/tamil-ie/media/media_files/uploads/2021/04/ipl-2021-9-1.jpg)
RR vs KKR Match Highlightsடாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் நிதிஷ் ராணா மற்றும் சுப்மான் கில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடிய இந்த ஜோடியில், அதிரடி காட்ட முயன்ற சுப்மான் கில், முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை பட்லர் இருந்த மிட்- விக்கெட் திசையில் அடிக்க முயன்றார். பந்தை லாவகமாக பிடித்த பட்லர் கில்லை ரன்-அவுட் செய்தார். எனவே 1 பவுண்டரியை ஓடவிட்ட 11 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
அவருடன் மறுமுனையில் இருந்த நிதிஷ் ராணா1 சிக்ஸர், 1 பவுண்டரியை சிதறவிட்டு 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட சுனில் நரைன், கேப்டன் ஈயோன் மோர்கன் ஆகியோர் தங்களின் விக்கெட்டை அடுத்தடுத்த ஓவர்களில் பறிகொடுத்தனர்.
இந்த வேளையில், களத்தில் இருந்த ராகுல் திரிபாதி, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டதை தொடர்ந்த இந்த ஜோடியில், முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய 15.2வது ஓவரில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்த ராகுல் திரிபாதி 36 ரன்னில் (2 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கி 1 சிக்ஸர் அடித்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், மோரிஸ் வீசிய 17.4வது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த தினேஷ் கார்த்திக்கும் அதே ஓவரின் இறுதி பந்தில் சேதன் சாகரியா வசம் கேட்ச் கொடுத்து 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழகவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 133 ரன்கள் சேர்த்தது.
பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
134 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி அதன் துவக்க வீரர் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை பறிகொடுத்தது. 1 பவுண்டரியை ஓடவிட்டு 5 ரன்கள் சேர்த்த பட்லர், வருண் சக்கரவர்த்தி வீசிய 3.2 வது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ந்து களம் கண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டன் சஞ்சு சாம்சன் கை கோர்த்தார்.
சிறப்பான அடித்தளம் அமைத்த இந்த ஜோடியில், 5 பவுண்டரிகளை ஓடவிட்ட ஜெய்ஸ்வால் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சிவம் டியூப்பே 1சிக்ஸர் 2 பவுண்டரி அடித்து 22 ரன்னில் அவுட் ஆகினார். அதிரடி காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் தெவதியா 5 ரன்னில் ஆட்டமிழகவே, தொடர்ந்து களமிறங்கிய மில்லர் கேப்டன் சஞ்சுவுடன் ஜோடி சேர்ந்தார்.
வெற்றியை உறுதி செய்ய நிதானமாக ஆடிய இந்த ஜோடி 18.5 வது ஓவரிலேயே இலக்கை எட்டியது. மிகுந்த பொறுப்புடன் நிதானமாக ஆடி அணியை கரை சேர்த்த கேப்டன் சஞ்சு 42 ரன்கள் (1சிக்ஸர் 2 பவுண்டரி) சேர்த்தார். அவருடன் மறுமுனையில் இருந்த டேவிட் மில்லர் 24 (3 பவுண்டரி) ரன்கள் சேர்த்தார்.
தொடரில் நடந்த 4 போட்டிகளில் 1ல் மட்டும் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, தற்போது 2வது வெற்றியை ருசித்துள்ளது. தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த கொல்கத்தா அணிக்கு இது 4 வது தோல்வி ஆகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
- 23:36 (IST) 24 Apr 2021நிதானமாக ஆடிய ராஜஸ்தான் அணிக்கு 2வது வெற்றி!
133 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி நிதானமாக ஆடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
That's that from Match 18 of vivoipl as @rajasthanroyals win by 6 wickets to register their second win of the season.
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
Scorecard - https://t.co/ouszimFkdorrvkkrpic.twitter.com/JcLflXxXzT - 22:50 (IST) 24 Apr 2021தெவதியா அவுட்...!
3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி, நிதான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், தற்போது 4வது விக்கெட்டை இழந்துள்ளது. அதிரடி காட்ட முயற்சித்த அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ராகுல் தெவதியா 5 ரன்களுடன் வெளியேறினார்.
- 22:42 (IST) 24 Apr 20213 விக்கெட்டுகள் காலி; நிதான ஆட்டத்தில் ராஜஸ்தான்!
3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள ராஜஸ்தான் அணி, நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- 22:40 (IST) 24 Apr 20213 விக்கெட்டுகள் காலி; நிதான ஆட்டத்தில் ராஜஸ்தான்!
3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள ராஜஸ்தான் அணி, நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- 21:59 (IST) 24 Apr 2021பட்லர் அவுட்...!
133 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் அணி அதன் துவக்க வீரர் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை பறிகொடுத்தது. 1 பவுண்டரியை ஓடவிட்டு 5 ரன்கள் சேர்த்த பட்லர், வருண் சக்கரவர்த்தி வீசிய 3.2 வது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
- 21:49 (IST) 24 Apr 2021பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் நிதிஷ் ராணா மற்றும் சுப்மான் கில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடிய இந்த ஜோடியில், அதிரடி காட்ட முயற்சித்த சுப்மான் கில், முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை பட்லர் இருந்த மிட்- விக்கெட் திசையில் அடிக்க முயன்றார். பந்தை லாவகமாக பிடித்த பட்லர் கில்லை ரன்-அவுட் செய்தார். எனவே 1 பவுண்டரியை ஓடவிட்ட 11 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
அவருடன் மறுமுனையில் இருந்த நிதிஷ் ராணா1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியை சிதறவிட்டு 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட சுனில் நரைன், கேப்டன் ஈயோன் மோர்கன் ஆகியோர் தங்களின் விக்கெட்டை அடுத்தடுத்த ஓவர்களில் பறிகொடுத்தனர்.
களத்தில் இருந்த ராகுல் திரிபாதி, விக்கெட் கீப்பர் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டதை தொடர்ந்த இந்த ஜோடியில், முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய 15.2வது ஓவரில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்து 36 ரன்னில் (2 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கி 1 சிக்ஸர் அடித்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், மோரிஸ் வீசிய 17.4வது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த தினேஷ் கார்த்திக்கும் அதே ஓவரின் இறுதி பந்தில் சேதன் சாகரியா வசம் கேட்ச் கொடுத்து 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழகவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 133 ரன்கள் சேர்த்து.
பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
எனவே பந்து வீச்சில் மிரட்டி 8 விக்கெட்டுகளை சாய்த்த ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- 20:35 (IST) 24 Apr 2021நிதிஷ் ராணா அவுட்...!
கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், அவருடன் மறுமுனையில் இருந்த நிதிஷ் ராணா1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியை சிதறவிட்டு 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 20:06 (IST) 24 Apr 2021சுப்மான் கில் ரன்-அவுட் ...!
கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் 1 பவுண்டரியை ஓடவிட்டு 11 ரன்கள் சேர்த்த நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை பட்லர் இருந்த மிட்- விக்கெட் திசையில் அடிக்க முயன்றார். பந்தை லாவகமாக பிடித்த பட்லர் கில்லை ரன்-அவுட் செய்தார்.
OUT
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
Gill 11 (19) survived once when he was dropped by Jaiswal at sweeper cover but has to return now as an under-arm direct hit from Buttler finds him short of the crease.
Powerplay is over and kkr are 25-1.
👉 https://t.co/oKLdD2Pi9Rvivoiplrrvkkrpic.twitter.com/gDtr1FAKrL - 19:36 (IST) 24 Apr 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்...!
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் நிதிஷ் ராணா மற்றும் சுப்மான் கில் பேட்டிங் செய்ய களம் கண்டுள்ளனர்.
- 19:31 (IST) 24 Apr 2021இரு அணியில் எந்தெந்த வீரர்கள் மாற்றம்!
ராஜஸ்தான் அணி இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் மனன் வோஹ்ராவுக்கு சரியான துவக்கம் கிடைக்காத நிலையில், அவருக்கு பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் காணவுள்ளார். பந்துவீச்சில் சொதப்பிய ஸ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக ஜெய்தேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய ஈயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளது. அந்த அணியின் கமலேஷ் நாகர்கோட்டிக்கு பதிலாக சிவம் மாவி களமிறங்கவுள்ளார். மாவி கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கெதிரான 2 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 19:23 (IST) 24 Apr 2021களமிறங்கும் இரு அணி வீரர்களின் விபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், சிவம் டியூப், ரியான் பராக், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நிதிஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா
Team News:
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
2⃣ changes for @rajasthanroyals as Yashasvi Jaiswal & Jaydev Unadkat named in the team.
1⃣ change for @KKRiders as Shivam Mavi picked in the team. vivoiplrrvkkr
Follow the match 👉 https://t.co/oKLdD2Pi9R
Here are the Playing XIs 👇 pic.twitter.com/FDsDv0mvSk - 19:19 (IST) 24 Apr 2021டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு!
ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Toss Update: @rajasthanroyals have elected to bowl against @KKRiders at the Wankhede Stadium. vivoiplrrvkkr
— IndianPremierLeague (@IPL) April 24, 2021
Follow the match 👉 https://t.co/oKLdD2Pi9Rpic.twitter.com/esC17PIpn2 - 17:55 (IST) 24 Apr 2021ஆர்ச்சரின் இடத்தை நிரப்புவது யார்?
வலது கையின் நடுவிரல் காயம் காரணமாக தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவருக்கு பதிலாக ஷெல்டன் கோட்ரெல், பிளேர் டிக்னர், மிட்செல் மெக்லெனகன், ஓஷேன் தாமஸ், மாட் ஹென்றி போன்ற வீரர்களில் யார் அவர் இடத்தை நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
- 16:58 (IST) 24 Apr 2021தீவிர பயிற்சியில் கொல்கத்தா அணியினர்...!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்றைய ஆட்டத்தில் எதிர் கொள்ளவுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Looking in good touch with rrvkkr round the corner 🏏👌🏼
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2021
Who are you looking forward to the most?@RealShubmanGill@NitishRana_27@DineshKarthik@tripathirahul52@Russell12A@patcummins30kkrhaitaiyaaripl2021pic.twitter.com/2IxJQxy5kx - 16:54 (IST) 24 Apr 2021நேருக்கு நேர்
இதுவரை நடந்த 22 ஆட்டங்களில் 12ல் கொல்கத்தா அணி வென்றுள்ளது. 10 ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுள்ளது.
- 16:51 (IST) 24 Apr 2021உத்தேச அணி விபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், ரியான் பராக், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ராகுல் தவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால் / ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
கே.கே.ஆர்: சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா, மற்றும் வருண் சக்ரவர்த்தி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.