Deepak Chahar Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு துபாயில் நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சுடன் மோதியது. சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 13 வது ஓவர் முடிவிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 98 ரன்கள் (42 பந்துகளில், 8 சிக்ஸர், 7 பவுண்டரி உட்பட) குவித்தார்.

இந்த நிலையில், இப்போட்டி முடிந்த தருணத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அது என்னெவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், போட்டியின் முடித்த பிறகு தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவரது காதலி, திகைத்துப்போய் நின்ற நிலையில், தீபக் சஹாரின் காதலை ஏற்றுக்கொண்டார்.

சாஹர் தனது காதலிக்கு கிரிக்கெட் மைதானத்தில் லவ் ப்ரொபோஸ் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Now that's how you knock it outta the park! 💍♥️
— Star Sports (@StarSportsIndia) October 7, 2021
Congratulations, Deepak Chahar!#VIVOIPL | #IPL2021 | @deepak_chahar9 pic.twitter.com/WOBpeh3mif
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil