IPL 2021 Live Updates: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் ஜோடி பேட்டிங் செய்ய களம் கண்டது. சரியான துவக்கம் கிடைக்காத குயின்டன் டி கோக் 3 ரன்னிலும், தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்னிலும் வெளியேறினர்.
தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை சிதறவிட்டு 33 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கெய்ல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். சிறப்பாக ஆடியிருந்த ரோஹித் 63 ரன்கள் (2 சிக்ஸர் 5 பவுண்டரி) சேர்த்து முகமது ஷமி வீசிய 17.3 ஓவரில் ஃபேபியன் ஆலன் வசம் சிக்கி அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா சொற்ப ரன்னில் ஆட்டமிழகவே, மறுமுனையில் இருந்த கீரன் பொல்லார்ட் 1 சிக்ஸர் அடித்து ஆறுதல் கொடுத்தார். வலுவான இலக்கை நிர்ணயிக்க போராடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் அணியில் சுழலில் அசத்திய ரவி பிஷ்னோய் மற்றும் வேகத்தில் மிரட்டிய முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் சிறப்பாக தாக்குதல் நடத்திய அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து களம் கண்டு 131 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி அசத்தலான பேட்டிங் செய்தது. தலா 1 சிக்ஸரை பறக்க விட்ட இந்த ஜோடி 7 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்தது.
தொடரில் சிறப்பான துவக்கம் கிடைக்காமல் தவித்து வந்த மயங்க் அகர்வால் தனது சிறப்பான பங்களிப்பை தந்தார். அசத்தலாக விளையாடிய அவர் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை சிதறடித்து 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம் கண்ட சிக்ஸர் மன்னன் கெய்ல் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் பறக்க விட்டார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் ராகுல் அரைசதம் கடந்தார். இலக்கை எட்ட 10 ரன்கள் இருந்தபோது 1 சிக்ஸர் 1 பவுண்டரியை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். குறைந்த ரன்கள் கொண்ட இலக்கை நிதானமாக துரத்திய பஞ்சாப் அணி 17.4 ஓவர்களிலேயே வெற்றியை சுவைத்தது. மிகுந்த பொறுப்போடு ஆடிய கேப்டன் ராகுல் 52 பந்துகளில் 60 ரன்களை (3 சிக்ஸர், 3 பவுண்டரி) சேர்த்தார்.
3 தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பஞ்சாப் அணி இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ளது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 2 தோல்வியை சந்தித்த மும்பை அணிக்கு 3 தோல்வி கிடைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
- 23:14 (IST) 23 Apr 2021கேப்டன் ராகுல் அரைசதம்; பஞ்சாப் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ராகுல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
And that's that from Chennai.
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
(60*) from @klrahul11 and 43* from Chris Gayle as pbks win by 9 wickets against mi.
Scorecard - https://t.co/KCBEyHFVDN vivoipl pic.twitter.com/oWfcCxhOmX - 22:25 (IST) 23 Apr 2021கேப்டன் ராகுல் நிதான ஆட்டம்; பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம்..!
131 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ள நிலையில், தற்போது நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. 1 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ராகுல் 35 ரன்களுடனும், சிக்ஸர் மன்னன் கெய்ல் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 22:08 (IST) 23 Apr 2021மாயங்க் அகர்வால் அவுட்...!
பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்த தொடக்க வீரர் மாயங்க் அகர்வால் 20 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளை சிதறவிட்டு 25 ரன்கள் சேர்த்து, ராகுல் சாஹர் வீசிய 7.2 ஓவரில் சூரியகுமார் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 22:02 (IST) 23 Apr 2021பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம்..!
131 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி அசத்தலான பேட்டிங் செய்து வருகிறது. தலா 1 சிக்ஸரை பறக்க விட்ட இந்த ஜோடி 7 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்துள்ளது.
- 21:19 (IST) 23 Apr 2021பந்து வீச்சில் அசத்திய பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணி, பந்து வீச்சில் தாக்குதல் நடத்தி 6 விக்கெட்டுகளை சாய்த்தது. நிதானமாக ரன் சேர்த்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்த்துள்ளது.
- 20:21 (IST) 23 Apr 2021ரன் சேர்க்க தடுமாறி வரும் மும்பை அணி நிதான ஆட்டம்!
பேட்டிங் செய்து வரும் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 37 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 20:10 (IST) 23 Apr 2021குயின்டன் டி கோக் அவுட்....!
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் தீபக் ஹூடா வீசிய பந்தில் 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
- 20:10 (IST) 23 Apr 2021இஷான் கிஷன் அவுட்...!
மும்பை அணியின் அதிரடி வீரர்களுள் ஒருவரான இஷான் கிஷன் ரன் சேர்க்க தடுமாறி வந்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Playing his first game of ipl2021, Bishnoi makes an immediate impact as he has Ishan Kishan 6 (17) caught behind by KL Rahul. mi are 37-2 after 8 overs https://t.co/NMS54FiJ5o vivoipl pbksvmi pic.twitter.com/hciWU2sAFI
— IndianPremierLeague (@IPL) April 23, 2021 - 19:43 (IST) 23 Apr 2021குயின்டன் டி கோக் அவுட்....!
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் தீபக் ஹூடா வீசிய பந்தில் 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
- 19:41 (IST) 23 Apr 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்...!
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக் ஜோடி களமிறங்கியுள்ளது.
No changes to @mipaltan's XI today@PunjabKingsIPL have made 1 change.
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
Leg spinner Ravi Bishnoi replaces fellow leggie M. Ashwin.https://t.co/NMS54FiJ5o vivoipl pbksvmi pic.twitter.com/vm7dJVqHLR - 19:22 (IST) 23 Apr 2021பஞ்சாப் மற்றும் மும்பை அணி வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் :
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
பஞ்சாப் கிங்ஸ் :
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
- 19:19 (IST) 23 Apr 2021பஞ்சாப் மற்றும் மும்பை அணி வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் :
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
பஞ்சாப் கிங்ஸ் :
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
- 19:16 (IST) 23 Apr 2021பஞ்சாப் அணி பந்துவீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 17-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 18:05 (IST) 23 Apr 2021நேருக்கு நேர்...!
இந்த இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 16 முறை மும்பை அணியும், 12 முறை பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
- 17:39 (IST) 23 Apr 2021உத்தேச அணி
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), , மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், எம் அஸ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
- 17:04 (IST) 23 Apr 2021இரு அணி வீரர்களின் விபரம்
பஞ்சாப் கிங்ஸ் அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், மந்தீப் மாங், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், ஜலாஜ் சக்சேனா, சர்பராஸ் கான், சவுரப்குமார், ஜெய் ரிச்சர்ட்சன், இஷான் பொரல், ரிலே மெரிடித், உத்கர்ஷ் சிங், தர்ஷன் நல்கண்டே, பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரர், ரவி பிஷ்னோய்
மும்பை இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பியுஷ் சாவ்லா ச ura ரப் திவாரி, ஆதித்யா தாரே, ஆடம் மில்னே, கிறிஸ் லின், நாதன் கூல்டர்-நைல், ஜேம்ஸ் நீஷம், அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், மொஹ்சின் கான், அர்ஜுன் டெண்டுல்கர், மார்கோ ஜான்சன், யுத்வீர் சிங்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.