IPL 2021 live updates: துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி சென்னை அணிக்கு வலுவான துவக்கத்தை கொடுத்தது. அசத்தலான ஆட்டம் காட்டி அரைசதம் கடந்த ருதுராஜ், வருண் சக்கவர்த்தி பந்தை சுழட்டி அடிக்க முயன்று கம்மின்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடரில் சரியான துவக்கம் கிடைக்கமால் தவித்து வந்த ருதுராஜ் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 64 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆல்-ரவுண்டர் வீரர் மொயீன் அலி, தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தோனி 2 பவுண்டரிகளை ஓடவிட்டும், 1 சிக்ஸரை சிதற விட்டும் (17 ரன்களுடன்) ஆட்டமிழந்தார்.
இறுதி வரை களத்தில் நின்று அரைசதம் கடந்த ஃபாஃப் டு பிளெசிஸ் கொல்கத்தா அணியினரின் பந்துகளை தவிடு பொடியாக்கினார். கொல்கத்தாவின் ஆண்ட்ரே ரஸல் வீசிய பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த டு பிளெசிஸ் 60 பந்துகளில் (9பவுண்டரி, 4 சிக்ஸர்) 95 ரன்கள் சேர்த்து அசத்தினார். களமிறங்கியவர்கள் எல்லாரும் அதிரடி காட்டவே 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் சேர்த்தது சென்னை அணி.
120 பந்துகளில் 221 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறி கொடுத்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிதீஷ் ராணா, சுப்மான் கில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி, கேப்டன் ஈயோன் மோர்கன், சுனில் நரைன் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பவே, அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி விக்கெட் சரிவை தடுத்தது.
ஒரு முனையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நிதானம் காட்ட, மறுமுனையில் சிக்ஸர்களால் வான வேடிக்கை காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ரஸ்ஸல், சாம் குர்ரன் பந்தில் அவுட் ஆகி 54 (6 சிக்ஸர், 3 பவுண்டரி) ரன்களுடன் வெளியேறினார்.
நிதானம் ஆட்டத்தை தொடர்ந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட முயற்சித்து நிகிடி பந்தில் எல்பிடபிள்யூ (40 ரன்களுடன்) ஆகினார். மறுமுனையில் அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ் சாம் குர்ரன் வீசிய 16 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து சாம் வீசிய அடுத்த பந்தில் பவுண்டரியை ஓடவிட்ட கம்மின்ஸ், அவர் வீசிய இறுதி பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து 30 ரன்களை சேர்த்தார். மேலும் ரஸ்ஸல் அவுட் ஆனா குறையை தீர்த்து வைத்து, வெற்றியை நோக்கி பேட்டை சுழற்றினார். ஆனால் அவருக்கு ஜோடியாக வந்த வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ரன் -அவுட்டில் ஆட்டமிழக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி அட்டவணையில் முதல் இடத்திற்கு தவியுள்ளது. மேலும் அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து இறுதி வரை ஆட்டமிழாக்கமால் இருந்த டு பிளெசிஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். துல்லியமாக பந்துகளை வீசிய அந்த அணியின் தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளையும், இன்றை ஆட்டத்தில் களம் கண்ட லுங்கி என்ஜிடி 3 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)
Indian Premier League, 2021Wankhede Stadium, Mumbai 25 May 2022
Kolkata Knight Riders 202 (19.1)
Chennai Super Kings 220/3 (20.0)
Match Ended ( Day – Match 15 ) Chennai Super Kings beat Kolkata Knight Riders by 18 runs
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. துல்லியமாக பந்து வீசிய சென்னையின் தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
An absolute thriller here at The Wankhede as @ChennaiIPL clinch the game by 18 runs.Scorecard – https://t.co/jhuUwnRXgL #vivoipl #kkrvcsk pic.twitter.com/vf9MfM4phz
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
For Match 15 @faf1307 gets the Man of the Match award for his brilliant knock of 95* as @ChennaiIPL win a thriller against #kkr.#vivoipl pic.twitter.com/kbkFF8qs6A
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
சாம் குர்ரன் வீசிய 16 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த கம்மின்ஸ், அடுத்த பந்தில் பவுண்டரியை ஓடவிட்டார். சாம் குர்ரன் வீசிய இறுதி பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த கம்மின்ஸ் அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை சேர்த்தார்.
Three SIXES in a row from @patcummins30.He sure is enjoying his time out there in the middle.Live – https://t.co/2I2sC5hrmk #kkrvcsk #vivoipl pic.twitter.com/QeDG3z3pLg
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
நிதானம் ஆட்டத்தை தொடர்ந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட முயற்சித்து நிகிடி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 40 ரன்களுடன் வெளியேறினார்.
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் கொல்கத்தா அணி நிதான ஆட்டத்தை தொடர்கிறது.
221 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, அதன் முன்னணி வீரர்களை பறி கொடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிதீஷ் ராணா, சுப்மான் கில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ராகுல் திரிபாதி, கேப்டன் ஈயோன் மோர்கன், சுனில் நரைன் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பவே, பின்னர் களம் கண்ட தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி விக்கெட் சரிவை தடுத்தது.
ஒரு முனையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நிதானம் ஆட்டத்தை தொடர, மறுமுனையில் சிக்ஸர்களால் வான வேடிக்கை காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ரஸ்ஸல், சாம் குர்ரன் பந்தில் அவுட் ஆகி 54 (6 சிக்ஸர், 3 பவுண்டரி) ரன்களுடன் வெளியேறினார்.
பேட்டிங்கில் அசத்திய சென்னை அணி கொல்கத்தா அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்கு வலுவான துவக்கம் கொடுத்து அரைசதம் கடந்தார். வருண் சக்கவர்த்தி பந்தில் சுழட்டி அடிக்க முயன்ற ருதுராஜ் கம்மின்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடரில் சரியான துவக்கம் கிடைக்கமால் தவித்து வந்த ருதுராஜ் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 64 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆல்-ரவுண்டர் வீரர் மொயீன் அலி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தோனி 2 பவுண்டரிகளை ஓடவிட்டும், 1 சிக்ஸரை சிதற விட்டும் 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதி வரை களத்தில் நின்று அரைசதம் கடந்த ஃபாஃப் டு பிளெசிஸ் கொல்கத்தா அணியினரின் பந்துகளை தவிடு பொடியாக்கினார். அந்த அணியின் ஆண்ட்ரே ரஸல் வீசிய பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்தலான ஆட்டம் காட்டிய டு பிளெசிஸ் 60 பந்துகளில் (9பவுண்டரி, 4 சிக்ஸர்) 95 ரன்கள் சேர்த்தார்.
120 பந்துகளில் 221 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்த கொல்கத்தா அணி தற்போது களமிறங்கியுள்ளது.
துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு வலுவான துவக்கம் கொடுத்து அரைசதம் கடந்தார். வருண் சக்கவர்த்தி பந்தில் சுழட்டி அடிக்க முயன்ற ருதுராஜ் கம்மின்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடரில் சரியான துவக்கம் கிடைக்கமால் தவித்து வந்த அவர் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 64 ரன்கள் சேர்த்தார்.
சென்னை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி வலுவான பேட்டிங் செய்து ரன்களை குவித்து வருகிறது . ருதுராஜ் 41 ரன்களுடனும், டு பிளெசிஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 15 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கும் சென்னை அணியில், கடந்த போட்டியில் ஆடிய பிராவோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுவரை நடந்த 22 போட்டிகளில், சென்னை 14 முறையும், கொல்கத்தா 8 முறையும் வென்றுள்ளன.
சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, சாம் குர்ரான், எம்.எஸ். தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம் லுங்கி என்ஜிடி, மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன்,
கொல்கத்தா அணி
சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், பென் கயரிங் .