விராட் கோலி படைக்கு 2-வது வெற்றி: போராடி தோற்ற ஐதராபாத்

SRH vs RCB Live updates: சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது

IPL 2021 Live Updates: Sunrisers Hyderabad take on Royal Challengers Bangalore  in their second game

IPL 2021 Live Updates: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றியுடன் துவங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்றைய ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. அதே மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில், கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கலக்கிய பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல் களம் காணுவார் என எதிர்பார்க்கலாம். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் பலத்தை நிரூபித்த பெங்களூரு அணி இன்றை ஆட்டத்திலும் திறம்பட செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதே மைதானத்தில் அதன் முதல் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோல்வியை தழுவியது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தவிர மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். பேட்டிங்கிலும் அந்த அணி பெரிதும் சோபிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த கேப்டன் டேவிட் வார்னர், இன்றை ஆட்டத்தில் பேட்டை சுழற்ற வேண்டிய காட்டயத்தில் உள்ளார். இந்த போட்டியில் களம் காணாத முன்னணி வீரர் கேன் வில்லியம்சன், இன்றைய ஆட்டத்தில் நிச்சம் களமிறங்க வாய்ப்புள்ளது.

தங்கள் அணியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய காட்டாயத்தில் உள்ள ஐதராபாத் அணி இன்றை ஆட்டத்தில் அசத்தும் என நம்பலாம். மறுபுறம் கேப்டன் கோலி தலைமையில் களமிறங்கும் பெங்களூரு அதன் பலத்தை இந்த ஆட்டத்திலும் நிரூபிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Live Updates
6:10 (IST) 14 Apr 2021
6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய ஐதராபாத் அணியில் துவக்க வீரர் சாஹா அவுட் ஆகிய நிலையிலும், அந்த அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த கேப்டன் வார்னர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார், மறுமுனையில் இருந்த மனீஷ் பாண்டே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைவார் என எதிர்பார்க்கையில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு 38 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்த களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் ஆட்டத்தின் இறுதியில் கட்டத்தில் களமிறங்கி அணியை கரை சேர்க்க போராடிய ரஷீத் கான் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை சிதறவிட்டு ஆட்டமிழந்தார். இலக்கை போராடி துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் வென்றுள்ள கேப்டன் கோலி தலைமையிலான பெங்களூரு அணி அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் துல்லியமாக பந்து வீசிய ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், கைல் ஜேமீசன் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

5:23 (IST) 14 Apr 2021
ரன் சேர்க்க தடுமாறி வரும் ஐதராபாத் அணி!

பந்து வீச்சை தேர்வு செய்து தற்போது பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அதன் முன்னணி வீரர்களை பறி கொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பெங்களூரு அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை சாய்துள்ளார். ஐதராபாத் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 34 தேவை.

5:00 (IST) 14 Apr 2021
அரைசதம் கடந்த வார்னர் அவுட்

150 வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ஐதராபாத் அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்துள்ளது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர் 36 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

4:25 (IST) 14 Apr 2021
6 ஓவர்களில் ஐதராபாத் 50/1

பெங்களூரு அணிக்கு எதிரான 150 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ஐதராபாத் அணி பவர்பிளே ஓவர்களான 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. விருத்திமான் சஹா 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

3:43 (IST) 14 Apr 2021
ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஆல்-ரவுண்டர் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், இறுதி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும்,புவனேஷ்வர் குமார், டி நடராஜன், ஷாபாஸ் நதீம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

3:37 (IST) 14 Apr 2021
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் பெங்களூரு அணி!

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது.

3:33 (IST) 14 Apr 2021
ரன் குவிக்க தடுமாறும் ராயல் சேலஞ்சர்ஸ்…!

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கோலி தேவதூத் படிக்கல் ஜோடியில் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழகவே, ஆல்-ரவுண்டர் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

மறுமுனையில் இருந்த கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் கேப்டன் கோலியோ 4 பவுண்டரிகளை ஓடவிட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போது அந்த அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், கைல் ஜேமீசன் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது

2:02 (IST) 14 Apr 2021
ஆட்டம் இனிதே ஆரம்பம்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், முதல் ஓவரை அந்த அணியின் பந்து வீச்சாளர் வீசுகிறார். பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள பெங்களூரு அணியில் துவக்க வீரர்கள் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் களத்தில் உள்ளனர்.

1:52 (IST) 14 Apr 2021
இரு அணிகளில் களமிறங்கும் வீரர்கள் விபரம் பின்வருமாறு

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், ஷாபாஸ் நதீம்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோஹ்லி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

1:48 (IST) 14 Apr 2021
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சு தேர்வு..!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

1:22 (IST) 14 Apr 2021
நேருக்கு நேர்…!

இதுவரை 17 போட்டிகளில் நேருக்கு நேராக சந்தித்துள்ள இந்த இரு அணிகளில், 10 முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 7 முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வென்றுள்ளன.

12:07 (IST) 14 Apr 2021
ஆர்.சி.பிக்கு எதிராக 600 ரன்கள் – சாதனையை அடைவாரா வார்னர்?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்டை சுழற்ற வேண்டிய காட்டாயத்தில் உள்ள ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரிகளில் ஆர்.சி.பிக்கு எதிராக 600 ரன்கள் சேர்க்கவுள்ள வீரராக இருக்கிறார். இந்த ஆட்டத்தில் அந்த சாதனையை அடைவாரா வார்னர்?

11:56 (IST) 14 Apr 2021
தீவிர பயிற்சியில் ஐதராபாத் அணி…!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்திற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி.

11:04 (IST) 14 Apr 2021
உத்தேச அணி விபரம்

ஐதராபாத் சன்ரைசர்ஸ்

டேவிட் வார்னர் (கேப்டன்), மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா, ஜானி பேர்ஸ்டோ, அப்துல் சமத், விஜய் சங்கர், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், சந்தீப் சர்மா

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், தேவதட் பாடிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷாபாஸ் அகமது

11:02 (IST) 14 Apr 2021
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு

ஐதராபாத் சன்ரைசர்ஸ்

டேவிட் வார்னர் (கேப்டன்), கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஸ்ரீவத் கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), பிரியாம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், விராட் சிங் , ஜேசன் ஹோல்டர், முகமது நபி, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், சந்தீப் சர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல், பசில் தம்பி, ஜெகதீஷா சுசித், கேதார் ஜாதவ், முஜீப்-உர்-ரஹ்மான்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

விராட் கோஹ்லி (கேப்டன்), தேவதட் பாடிக்கல், ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜாம்பா, ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ் கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பாட்டீதர், முகமது அசாருதீன், கைல் ஜேமீசன், டேனியல் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ் பாரத்

Web Title: Ipl 2021 live updates sunrisers hyderabad take on royal challengers bangalore in their second game

Next Story
மீடியமான ஸ்கோரை கூட துரத்த முடியாத கொல்கத்தா: மும்பை வெற்றிIPL 2021 Live Updates: Mumbai Indians look for victory against confident Knight Riders
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com