IPL 2021 live updates: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டிகள் பூட்டப்பட்ட மைதானங்களில் நடைபெற்று வந்தாலும் ரசிகர்களின் வரவேற்புக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவிற்கு உள்ளது. இந்த நிலையில் தொடரின் 4வது போட்டியின் நாளான இன்று, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு துவங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டிகளில் இந்த இரு அணிகளுமே அசாத்தியமாக ரன்களை குவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். எனவே இன்றைய போட்டியில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி, முஸ்தாபிஜூர் ரஹ்மான், ஆண்ட்ரூ டை, ஜோஃப்ரா ஆர்ச்சர், மாயங்க் மார்க்கண்டே, அனுஜ் ராவத், சேதன் சகரியா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, கே.சி. காரியப்பா, மஹிபால் லோமர், ஆகாஷ் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பிரப்சிம்ரன் சிங், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, மொய்சஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் சிங் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதற் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. சிறப்பாக பந்து வீசிய அந்த அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகளை விளாசி 119 ரன்கள் சேர்த்தார்.
This one went down to the wire! Sanju goes for the big shot over cover, but doesn't get all of it. Taken. @PunjabKingsIPL win by 4 runs.#vivoipl #rrvpbks pic.twitter.com/HklxqlAGY2
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
54 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகளை பறக்கவிட்ட சஞ்சு, கேப்டனாக தனது முதல் போட்டியிலே சதத்தை பதிவு செய்துள்ளார்
15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் அணி, 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தால் அதன் இலக்கை அடையலாம். தொடர்ந்து போராடி வரும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.
தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்ட ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் ரிச்சர்ட்சன் 7.3 ஓவரில் 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தற்போது ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 சேர்த்துள்ளது.
Bowled!Jhye Richardson with his first wicket as Buttler is bowled for 25.Live – https://t.co/WNSqxT6ygL #rrvpbks #vivoipl pic.twitter.com/uUktD5zZl4
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
222 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்திலே அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பஞ்சாப். அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் பூஜ்யத்தில் வெளியேற, மறுமுனையில் நின்ற மனன் வோஹ்ரா 12 ரன்களில் நடையை கட்டினார்.
.@MdShami11 starts the proceedings with the ball and strikes in the third delivery. Ben Stokes departs for a duck.Live – https://t.co/PhX8FyJiZZ #rrvpbks #vivoipl pic.twitter.com/VY901EPUpO
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் 64 ரன்களுடன் தீபக் ஹூடா ஆட்டமிழ்க்கவே, மறுமுனையில் போரடியா கேப்டன் ராகுல் 50 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளை பறக்கவிட்டு 91 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ராகுல் சேதன் சகரியா பந்து வீச்சில் தெவதியா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஓவர்களில் ரன்களை வாரி கொடுத்த ராஜஸ்தான் அணி இறுதி ஓவர்களில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியது.
6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 222 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
கெயிலின் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா கேப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியின் விக்கெட் சரிவை கட்டுப்படுத்தியதோடு, இருவருமே அரைசதம் கடந்தனர்.
மாயங்க் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய 'யூனிவெர்ஸ் பாஸ்' கிறிஸ் கெயில் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி, ரியான் பராக் வீசிய 9.5 ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து 40 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
9 பந்துகளில் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு மாயங்க் அகர்வால் சேதன் சாகரியா வீசிய 2.4 ஓவரில் கீப்பர் சஞ்சு வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து 'சிக்ஸர் மன்னன்' கிறிஸ் கெய்ல் களம் காண்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் இன்னிங்ஸை துவங்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
மானன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன் விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்
பஞ்சாப் கிங்ஸ் அணி
கே.எல்.ராகுல் (கேப்டன் விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இது குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். 11 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய உள்ளன. மோரிஸ், ஸ்டோக்ஸ், பட்லர் வெளிநாட்டு வீரர்களின் வருகையால் நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் ஷெல்டன் கோட்ரலின் ஓவரில் ஐந்து சிக்ஸர்களை அடித்த ராகுல் திவாத்தியா, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான இன்னிங்ஸில் விளையாடினார். அவரது அரைசதம் கடந்த ஆண்டு 224 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த பஞ்சாப் அணிக்கு உதவியது. 14 போட்டிகளில் 255 ரன்கள் எடுத்த திவாத்தியாவின் பேட்டிங் சராசரி 42.50 ஆகும். இந்த சீசனிலும் தனது பேட்டிங்கால் அந்த அணியை மிரள வைப்பாரா?
கடைசியாக ராஜஸ்தான் பஞ்சாப் அணிகள் மோதியபோது கிறிஸ் கெய்ல் 99 ரன்கள் குவித்தார். அப்போது ராஜஸ்தான் அணியில் அதிக ரன்களை வழங்கிய முக்கிய பந்து வீச்சாளராக ஜோஃப்ரா ஆர்ச்சர் இருந்தார். தற்போது காயம் காரணமாக ஜோஃப்ரா இல்லாத நிலையில், இந்த முறை கிறிஸ் மோரிஸ் மற்றும் முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஆண்ட்ரூ டை போன்றோர்களில் யார் ரன்களை அள்ளி கொடுக்க உள்ளார்கள் என்பதை இன்றை போட்டியில் பார்க்கலாம்.
The last time they faced #rr, one missed by just a run while the other one scored a 🤩 ton 💥#saddapunjab #punjabkings #ipl2021 #rrvpbks pic.twitter.com/yAHFN0EXwx
— Punjab Kings (@PunjabKingsIPL) April 12, 2021
Come on @rajasthanroyals!! 👊👌 pic.twitter.com/BQ8iKzEloq
— Ben Stokes (@benstokes38) April 12, 2021
பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பர் 3 அல்லது 4 இல் களமிறங்குவாரா அல்லது ஜோஸ் பட்லருடன் துவக்க வீரராக களமிறங்கிவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் துவக்க வீரராக களமிறங்கினால் இன்றைய ஆட்டம் நிச்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் 21 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 8, ராஜஸ்தான் 12ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. இதில் பஞ்சாப் அணி 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், ஜெய் ரிச்சர்ட்சன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி
கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி, அதன்பின் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் கடந்த சீசனில் 8 தோல்விகளுடன் கடைசி இடம் பிடித்தது. எனவே இந்தாண்டின் துவக்க போட்டியிலே வெற்றி பெரும் முனைப்பில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் துவக்க வீரர்களாக களமிறங்கலாம். தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சஞ்சு சாம்சன், 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ், டேவிட் மில்லர் போன்றோர் பேட்டிங்கில் கைகொடுக்க வாய்ப்புள்ளது.
பந்து வீச்சில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாதது ஓரளவு பின்னடைவாக இருக்கலாம். இருப்பினும், அந்த அணியின் கிறிஸ் மோரிஸ், உனத்கட், ஆன்ட்ரூ டை வேகத்தில் கலக்க உள்ளனர். சுழலுக்கு ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் டிவாட்டியா, ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டன் போன்றோர் உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் பைனல் வரை சென்ற பஞ்சாப் அணி, கடந்த சீசனில் 12 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்து 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. மேலும் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கேப்டன் லோகேஷ் ராகுல் (670 ரன்), மயங்க் அகர்வால் (424) ஜோடி இன்றைய போட்டியில் நல்ல துவக்கம் தரும் என எதிர்பார்க்கலாம். 'யுனிவர்சல் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், மீண்டும் பழைய 'பார்முக்கு' திரும்பி ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது.
சர்வதேச 'டுவென்டி-20'யில் 'நம்பர்-1' பேட்ஸ்மேனாக வலம் வரும் அந்த அணியின் டேவிட் மலான், நிக்கோலஸ் பூரன், தமிழகத்தின் ஷாருக்கான், மன்தீப் சிங், தீபக் ஹூடா, சர்பராஸ் கான் போன்ற பெரும் படையை கொண்டுள்ள அந்த அணி, இன்றைய போட்டியில் நல்ல ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
பந்து வீச்சை பொறுத்தவரை, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் வீரராக உள்ளார். கடந்த முறை 20 விக்கெட் சாய்த்த இவர், மீண்டும் கைகொடுப்பார் என நம்பலாம். அவருடன் கிறிஸ் ஜோர்டான், ஜே ரிச்சர்ட்சன் உள்ளிட்டோர் இணைந்து கலக்க வாய்ப்புள்ளது.'சுழலில்' தமிழகத்தின் முருகன் அஷ்வின், ரவி பிஷ்னாய் சாதிக்க காத்திருக்கின்றனர்.