தோனிக்கு 'ஸ்பெஷல் சாங்' டெடிகேட் செய்த ஆஸ்கர் நாயகன்!

AR Rahman Dedicates Special Song to CSK Skipper MS Dhoni Tamil News: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்காக பாடல்களை டெடிகேட் செய்துள்ளார்.

AR Rahman Dedicates Special Song to CSK Skipper MS Dhoni Tamil News: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்காக பாடல்களை டெடிகேட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: AR Rahman Dedicates Special Song to CSK Skipper MS Dhoni

IPL 2021 Tamil News: ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'லகான்' என்ற இந்தி திரைப்படத்தில் வரும் 'சேல் சலோ' (Chale Chalo) பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு டெடிகேட் செய்வதாக கூறியுள்ளார். இந்த பாடல் வீரர்களை ஒன்றாக விளையாட தூண்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு பாடலையும் டெடிகேட் செய்துள்ளார்.

Advertisment

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், சி.எஸ்.கே நட்சத்திரங்கள் தோனி மற்றும் ரெய்னா ஆகியோருக்கு பாடல்களை டெடிகேட் செய்வதாக கூறினார். "லாகான் திரைப்படத்திலிருந்து எம்.எஸ். தோனிக்கு 'சேல் சாலோ' பாடலை டெடிகேட் செய்ய விரும்புகிறேன், ஏனெனில் இது வீரர்களை ஒன்றாக கிரிக்கெட் விளையாட தூண்டுகிறது. ரெய்னாவுக்கு 'மங்தா ஹை க்யா' பாடலை டெடிகேட் விரும்புகிறேன். ஏனென்றால் நான் பெங்களூருக்குச் செல்லும் போதெல்லாம் அவர் ரங்கீலா படத்தில் வரும் இந்த பாடலை நிறைய முறை கேட்டுக்கொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Cricket Sports Ms Dhoni Suresh Raina Chennai Super Kings Csk Vs Pbks A R Rahman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: