சிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்

MI VS CSK Team predicted and playing 11 Tamil News: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2021 Preview: MI VS CSK Team predicted and playing 11

IPL 2021 Preview: தொடரில் நடந்த 6 லீக் ஆட்டங்களில் 3ல் வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. சரியான துக்கம் கிடைக்காமல் தவித்து வந்த தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி கோக் இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ரோகித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மிடில்-ஆடரில் சொதப்பிய மும்பை அணியின் கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, போன்ற வீரர்கள் மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்பியுள்ளனர். சுழலில் மிரட்டி வரும் ராகுல் சாஹர் அந்த அணியின் சிம்ம சொப்பனமாக உள்ளார். மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்துகளை வீசி மிரட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த தொடரில் பிளே-ஆஃப் சுற்றோடு வீடு திரும்பிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி அணிக்கெதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவிய அந்த அணி, தொடர்ந்து நடந்த 5 ஆட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்துள்ளது. தொடக்க ஆட்டங்களில் தடுமாறிய துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (ஆட்டங்களில் 192 ரன்கள்) திடமான நிலையில் உள்ளார். அவருடன் மறுமுனையில் களம் காணும் ஃபாஃப் டு பிளெசிஸ் (270 ரன்கள்) வழக்கம் போல் தனது ரன் வேட்டையை தொடர்ந்துள்ளார்.

சென்னை அணிக்கு மிகச் சிறப்பான துவக்கம் தந்து வரும் இந்த ஜோடி, தொடர்ந்து 3 ஆட்டங்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளது. தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் வலுவான துவக்கம் கொடுக்குமா? என்பதை பார்க்கலாம். பந்து வீச்சை பொறுத்தவரை மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, லுங்கி என்ஜிடி, தீபக் சாஹர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மொத்தத்தில் பலம் பொருத்திய அணியாக வலம் வரும் இந்த இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ரசிகர்கள் செம வெய்ட்டிங்கில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 preview mi vs csk team predicted and playing 11

Next Story
டெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்!IPL 2021 Updates: DC vs KKR and MI vs RR Match Highlights
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com