சிஎஸ்கே.வை வீழ்த்திய ‘இளம் படை’ டெல்லி: ஏமாற்றம் தந்த டோனி

IPL 2021 CSK vs DC Live Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2021 Live Updates: Dhoni’s Kings vs Pant’s Capitals in Mumbai, CSK vs DC Predicted Playing 11,

IPL 2021 Live Updates:ஐ.பி.எல் தொடரின் 14-வது சீசன் நேற்று முதல் துவங்கியுள்ள நிலையில், 2 வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தொடரில், டெல்லி அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தோள்பட்டை காரணமாக நடப்பாண்டின் தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே அவருக்கு பதில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டனாக முதல்முறையாக டெல்லி அணியை வழிநடத்துகிறார்.

3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் வீடு திரும்பியது. மேலும் அணிகள் அட்டவணையில் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. இந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வரவும், தொடரை வென்று வெற்றி நடை போடவும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த அணி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தை காக்கும் முயற்சியில் தொடருக்கு முன்னதாகவே பயிற்சியை துவக்கியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு துவங்கவுள்ள போட்டியில், தனது ஆஸ்த்தான வீரரும், குருவுமான எம்.எஸ் தோனியை சிஷ்யன் ரிஷாப் பண்ட் எதிர்கொள்கிறார். குருவின் அணியை அவருடைய பாணியிலே சமாளிப்பேன் என்று கூறியுள்ள பண்ட் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Live Updates
11:13 (IST) 10 Apr 2021
டெல்லி அணி அபார வெற்றி…!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய துவக்க வீரர்கள் பிரித்வி ஷா 72 ரன்னிலும், ஷிகர் தவான் 85 ரன்னிலும் ஆட்டமிழ்ந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடியின் நிதான ஆட்டத்தால் 20 ஓவர் முடிய 8 பந்துகள் இருந்த போதே, அந்த அணி நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடித்ததது.

இளம் வீரர் ரிஷாப் பண்ட் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி, தொடரின் முதல் போட்டியிலே வென்று உற்சாகத்தோடு தொடரை ஆரம்பித்துள்ளது.

பந்து வீச்சில் சொதப்பிய சென்னை அணி, டெல்லி அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியும் வெற்றி பெற இயலவில்லை.

11:03 (IST) 10 Apr 2021
டெல்லி அணி பேட்டிங் – தவான் அதிரடி

சென்னை அணிக்கெதிரான முதல் போட்டியில் அதிரடி காட்டிய துவக்க வீரர் ஷிகர் தவான் 2 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளை சிதறவிட்டு 85 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் தாக்கூர் வீசிய 16.3 ஓவரில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார்.

10:21 (IST) 10 Apr 2021
வெற்றிப்பாதையில் டெல்லி அணி

10 ஓவருக்கு 99 ரன்களை சேர்த்துள்ள டெல்லி அணி தற்போது வரை ஒரு விக்கெட் கூட விழாமல் நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பாக துவக்கம் கொடுத்துள்ளது. மேலும் இருவருமே அரைசதம் கடந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

9:43 (IST) 10 Apr 2021
டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு

சென்னை அணியில் இறுதி ஓவர்களில் சிறப்பாக ஆடிய ஜடேஜா சாம் கரண் ஜோடி, அந்த அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவியுள்ளது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 188 ரன்களை சேர்த்துள்ளது. 120 பந்துகளுக்கு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது டெல்லி அணி களமிறங்கியுள்ளது.

8:50 (IST) 10 Apr 2021
மறுவதாரம் எடுத்துள்ள சுரேஷ் ரெய்னா…!

சின்ன தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, டெல்லி அணியுடனான இன்றைய போட்டியில் மறுவதாரம் எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பெரிதும் சோபிக்காத ரெய்னா, கடந்த ஆண்டு நடந்த தொடரில் தனிப்பட்ட காரங்களுக்காக விலகி இருந்தார். தொடர்ந்து தீவிர பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா இன்றைய முதல் போட்டியில் 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 54 ரன்களை சேர்த்துள்ளார்.

8:50 (IST) 10 Apr 2021
வந்த வேகத்தில் வெளியேறிய தோனி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்து வரும் சென்னை 15.3 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்துள்ளது. ரெய்னா ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய கேப்டன் தோனி தான் சந்தித்த முதல்பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்

8:47 (IST) 10 Apr 2021
அரைசதம் கடந்த ரெய்னா

சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலாக ஐபிஎல் தொடரில் 2-வது லீக் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் சென்னை அணியில் அரைசதம் கடந்த சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

7:59 (IST) 10 Apr 2021
தொடர்ந்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் ஃபஃப் டு பிளெசிஸ் ஜோடிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அவேஷ் கான் வீசிய 2வது ஓவரில் எல்பிடபிள்யு ஆகி ஃபஃப் டு பிளெசிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்ததைத் தொடர்ந்து, கிறிஸ் வோக்ஸ் வீசிய 3வது ஓவரில் தவான் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.

7:47 (IST) 10 Apr 2021
களத்தில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்:

ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், டாம் குர்ரான், அமித் மிஸ்ரா, அவேஷ் கான்

7:45 (IST) 10 Apr 2021
களத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சஹார்

7:44 (IST) 10 Apr 2021
2-வது விக்கெட்டை இழந்தது சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய சென்னை அணி தற்போது தனது 2-வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.'

2.1 ஓவர் 7/2 ருத்துராஜ் 5 ரன் அவுட், டூபிளசிஸ் 0 அவுட்

6:30 (IST) 10 Apr 2021
டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு

டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பொறுத்தவரை, பேட்டிங்கில் கடந்த சீசனில் அதிக ரன் சேர்த்து 2-வது இடம் பிடித்த துவக்க வீரர் ஷிகர் தவான் (618 ரன்) உள்ளார். அவருடன் மறுமுனையில் அசத்தலான துவக்கம் கொடுக்க, அண்மையில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 827 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்த பிரித்வி ஷா உள்ளார். மேலும் ரஹானே, ஸ்டீவன் சுமித், அதிரடியில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைத்த கேப்டன் ரிஷாப் பண்ட் என பெரும் பட்டாளமே உள்ளது.

வேகப்பந்து வீச்சில் கடந்த முறை கலக்கிய அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா ஆகியோர் கடந்த 6-ந் தேதி தான் அணியில் இணைந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாது. அவர்கள் இல்லாத குறையை போக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், கிறிஸ்வோக்ஸ் போன்றோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் வலுசேர்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் கொரோனா தொற்றில் சிக்கியுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற மாட்ட்டார்.

6:22 (IST) 10 Apr 2021
‘சீனியர் வீரர்களுடன் இணைந்து வியூகம் அமைப்பேன்’ – டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட்

இன்றைய போட்டி குறித்து டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘அணியின் சீனியர் வீரர்களான ஷிகர் தவான், அஸ்வின், ரஹானே ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பீல்டிங் உள்ளிட்ட வியூகம் அமைப்பதில் முடிவு மேற்கொள்வேன்’ என்றார்.

5:27 (IST) 10 Apr 2021
குரு vs சிஷ்யன் – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்வீட்!

குரு vs சிஷ்யன் என்று ரிஷாப் பந்த் மற்றும் எம்.எஸ். தோனி குறித்து இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரது சிறப்பு வேண்டுகோள் என்னவென்றால், இன்றைய ஆட்டத்தில் ஸ்டம்ப் மைக்குகளை ஆன் செய்ய வேண்டும் என்றுள்ளார்.

5:12 (IST) 10 Apr 2021
2021 ஐபிஎல் தொடரில் தோனி பதிவு செய்யவுள்ள சாதனைகள்

ஐ.பி.எல் தொடர்களில் 150 விக்கெட்களை எடுத்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற, எம்.எஸ் தோனிக்கு இன்னும் இரண்டு ஆட்டமிழப்புகள் தேவை.

179 ரன்கள்: இந்த சீசனில் எம்.எஸ் தோனி 179 ரன்கள் எடுத்தால், அவர் 7000 டி- 20 ரன்களை முடிப்பார். மேலும் எம்.எஸ் தோனி இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால், சி.எஸ்.கே அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

5:02 (IST) 10 Apr 2021
ஐ.பி.எல் தொடரில் எம்.எஸ் தோனியின் இதுவரையான சாதனைகள்

எம்.எஸ். தோனி 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், இது ஒரு வீரர் விளையாடிய அதிகபட்ச போட்டிகளாகும்.

எம்.எஸ். தோனி ஆர்.சி.பி.க்கு எதிராக 832 ரன்கள் எடுத்துள்ளார், இது ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக ஒரு வீரர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடர்களில் இதுவரை 209 சிக்ஸர்களை அடித்துள்ளார். எனவே அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திலும், ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளார்.

ஐ.பி.எல். தொடர்களில் தன்னுடைய பெயரில் 100 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் எம்.எஸ். தோனி ஆவார்.

எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே அணியை 6 ஏப்ரல் 2013 முதல் 2019 ஏப்ரல் 14 வரை தொடர்ச்சியாக 85 போட்டிகளுக்கு வழிநடத்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடர்களில் டெத் ஓவர்களில் (17-20) அதிக (141) சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் எம்.எஸ்.தோனி ஆவார்.

4:55 (IST) 10 Apr 2021
வான்கடே மைதானத்தின் ஆடுகளம் மற்றும் வானிலை எப்படி?

ஆடுகளத்தைப் பொறுத்தவரை, வான்கடேயில் உள்ள விக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இது வரலாற்று ரீதியாக ஒரு பேட்டிங்கிற்கு சாதகமான இடமாக இருந்து வருகிறது. மேலும் இந்த போக்கு இன்றிரவு நடக்கும் போட்டியிலும் தொடரும். இந்த மைத்தனத்தில்180 ரன்கள் சேர்த்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும். மற்றும் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை விட சிறப்பாக செயல்பட வேண்டும்.

மைதானத்தின் வானிலை பொறுத்தவரை, மும்பையில் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் பனி ஒரு பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.

4:48 (IST) 10 Apr 2021
நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 முறையும் வென்று உள்ளன

4:28 (IST) 10 Apr 2021
இன்று நடக்கும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

Web Title: Ipl 2021 live updates dhonis kings vs pants capitals in mumbai csk vs dc predicted playing 11

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com