scorecardresearch

RCB vs RR Highlights: படிக்கல், கேப்டன் கோலி அசத்தல் பேட்டிங்; பெங்களூரு அணி அபார வெற்றி!

Royal Challengers Bangalore vs Rajasthan Royals match highlights: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது. பேட்டிங்கில் அசத்திய துவக்க வீரர் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் கோலி 72 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

IPL 2021 live updates: RCB vs RR live

RCB vs RR Match Highlights: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களம் கண்டது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா ஜோடிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. 2 பவுண்டரிகளை ஓடவிட்ட பட்லர் 8 ரன்களுடனும், 1 பவுண்டரியை தட்டி விட்ட வோஹ்ரா 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் கண்ட மில்லர் சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார். 

களத்தில் நிதான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் டியூப்பே ஜோடியில், அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் சஞ்சு 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை சிதற விட்டு ஆட்டமிழந்தார். அணி 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ரியான் பராக் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

2 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரன் ரேட்யை உயர்த்திய சிவம் டியூப்பே அரைசதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்க்கையில், கேன் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அணிக்கு வலுவான ரன்களைச் சேர்க்க பேட்டை சுழற்றிய  ராகுல் தெவதியா 40 ரன்களுடனும், கிறிஸ் மோரிஸ் 10 ரன்களுடனும் ஆட்டமிழகவே, பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் கோபால் 1 சிக்ஸர் அடித்து, அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார். இறுதி வரை ரன் சேர்க்க போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்தது.

120 பந்துகளில் 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணி அசத்தலான பேட்டிங் செய்தது. நிதானமான துவக்கத்தை கொடுத்த தேவதூத் படிக்கல், விராட் கோலி ஜோடியில், சிக்ஸர் மழை பொழிந்த தேவதூத் படிக்கல் தனது 6 அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் படிக்கல்லுக்கு தட்டி கொடுத்து ஆடிய கேப்டன் கோலி 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

தொடர்ந்து வான வேடிக்கை காட்டிய இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து, ரன் ரேட்யை உயர்த்தியது. மேலும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்ட இந்த ஜோடி, அதை திறம்பட செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தது.  பேட்டிங்கில் அசத்திய துவக்க வீரர் படிக்கல் 101 (11பவுண்டரி, 6 சிக்ஸர்) ரன்களும், கேப்டன் கோலி 72 (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.  

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தும்சம் செய்த பெங்களூரு அணி, இந்த ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்தது. இதில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்களை துரத்து பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் விக்கெட் இழப்பின்றி 178 ரன்களை சேர்த்த 3 வது ஜோடி, தேவதூத் படிக்கல், விராட் கோலி ஜோடி ஆகும். 

பந்து வீச்சில் சொதப்பிய ராஜஸ்தான் அணிக்கு இது 4வது தோல்வி. இந்த அசாத்திய வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்திற்கு தாவியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Indian Premier League, 2021Wankhede Stadium, Mumbai   30 March 2023

Royal Challengers Bangalore 181/0 (16.3)

vs

Rajasthan Royals   177/9 (20.0)

Match Ended ( Day – Match 16 ) Royal Challengers Bangalore beat Rajasthan Royals by 10 wickets

Live Updates
22:38 (IST) 22 Apr 2021
பெங்களூர் அணி அசத்தல் பேட்டிங்; தேவதூத் படிக்கல், கேப்டன் கோலி அரைசதம்!

120 பந்துகளில் 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணி அசத்தலான பேட்டிங் செய்தது. நிதானமான துவக்கத்தை கொடுத்த தேவதூத் படிக்கல், விராட் கோலி ஜோடியில் சிக்ஸர் மழை பொழிந்த தேவதூத் படிக்கல் தனது 6 அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் படிக்கல்லுக்கு தட்டி கொடுத்து ஆடிய கேப்டன் கோலி 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

22:19 (IST) 22 Apr 2021
பெங்களூர் அணி அசத்தல் பேட்டிங்; தேவதூத் படிக்கல் அரைசதம்!

பேட்டிங்கில் அசத்தி வரும் பெங்களூர் அணியின் தேவதூத் படிக்கல் அரைசதம் கடந்துள்ளார்.

21:49 (IST) 22 Apr 2021
பந்து வீச்சில் அசத்திய பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களம் கண்டது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா ஜோடிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. 2 பவுண்டரிகளை ஓடவிட்டபட்லர் 8 ரன்களுடனும், 1 பவுண்டரியை தட்டி விட்ட வோஹ்ரா 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் கண்ட மில்லர் சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார்.

களத்தில் நிதான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் டியூப்பே ஜோடியில், அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் சஞ்சு 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை சிதற விட்டு ஆட்டமிழந்தார். அணி 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ரியான் பராக் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

2 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரன் ரேட்யை உயர்த்திய சிவம் டியூப்பே அரைசதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்க்கையில், கேன் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அணிக்கு வலுவான ரன்களைச் சேர்க்க பேட்டை சுழற்றிய ராகுல் தெவதியா 40 ரன்களுடனும், கிறிஸ் மோரிஸ் 10 ரன்களுடனும் ஆட்டமிழகவே, பின்னர் ஸ்ரேயாஸ் கோபால் 1 சிக்ஸர் அடித்து அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார். இறுதி வரை ரன் சேர்க்க போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்தது.

120 பந்துகளில் 178 ரன்களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு பெங்களூரு அணி தற்போது களமிறங்கியுள்ளது.

21:32 (IST) 22 Apr 2021
பந்து வீச்சில் அசத்திய பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் இலக்கு!

சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20:24 (IST) 22 Apr 2021
கேப்டன் சஞ்சு அவுட்…!

களத்தில் நிதான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் டியூப்பே ஜோடியில், அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் சஞ்சு 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை சிதற விட்டு ஆட்டமிழந்தார்.

20:02 (IST) 22 Apr 2021
3 விக்கெட்டுகள் காலி… நிதான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி…!

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா ஜோடிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. பவுண்டரிகளை ஓடவிட்ட 2 பட்லர் 8 ரன்களுடனும், 1 பவுண்டரியை தட்டி விட்ட வோஹ்ரா 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் கண்ட மில்லர் சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார்.

தற்போது களத்தில் உள்ள கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் டியூப்பே ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

19:43 (IST) 22 Apr 2021
ஆட்டம் இனிதே ஆரம்பம்…

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா ஜோடி பேட்டிங் செய்ய களம் கண்டுள்ளது.

19:11 (IST) 22 Apr 2021
களமிறங்கும் இரு அணி வீரர்களின் பட்டியல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்

19:09 (IST) 22 Apr 2021
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

18:36 (IST) 22 Apr 2021
முந்தைய பதிவுகள்…!

சம பலத்தில் உள்ள இரு அணிகளும், கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்த 22 போட்டிகளில் பெங்களூரு 10 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வென்றுள்ளன. ராஜஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் 2016 – 17ம் ஆண்டுகளில் அந்த அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

17:14 (IST) 22 Apr 2021
நேருக்கு நேர்….!

இதுவரை நடந்த 22 போட்டிகளில் பெங்களூரு 10 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வென்றுள்ளன.

16:58 (IST) 22 Apr 2021
உத்தேச அணி விபரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ரஜத் பட்டீதர், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால் / ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிஸூர் ரஹ்மான்

Web Title: Ipl 2021 live updates rcb vs rr live