Advertisment

இதற்குத்தான் அவ்ளோ பில்டப் கொடுத்தீங்களா? என்ன ஆனார் புஜாரா?

CSK senior player Cheteshwar Pujara Tamil News: இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் மூத்த வீரர் புஜாராவுக்கு சென்னை அணி வாய்ப்பு வழங்கங்காமல் புறக்கணித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: csk player Cheteshwar Pujara not present in net practice

IPL 2021 Tamil News: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்தாண்டு துவக்கத்தில் சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அணியில் சில வீரர்களை விடுவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலத்தின் போது கிறிஸ் மோரிஸ், க்ளென் மேக்ஸ்வெல் போன்ற ஆல்-ரவுண்டர் வீரர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டியது. போட்டியும், விலையும் அதிகமாகவே அதிலிருந்து பின் வாங்கியது. இருப்பினும், மொயின் அலி, கவுதம் கிருஷ்ணப்பா போன்ற ஆல்-ரவுண்டர் வீரர்களை ஏலத்தில் வாங்கியது.

Advertisment

இறுதியாக, இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வரலாற்றுச் சிறப்பிமிக்க வெற்றியை பெற காரணமாக இருந்த முக்கிய வீரர் புஜாராவை ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியது. இது ஏலத்தில் பங்கேற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், அதை நேரலையில் பார்த்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.

மூத்த வீரர் புஜாராவை சென்னை அணி வாங்கியது குறித்து கலவை கலந்த விமர்ச்சனங்கள் வந்தாலும், அதை தவிடு பொடியாக்கும் வகையில் அவரின் வலைப்பயிற்சி ஆட்டங்கள் இருந்தன. அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி எல்லைகளுக்கு மேல் பறக்க விட்டார். மேலும் அசத்தலான பார்மில் இருக்கும் புஜாரா துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டது. மேலும் பந்துகளை தும்சம் செய்யும் புஜாராவின் வீடியோவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பகிரப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் மூத்த வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இன்று நடக்கவுள்ள போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகமே உள்ளது. போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதால், புஜாரா பெரும்பாலும் வலைப்பயிற்சில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பூஜாவிற்கு பதிலாக பந்து வீச்சாளர் யாரையாவது தேர்வு செய்திருக்கலாம் என்றும் விமர்ச்சிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணி இன்று நடக்கும் போட்டியில் வென்று, அட்டவணையில் முன்னேற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில் கடந்த 2 ஆண்டுகள் நடந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Chennai Super Kings Cricket Ipl Ipl News Ipl 2021 Pujara Cheteshwar Pujara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment