Advertisment

ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய 'பிரட் லீ'- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்....!

Brett Lee Becomes Hairdresser to Scott Styris Tamil News: தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்க்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ஹேர் கட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

author-image
WebDesk
Apr 15, 2021 22:59 IST
IPL 2021 Tamil News: Brett Lee Becomes Hairdresser to Scott Styris

IPL 2021 Tamil News: இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் இன்னும் நீடித்து வருவதால், இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் முடி திருத்த சலூனுக்கு செல்வது கடினம் என்பதால், நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் 'ஸ்காட் ஸ்டைரிஸ்' தனக்கான ஹேர் ஸ்டைலிஸ்டை கண்டுபிடித்துள்ளார். அந்த 'ஹேர் ஸ்டைலிஸ்ட்' வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்  வேகப்பந்து வீச்சாளர் 'பிரட் லீ' தான். 

Advertisment

 பிரட் லீ முடி திருத்தும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஸ்டைரிஸ், "எங்களது உயிர் குமிழி பாதுகாப்பு அறையில் சிகையலங்கார நிபுணர் யாரும் இல்லை, எனவே கத்தரிக்கோலால்  பிரட் லீ உதவுகிறார்” என்று பதிவிட்டுள்ளார். 

ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்களாக இருக்கும் இந்த ஜோடியின் வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களால்  பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும்  பிரட் லீ சிறப்பான வேலையை செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதில் ஒரு ரசிகர் பதிவிட்டுருந்த கமெண்ட்க்கு பதிலளித்த ஸ்டைரிஸ், "இது போன்ற கூலான ஹேர் ஸ்டைலிஸ் செய்வதை முயற்சி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகரின் கமெண்ட்க்கு பதிலளித்துள்ள பிரட் லீ ஹா... ஹா... என்று பதிவிட்டுள்ளார். 

இந்தாண்டுக்கான ஐபிஎல் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

#Cricket #Brett Lee #Sport #Ipl Cricket #Ipl #Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment