scorecardresearch

அஸ்வின் செஞ்சது தப்புன்னா, பிராவோ பண்ணுனது மட்டும் சரியா?

Dwayne Bravo was caught taking undue advantage from the non-striker’s end goes viral Tamil News: ‘மன்காடிங்’ சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஏன் கண்டிப்பாக தேவை என்று நேற்றைய ஆட்டத்தின் போது தெளிவாகவே தென்பட்டது.

IPL 2021 Tamil News: Dwayne Bravo was caught taking undue advantage from the non-striker's end goes viral

IPL 2021Tamil News: 2019ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், அந்த அணியின் ஜோஸ் பட்லரை ‘மன்காடிங்’ ரன் அவுட் செய்தார். அஸ்வின் பந்து பந்து வீச முன்றபோது பட்லர் கிரீஸ் கோட்டை விட்டு இரண்டு அடி நகர்ந்திருந்தார். அதை பார்த்த அஸ்வின் உடனே ஸ்டெம்பில் பாலை அடித்து அவுட் கேட்டார் . நடுவரும் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அஸ்வின் பட்லரை அவுட் செய்யவில்லை என்றால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

இந்த சர்ச்சையில் அஸ்வினுக்கு ஒரு சாராரும், பட்லருக்கு ஒரு சாராரும் சப்போர்ட் செய்து கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ஆரோன் பிஞ்சை அதே போன்று அவுட் செய்ய முயற்சித்து ‘வார்னிங்’ என்று கூறினார் அஸ்வின். இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய அஸ்வின் ‘ஆரோன் எனது நண்பர்’ என்று கூறியிருந்தார்.

இப்படி ‘மன்காடிங்’ சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஏன் கண்டிப்பாக தேவை என்று நேற்றைய ஆட்டத்தின் போது தெளிவாகவே தென்பட்டது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, பந்து வீச்சாளர் முஸ்தாபிஸூர் ரஹ்மான் பந்தை ரிலீஸ் செய்யாத நிலையில் சென்னை அணியின் டுவைன் பிராவோ ‘நான் – ஸ்ட்ரைக்கர்’ திசையில் இருந்து முன்னதாக ரன் ஓட கிளப்பியது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் இணைய பக்கங்களில் வெகுவாக பகிரப்பட்டு, பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிகழ்வின் போது வர்ணனையாளராக இருந்த கிரிக்கெட் பகுப்பாய்வாளர் ஹர்ஷா போக்லே, தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மேலும் ‘மன்காடிங்’ மூலம் ரன் அவுட் செய்வது சரியே என்றும் குறிப்பிட்டார்.

உடன் வர்ணனையாளராக இருந்த முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டவுலும், ஹர்ஷா போக்லேவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் பிராவோவை ரன் அவுட் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியும் இருந்தார்.

பிராவோ ‘நான் – ஸ்ட்ரைக்கர்’ திசையில் இருந்த போது, முஸ்தாபிர் வீசிய பந்து நோ-பால் என்பதால் பிராவோக்கே சாதகமாக அமைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2021 tamil news dwayne bravo was caught taking undue advantage from the non strikers end goes viral

Best of Express