Advertisment

MI vs SRH Highlights: மும்பை அணி அசத்தல் பந்து வீச்சு; 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

MI vs SRH live updates: மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.

author-image
WebDesk
New Update
IPL 2021 live updates: MI vs SRH live

IPL 2021 Live Updates: 151 ரன்கள் கொண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. இருப்பினும் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் விக்கெட்கள் பறிபோனதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்றப்பட்டது. பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே, விராட் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களம் கண்ட விஜய் சங்கர் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைவாரா என எதிர்பார்க்கையில் பும்ரா வீசிய ஸ்லோயர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வெற்றி இலக்கை அடைய போராடிய ஹைதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியவே 20 ஓவர்கள் முடிய 2 பந்துகள் இருந்த போதே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

Advertisment

தொடரில் டாஸ் வெல்லும் அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்து வரும் நிலையில், இன்றை ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும் தொடக்க வீரர்கள் அமைத்து கொடுத்த பாதையில் சுணக்கத்தோடு விளையாடி அந்த அணி, இறுதி ஓவர்களில் பொலார்ட் அடித்த சிக்ஸர்கள் மூலமாக மீடியமான ஸ்கோரை எட்டியது.

மேலும் பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்திய அந்த அணி ஹைதராபாத் அணியின் முன்னணி விக்கெட்டுகளை சாய்த்தது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கழட்டிய ராகுல் சாஹர் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தார். இறுதி ஓவர்களில் துல்லியமாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் அந்த அணியில் சிறப்பாக பந்துகளை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிருனல் பாண்ட்யா தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பந்துகளை திறம்பட தடுத்த ஹார்டிக் பாண்ட்யா கேப்டன் வார்னரை ரன்-அவுட் செய்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். தனது 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 10 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி, தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அட்டவணையில் முன்னேறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)


  • 23:52 (IST) 17 Apr 2021
    மும்பை அணி அசத்தல் பந்து வீச்சு; 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. பந்து வீச்சில் அசத்திய ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


  • 22:44 (IST) 17 Apr 2021
    ரன் சேர்க்க தடுமாறி வரும் ஹைதராபாத் அணி!

    151 ரன்கள் கொண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்த நிலையில், தற்போது அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க போராடி வருகிறது. பந்து வீச்சில் அசத்திய மும்பையின் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


  • 22:27 (IST) 17 Apr 2021
    கேப்டன் வார்னர் அவுட்....!

    துவக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்த கேப்டன் வார்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை சிதறவிட்டு 36 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது அந்த அணி வெற்றி பெற 48 பந்துகளில் 59 ரன்களைச் சேர்க்க வேண்டும்.


  • 22:21 (IST) 17 Apr 2021
    அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்; போட்டியை கைப்பற்றுமா ஹைதராபாத்?

    151 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்த நிலையில், அதன் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


  • 22:03 (IST) 17 Apr 2021
    ஜானி பேர்ஸ்டோ 43 ரன்களில் அவுட்

    151 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ஐதராபாத் அணி 7.2 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 22 பந்துகளை சந்தித்த ஜானி பேர்ஸ்டோ 3 பவுண்டரி 4 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து ஹிட்விக்கெட் ஆகி வெளியேறினார்.


  • 21:50 (IST) 17 Apr 2021
    5 ஓவர்களில் ஐதராபாத் அணி 55 ரன்கள் குவிப்பு

    151 ரன்கள் இலக்கை நோக்கி அதிரடியாக ஆடி வரும் ஐதராபாத் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்துள்ளது. வார்னர் 15 பந்துகளில் 1 பவுண்ரியுடன் 14 ரன்களும், பேர்ஸ்டோ 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 40 ரன்களும் எடுத்துள்ளனர். ஐதராபாத் வெற்றிக்கு 90 பந்துகளில் 96 ரன்கள் தேவை


  • 21:39 (IST) 17 Apr 2021
    ஐதராபாத் 23/0 3 ஓவர்கள்

    மும்பை அணிக்கு எதிராக 151 ரன்கள் இலக்கை நோக்கி களகமிறங்கியுள்ள ஐதராபாத் அணி 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்துள்ளது. இதில் வார்னர் 9 பந்துகளில் 3 ரன்களும், பேர்ஸ்டோ 9 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களும் எடுத்துள்ளனர். டிராட் போல்ட் வீசிய 3வது ஓவரில் பேர்ஸ்டோ 3 பவுண்டரி ஒரு சிக்சரு பறக்கவிட்டார்.


  • 21:14 (IST) 17 Apr 2021
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்கு!

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. தொடர்ந்து களமிறங்கவுள்ள ஹைதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து போராடிய அந்த அணிக்கு பொல்லார்ட் அடித்த சிக்ஸர்கள் ஆறுதல் அளித்துள்ளது.


  • 20:56 (IST) 17 Apr 2021
    ரன் சேர்க்க தடுமாறும் மும்பை அணி!

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி, அதன் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. மேலும் களத்தில் உள்ள ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட் மித வேகத்தில் ரன்களை சேர்த்து வருகிறது.


  • 20:07 (IST) 17 Apr 2021
    கேப்டன் ரோஹித் அவுட்...!

    டாஸில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய மும்பை அணியின் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் ஜோடியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு விஜய் சங்கர் பந்தில் விராட் சிங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்.


  • 19:40 (IST) 17 Apr 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்...!

    டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது அந்த அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் களம் காண்கின்றனர்.


  • 19:40 (IST) 17 Apr 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்...!

    டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது அந்த அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் களம் காண்கின்றனர்.


  • 19:26 (IST) 17 Apr 2021
    ஹைதராபாத் அணியில் நான்கு வீரர்கள் மாற்றம்...!

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு வீரர்களை மாற்றம் செய்துள்ளது. விருத்திமான் சஹா, ஜேசன் ஹோல்டர், ஷாபாஸ் நதீம் மற்றும் டி நடராஜன் ஆகியோருக்கு பதிலாக விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கலீல் அகமது ஆகியோரை சேர்த்துள்ளது


  • 19:15 (IST) 17 Apr 2021
    களமிறங்கும் இரு அணிகள் விபரம்

    மும்பை இந்தியன்ஸ்

    ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அகமது


  • 17:39 (IST) 17 Apr 2021
    உத்தேச அணி விபரம்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன்

    மும்பை இந்தியன்ஸ்:

    குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா


  • 17:07 (IST) 17 Apr 2021
    மும்பை - ஹைதராபாத் அணிகளின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்.

    மும்பை அணி: அல்சாரி ஜோசப் - 6/12

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: புவனேஷ்வர் குமார் - 5/19

    அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

    மும்பை அணி: லசித் மலிங்கா - 195

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: புவனேஷ்வர் குமார் - 114


  • 17:03 (IST) 17 Apr 2021
    ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் சேர்த்த இரு அணி வீரர்கள்

    மும்பை அணி: ரோகித் சர்மா - 4395

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர் - 3876


  • 16:28 (IST) 17 Apr 2021
    அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

    மும்பை அணி: சனத் ஜெயசூரியா - 114 *

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர் - 126


  • 16:24 (IST) 17 Apr 2021
    இரு அணிகளின் அதிகபட்ச ரன்கள்

    மும்பை அணி - 223/6

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - 231/2


  • 16:21 (IST) 17 Apr 2021
    நேருக்கு நேர்...!

    இதுவரை நடந்த 16 போட்டிகளில் மும்பை அணி 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 முறையும் வென்றுள்ளன.


  • 16:18 (IST) 17 Apr 2021
    இரு அணி வீரர்களின் பட்டியல்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

    விருத்திமான் சஹா, டேவிட் வார்னர் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ, அப்துல் சமத், விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ஷாபாஸ் நதீம், டி நடராஜன், கேன் வில்லியம்சன் கவுல், கேதார் ஜாதவ், முகமது நபி, ஜேசன் ராய், சந்தீப் சர்மா, விராட் சிங், பசில் தம்பி, ஜகதீஷா சுசித், கலீல் அகமது, முஜீப் உர் ரஹ்மான், அபிஷேக் சர்மா, பிரியாம் கார்க்

    மும்பை இந்திய அணி

    ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், ராகுல் சஹார், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பியுஷ் சாவ்லா ச ura ரப் திவாரி, ஆதித்யா தாரே, ஆடம் மில்னே, கிறிஸ் லின், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜேம்ஸ் நீஷம், அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், மொஹ்சின் கான், அர்ஜுன் டெண்டுல்கர், யுத்வீர் சிங்


Ipl Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2021 Ipl 2021 Live Mi Vs Srh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment