 44 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அமித் மிஸ்ராவின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹார்டிக் பாண்ட்யா அதே ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.
கடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை அணி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது.
- 20:08 (IST) 20 Apr 20216 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள்...!
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் ஸ்டோய்னிஸ் வீசிய பந்தில் கேப்டன் பந்த் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், மறுமுனையில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்த்துள்ளார். தற்போது 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்களை அந்த அணி சேர்த்துள்ளது.
- 19:51 (IST) 20 Apr 2021டி கோக் அவுட்...!
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் ஸ்டோய்னிஸ் வீசிய பந்தில் கேப்டன் பந்த் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
- 19:41 (IST) 20 Apr 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்...!
டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் துவக்க வீரர்கள் குயின்டன் டி கோக், ரோஹித் சர்மா களத்தில் உள்ளனர்
- 19:13 (IST) 20 Apr 2021களமிறங்கும் இரு அணி வீரர்களின் விபரம்
டெல்லி கேப்பிட்டஸ்
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷாப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்
மும்பை இந்தியன்ஸ்
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
- 19:06 (IST) 20 Apr 2021டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- 18:08 (IST) 20 Apr 2021நேருக்கு நேர்...!
இதுவரை நடந்த 28 ஆட்டங்களில் 12ல் டெல்லி அணியும், 16 மும்பை அணியும் வென்றுள்ளன.
- 17:17 (IST) 20 Apr 2021உத்தேச அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ்
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ரவி அஸ்வின், கிறிஸ் வோக்ஸ், ககிசோ ரபாடா, அவேஷ் கான் மற்றும் அமித் மிஸ்ரா
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் / ஆடம் மில்னே, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.