மீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி!

IPL gambling racket busted in Delhi, Police arrest 5 Tamil News: ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்துள்ள டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Ipl 2021 Tamil News: IPL gambling racket busted in Delhi, Police arrest 5

 IPL gambling racket busted tamil news: தலைநகர் டெல்லியின் தென்கிழக்கு பகுதியான படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு பிளாட்டில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடைப்படையில் அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் (30), அஹ்சன் (30), சுனித் குமார் சின்ஹா ​​(37), முகேஷ் (42), மற்றும் முகமது ஷாஜாத் (32) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு டிவி மற்றும் ரூ .52,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 tamil news ipl gambling racket busted in delhi police arrest 5

Next Story
ஐ.பி.எல். 2021: மீண்டும் சறுக்கிய மும்பை; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி!IPL 2021 Tamil News: MI vs KKR live score and updates in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com