Advertisment

முன்னணி பவுலர்களை மிஸ் செய்யும் சிஎஸ்கே, டெல்லி அணிகள்: ஜடேஜாவும் சந்தேகம்தானாம்!

IPL 2021: unavailable Players list Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான லுங்கி என்ஜிடி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் துவக்க போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News IPL 2021: unavailable Players list

IPL 2021 Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14வது சீசன் அடுத்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சில அணிகளில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தொடரின் துவக்க ஆட்டங்களில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாகவும், மற்றும் சிலர் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ககிசோ ரபாடா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த சீசனின் துவக்கப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு என்பதால், தொடரில் பங்கேற்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் சிலர் கவனம் பெற வாய்ப்புள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ்

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையான ஒருநாள் ஏப்ரல் 7ம் தேதியோடுதான் முடிவடையும் என்பதால், அந்த அணியை சேந்த வீரர்கள் இந்தியா வந்து சேர கால தாமதம் ஆகும். இதனால் டெல்லி அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே முதல் மூன்று நான்கு போட்டிகளுக்கு பிறகு தான் அணியில் சேருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் தோள்பட்டை காயம் ஏற்பட்டது. காயம் குணமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான லுங்கி என்ஜிடி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் துவக்க போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி என்ஜிடி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகே சென்னை அணியோடு இணைய உள்ளார். எனவே அவர் 3 முதல் 4 போட்டிகளை மிஸ் செய்ய வாய்ப்புள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கட்டைவிரல் காயம் ஏற்பட்டது. எனவே அவர் தொடரின் துவக்க போட்டிகளில் பங்கேற்க தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “ஜடேஜா எப்போது எங்களுடன் சேருவார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சீசனில் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்த சீசனில் துவக்க போட்டிகளை தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோஃப்ரா ஆர்ச்சரின் வலது கையின் நடு விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரு வாரங்களில் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சமீபத்தில் திருமணமாகியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, தொடரில் பங்கேற்க வாய்ப்பு குறைவு என்று ஆர்.சி.பி அணியின் இயக்குனர் மைக் ஹெஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஆடம் ஜாம்பா சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு ஒரு முக்கியமான நேரம் என்று ஒரு உரிமையாளராக நாங்கள் அறிந்திருக்கிறோம், மற்றும் மதிக்கிறோம். அவருக்கு தொடரில் விளையாட சிறந்த நேரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். எனவே அவர் எங்களுடன் சேரும்போது, ​​மீண்டும் அவர் புதியவராக இருப்பார் மற்றும் மீதமுள்ள போட்டிகளில் பெரும் பங்களிப்பைச் செய்யப் போகிறார்”என்று ஹெசன் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான மிட்செல் மார்ஷ் இந்த சீசனில் பங்கேற்க போவதில்லை என கிரிக்பஸ் இணைய பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரால் உயிர் பாதுகாப்பான குமிழிக்குள் நீண்ட நேரம் செலவிட முடியாது என்று கூறியுள்ளார்.

மிட்செல் மார்ஷ் பதிலாக, சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து டி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுள் ஒருவரை ஹைதராபாத் அணி தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், துவக்க ஆட்டக்காரருமான குயின்டன் டி கோக், தென்னாப்பிரிக்க அணி விளையாடவுள்ள ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளதால், அவர் முதல் நான்கு போட்டிகளுக்குப் பிறகு தான் அந்த அணியோடு இணைவார் என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Chennai Super Kings Sports Cricket Ipl Cricket Ipl News Ipl 2021 Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment