Ipl 2021 MI VS RCB : ஐபிஎல் தொடரின் 14வது சீசனின் முதல் போட்டி இன்று துவங்கியுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கி பேட்டிங் செய்து வரும் மும்பை அணி, தனது முதல் போட்டியிலே அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. அந்த அணியின் அறிமுக துவக்க வீரர் கிறிஸ் லின், களமிறங்கிய முதல் போட்டியிலே 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்டியுள்ளார்.
தற்போது அந்த அணியில் மற்றொரு அறிமுக வீரராக உள்ள வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன், கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டையை வீழ்த்துவதற்காக குறி வைத்து களமிறக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
இளம் வீரர் மார்கோ ஜான்சன் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்தவர். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் மட்டும் விளையாடிய இவர், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இவர் களமிறப்படவில்லை. இருப்பினும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர்களின் போது, இந்திய அணிக்கான வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலி பந்து வீசிய இவர் பல முறை அவரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மற்றும் இவரது துல்லியமான பந்து வீச்சில் கேப்டன் கோலியையே திணறடித்துள்ளார்.
எனவே இவரை தொடர்ந்து பாலோ செய்த மும்பை அணி, அவரின் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால், சாதுரியமாக அவரை தேர்வு செய்து கேப்டன் கோலிக்கு எதிராக களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் கோலியின் விக்கெட்டை ஜென்சன் வீழ்த்துவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)