/tamil-ie/media/media_files/uploads/2021/04/ipl-2021-8-1.jpg)
IPL 2021 Tamil News: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செயப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், விரலில் ஏற்பட்ட காயத்தால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். காயத்தில் இருந்து மீள முடியாத அவர் தொடர் இருந்து விலகி இருப்பதாக ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் தெரிவித்தது.
தற்போது ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ் சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தின் ஆடுகளம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். "சென்னையின் ஆடுகளம் குப்பை போன்ற ஆடுகளமாக இருப்பதால், 160 முதல் 170 வரை ரன்கள் சேர்க்கும் அணிகளால் 130 அல்லது 140 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகள் உச்சத்தில் உள்ள போது ஆடுகளம் மோசமாகிவிடாது என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
Hope the wickets don’t get worse as the @IPL gets deeper into the tournament..160/170 minimum not scraping to 130/140 cause the wickets are trash..
— Ben Stokes (@benstokes38) April 23, 2021
இங்கு நடந்த நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 131 ரன்கள் மட்டுமே சேர்த்து. இந்த எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 17.4வது ஓவரிலேயே எட்டியது.
சென்னையில் இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் 2 ஆட்டத்தில் மட்டுமே 170 ரன்கள் சேர்க்கப்பட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 204 ரன்களைக் குவித்தது. மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.