IPL 2021 Points Table Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 171 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் கண்ட சென்னை 18.3 ஓவர்களிலேயே நிர்ணயித்த இலக்கை அடைந்தது. சிறப்பாக ஆடிய துவக்க வீரர்கள் ருதுராஜ், பிளிஸ்சிஸ் அரைசதம் கடந்தனர். மேலும் 12 பவுண்டரிகளை ஓடவிட்ட ருதுராஜ் 75 ரன்கள் சேர்த்தார்.
கடந்த செவ்வாய் கிழமை டெல்லி அணிக்கெதிராக நடந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கேப்டன் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் சென்னை அணியை முந்தி முதல் இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தனது 5-வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு தாவியுள்ளது. 7 ரன்களில் தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி பட்டியலில் கடைசி இடத்திற்கு நகர்ந்துள்ளது. மேலும் அந்த அணி இதுவரை நடந்த 6 லீக் ஆட்டங்களில் 1ல் வெற்றியையும் மற்ற 5ல் தோல்வியையும் தழுவியது குறிப்பிடத்தக்கது.
6 ஆட்டங்களில் 4ல் வெற்றியை சுவைத்த டெல்லி அணி 8 புள்ளிகளுடன் அட்டவணையின் 3வது இடத்திலும், 5 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்ற மும்பை அணி 4வது இடத்திலும், 6 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்ற கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் 5, 6, 7 ஆகிய இடங்களில் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)