IPL 2021 Live Updates: ஐபிஎல் லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. அன்று நடந்த தொடரின் துவக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வியைத் தழுவியது. மறுபுறம் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் தொடரின் 5வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது
சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கவுள்ள கேப்டன் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, அதன் பேட்டிங் வரிசையில் மிகவும் வலுவாக உள்ளது. அந்த அணியில் உள்ள நிதிஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது.
தொடரின் துவக்க ஆட்டத்திலேயே தடுமாற்றம் கண்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, மீண்டும் வலுவான பேட்டிங் வரிசையோடு வரும் என நம்பலாம். பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் பேட்டிங் வரிசையில் அந்த அணி நிலை குழைந்தது. மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை. எனவே அதில் சில மாற்றங்களை கொண்டு வரும் என நம்பலாம்.
மும்பை அணியின் துவக்க வீரர் குயின்டான் டி காக்கின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து விட்ட நிலையில், இன்றைய போட்டியில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து பிரிவுகளிலும் வலுவாக உள்ள இந்த இரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் எந்த அணி அதிரடி காட்டி அசத்தும் என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 5வது லீக் ஆட்டத்தில், மும்பை அணி 10 ரன்கள் விதியசத்தில் வென்றது. ஆட்டத்தின் இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதி ஓவரை வீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட் அசத்தலாக பந்து வீச்சினார். மேலும் அந்த அணியில் துல்லியமாக பந்து வீசிய ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றும் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்ட, அதிரடி காட்டி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் சேர்த்தார்.
An absolute thriller of a game here at The Chepauk. @mipaltan win by 10 runs to register their first win of #vivoipl 2021 season.Scorecard – https://t.co/CIOV3NuFXY #kkrvmi #vivoipl pic.twitter.com/PJzQL2HPbJ
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில், நித்தீஷ் ராணா, மார்கன் ஆகியோர் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், க்ருனால் பாண்டிய வீசிய பந்தில் லெக் சைடில் பெரிய ஷாட் ஆட முயன்று சூரியகுமார் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களத்தில் உள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 153 இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டகாரர் நித்தீஷ் ராணா 41 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 7 ரன்களில் கேப்டன் மோர்கன் ஆட்டமிழந்தார். தற்போது கொல்கத்தா அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான 5-வது லீக் ஆட்டத்தில் 153 ரன்கள் இலக்கை நோக்கி களகமிறங்கியுள்ள கொல்கத்தா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்துள்ளது. சுப்மான் கில் 24 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா்.
மும்பை அணிக்கு எதிரான 5-வது லீக் ஆட்டத்தில் 153 ரன்கள் இலக்கை நோக்கி களகமிறங்கியுள்ள கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது. ராணா 22 (19) கில் 8 (9)
கொல்கத்தா – மும்பை அணிகள் விளையாடி வரும் இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளை பறக்கவிட்டு 56 ரன்களை குவித்தார். விக்கெட் சரிவை தடுக்க போராடிய கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த கொல்கத்தா அணி மிக சிறப்பாக பந்து வீசியது. அந்த அணியில் மிக துல்லியமாக பந்து வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஹித் சர்மா விக்கெட்டை சாய்த்த பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கவுள்ள கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
A Dre Russ show here in Chennai 💪💪A 5-wkt haul for @Russell12A against the #mumbaiindiansScorecard – https://t.co/CIOV3NuFXY #kkrvmi #vivoipl pic.twitter.com/cO7uBQ6z7z
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
Pat Cummins with another biggie!Gets the wicket of Rohit Sharma, who departs after scoring a 43.Live – https://t.co/CIOV3NuFXY #kkrvmi #vivoipl pic.twitter.com/51RR4lXwr5
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
சூர்யகுமார் விக்கெட்டுக்கு பின்னர் விக்கெட் சரிவை தடுக்க போராடிய கேப்டன் ரோஹித் பட் கம்மின்ஸ் பந்து வீச்சில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கீரோன் பொல்லார்ட், மார்கோ ஜான்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் ஷாகிப் வீசிய 10.3 ஓவரில் சுப்மான் கில் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளை பறக்கவிட்டு 56 ரன்களை குவித்தார்.
The SKY show comes to an end on 56. Tried to go big down the ground, but doesn't get all of it. Taken!Live – https://t.co/CIOV3NuFXY #kkrvmi #vivoipl pic.twitter.com/S9EAzsdxuP
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
2 ரன்களை அடித்த குயின்டன் டி கோக் சக்ரவர்த்தி வீசிய 1.6 ஓவரில் திரிபாதி வசம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையை காட்டினார். தற்போது மும்பை அணி 6 ஓவரில் 42 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில், மும்பை அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் ஜோடி களம் காண்கிறது. கொல்கத்தா அணி சார்பாக முதல் ஓவரை சுழற்பந்து ஜாம்பவான் ஹர்பஜன்சிங் வீசுகிறார்.
மும்பை – பெங்களூரு அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியில், மும்பை அணியின் துவக்க வீரராக களமிறங்கி 49 ரன்கள் சேர்த்த கிறிஸ் லின்னுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதில் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருந்து வந்துள்ள குயின்டன் டி கோக் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி
A look at the Playing XI for #kkrvmi Follow the game here – https://t.co/tDctT4sHnW #vivoipl https://t.co/8Es4bYwaHK pic.twitter.com/2f4I69jguI
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
#kkr have won the toss and they will bowl first against #mumbaiindians in Match 5 of #vivoipl.#kkrvmi pic.twitter.com/7plyJvbHdx
— IndianPremierLeague (@IPL) April 13, 2021
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற அணி கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கீரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் 200 சிக்ஸர்களை முடிக்க இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே உள்ளது. மற்றும் அவர் 200 பவுண்டரிகளை அடைய அவருக்கு இன்னும் மூன்று பவுண்டரிகள் தேவை.
😋 charcha among 2⃣ members of the तोडफोड mandal! 🔥#onefamily #mumbaiindians #mi #kkrvmi #ipl2021 @KieronPollard55 @hardikpandya7 pic.twitter.com/JzTvjOnpQv
— Mumbai Indians (@mipaltan) April 13, 2021
மும்பை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குயின்டன் டி கோக், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய கிறிஸ் லின், 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Rested. Recharged. Ready for #kkrvmi 🔥#onefamily #mumbaiindians #mi #kheltakatak #ipl2021 pic.twitter.com/tnDtWNiCem
— Mumbai Indians (@mipaltan) April 12, 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்)
நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், பிரசீத் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ)
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், சுப்மான் கில், நிதீஷ் ராணா, டிம் சீஃபர்ட், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சிவம் மாவி, லாக்கி பெர்குசன், பாட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகேதர்கோடி கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹர்பஜன் சிங், கருண் நாயர், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், பவன் நேகி.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், மொஹ்சின் கான், ஹார்டிக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், கீரோன் பொல்லார்ட் , இஷான் கிஷன், குயின்டன் டி கோக், ஆதித்யா தாரே, ஆடம் மில்னே, நாதன் கூல்டர் நைல், பியூஷ் சாவ்லா, ஜேம்ஸ் நீஷம், யுத்வீர் சரக், மார்கோ ஜான்சன், அர்ஜுன் டெண்டுல்கர்.