KKR vs RCB Highlights: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் திங்கட்கிழமை (20ம் தேதி) நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர். தடுப்பாட்டதில் ஈடுபட்ட இந்த ஜோடியில் 1 பவுண்டரியை விரட்டிய கேப்டன் கோலி 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் உடன் ஜோடி சேர்ந்த தேவதூத் படிக்கல் நிதானம் காட்டி 3 பவுண்டரி விரட்டினார். எனினும், லாக்கி பெர்குசன் வீசிய 5.6 ஓவரில் கீப்பர் தினேஷ் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து 20 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் நிதானம் காட்டுவார் என எதிர்பார்க்கையில் 10 ரன்களுடன் வெளியேறினார்.
அவருடன் மறுமுனையில் இருந்த ஸ்ரீகர் பாரத் 16 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இவரின் விக்கெட்டுக்கு பிறகு வந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் பூஜ்ஜிய ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரைத்தொடர்ந்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே 19 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் வெறும் 92 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனவே கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் மிகத்துல்லியமாக பந்து வீசி மிரட்டிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
93 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்த களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்தது. மிகச் சிறப்பாக ஆடிய சுப்மான் கில் அரைசதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 34 பந்துகளில் 48 ரன்கள் ( 1 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
எனினும், மறுமுனையில் இருந்த வெங்கடேஷ் ஐயர் ஆண்ட்ரே ரஸ்ஸலுடன் இணைந்து இலக்கை எட்ட உதவினார். பெங்களூரு அணி 19 ஓவர்களில் சேர்த்த 92 ரன்களை 10 ஓவர் முடிவிலே கொல்கத்தா அணி எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளை விளாசி 41 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
Indian Premier League, 2021Sheikh Zayed Stadium, Abu Dhabi 25 June 2022
Kolkata Knight Riders 94/1 (10.0)
Royal Challengers Bangalore 92 (19.0)
Match Ended ( Day – Match 31 ) Kolkata Knight Riders beat Royal Challengers Bangalore by 9 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
.@KKRiders outplay #rcb in all three departments to register a massive 9-wicket win, finishing the job in 10 overs flat. #kkrvrcb #vivoipl pic.twitter.com/h7Iok1aSeb
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
.@KKRiders outplay #rcb in all three departments to register a massive 9-wicket win, finishing the job in 10 overs flat. #kkrvrcb #vivoipl pic.twitter.com/h7Iok1aSeb
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி தலா 1 சிக்ஸர்களை பறக்க விட்டு அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்த்துள்ளது. அணியின் வெற்றிக்கு 66 பந்துகள் இருக்க 11 ரன்கள் மட்டுமே தேவை.
பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி துவக்கம் கொடுத்துள்ளனர்.
சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி 3 பவுண்டரிகளை விரட்டி 3 ஓவர்கள் முடிவில் 22 ரன்களை சேர்த்துள்ளது.
ஐபிஎல்லில் ஆர்சிபி அணி சேர்த்த குறைந்த ஸ்கோர் பட்டியல்:
49 கே.கே.ஆர் vs கொல்கத்தா 2017
70 ஆர் ஆர் vs அபுதாபி 2014
70 சிஎஸ்கே – சென்னை 2019
82 கே.கே.ஆர் – பெங்களூரு 2008
87 சிஎஸ்கே – போர்ட் எலிசபெத் 2009
92கே.கே.ஆர் – அபுதாபி 2021 *
டாஸ் வென்று களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓவர்களில் 92 ரன்கள் மட்டும் சேர்த்தது. எனவே இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 93 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வரும் பெங்களூரு அணி 100 கடக்குமா என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சுழலில் மிரட்டி வரும் வருண் சக்கரவர்த்தியின் பந்தை விரட்ட முயன்று கைல் ஜேமிசன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியில் அறிமுகமாகிய வீரர் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா பேட்டிங்கிலும் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன் ஏதுமின்றி வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்
படிக்கல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 10 ரன்களுடனும், ஸ்ரீகர் பாரத் விக்கெட்டுக்கு பிறகு வந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் பூஜ்ஜிய ரன்னுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கோலி – படிக்கல் ஜோடியில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அவருடன் மறுமுனையில் இருந்த தேவதூத் படிக்கல் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களமிறங்கிய நிலையில், சரியான துவக்கம் கிடைக்காத கோலி 5 ரன்கள் மட்டும் எடுத்து பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
கோலி ரிவியூ எடுத்த நிலையில், அவர் அவுட் என ரிவியூ காண்பிக்கப்படுகிறது.
😀😀😀😀😀 LOL#ipl2021 #ipl2o21 #viratkohli pic.twitter.com/gYGfCcnnXG
— waquar haider (@waquarhaider10) September 20, 2021
பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதும் இன்றை ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களமிறங்கியுள்ளனர்.
பெங்களூரு அணிக்காக கேஎஸ் பாரத் மற்றும் வனிந்து ஹசரங்கா அறிமுகமாகிறார்கள். இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி அசத்தியவர் வனிந்து ஹசரங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
KS Bharat and Hasaranga debut for RCB! 🤩Drop a ❤️ to wish them the best, 12th Man Army! #playbold #wearechallengers #ipl2021 #kkrvrcb #1team1fight pic.twitter.com/Y96541WmpR
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 20, 2021
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தனது அணியினருடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
“This is how we celebrate as a team” The birthday boy puts his seal of approval on getting a cake-smash 🤣#orangearmy #orangeornothing #ipl2021 pic.twitter.com/5K7OCVLnKn
— SunRisers Hyderabad (@SunRisers) September 20, 2021
பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ்:
விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் ஜேமிசன், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மேன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
A look at the Playing XI for #kkrvrcb Live – https://t.co/1A9oYR0vsK #kkrvrcb #vivoipl https://t.co/t8EnfWPf10 pic.twitter.com/bR50WVg543
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதும் இன்றை ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்த 7 வது இந்திய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 11 வது வீரர் என்ற பெருமையை பெற தினேஷ் கார்த்திக்-க்கு இன்னும் 54 ரன்கள் தேவை.
மேலும், ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளைப் பெற்ற விக்கெட் கீப்பர் ஆவதற்கு அவர் இன்னும் இரண்டு கேட்ச் பிடிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் இதுவரை 113 கேட்ச்களை பிடித்துள்ளார். ஆனால், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி இதுவரை 114 கேட்ச்கள் பிடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
இந்த போட்டியில் கேப்டன் கோலி களமிறங்குவதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஒட்டுமொத்தமாக, அவர் இந்த சாதனையைப் பெறும் ஐந்தாவது நபராக இருப்பார்.
மேலும், 10,000 டி 20 ரன்களை கடந்த முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்த ஐந்தாவது வீரர் ஆவதற்கு அவருக்கு இன்னும் 71 ரன்கள் தேவை.
இதுவரை நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் 27 முறை நேருக்கு நேராக சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 வெற்றிகளுடனும், பெங்களூரு அணி 13 முறை வெற்றியும் பெற்றுள்ளது. வெற்றி பதிவை பெங்களூரு அணி சமன் செய்யுமா? என இன்றை ஆட்டத்தில் பார்க்கலாம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இல்லாத நிலையில், பவர்பிளேஸில் பந்து வீசக்கூடிய ஒரு ஸ்பின்னரை அவர்கள் இழந்துள்ளனர். இருப்பினும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவின் வரவு அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் ஜார்ஜ் கார்டன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் உள்ளார். அவர் கென்ட் அணிக்கெதிராக சசெக்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் ஆர்சிபி அணி முன்னேறுவதற்கு ஒரு கூடுதல் பலமாக உள்ளார்.
கைல் ஜேமிசன் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று மாலை 7:30 மணிக்கு அபுதாபியில் அரங்கேறும் 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.