MI vs KKR live score updates and match highlights in tamil ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று இரவு (வியாழக்கிழமை) நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியான கொல்கத்தா நைட் ரைடர்சை அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்சை அணியின் கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் குயின்டன் டி காக் – ரோஹித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 56 ரன்கள் குவித்தது. 4 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு (கொல்கத்தா அணி) எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த முயற்சித்த அவர், 9.2 ஓவரில் சுனில் நரேன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே, பின்னர் வந்த இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார் தொடக்க வீரர் குயின்டன் டி காக். 42 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசிய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த டி காக் பிரசித் கிருஷ்ணா வீசிய 14.5 ஓவரில் சுனில் நரேன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 1 சிக்ஸரை பறக்க விட்டு 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
4 விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த கீரான் பொல்லார்ட் – க்ருனால் பாண்டியா ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. 1 சிக்ஸர் 2 பவுண்டரியை விரட்டிய பொல்லார்ட் ரன் – அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த க்ருனால் பாண்டியா கொல்கத்தாவின் லோக்கி பெர்குசன் வீசிய (19.3) அதே ஓவரில் அவுட் ஆனார்.
இவர்களைத் தொடர்ந்து வந்த சவுரப் திவாரி 5 ரன்களுடனும் மில்லனே 1 ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து இருந்தது. கடைசி 10 ஓவர்களில் பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லோக்கி பெர்குசன் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர். சுழலில் மிரட்டிய சுனில் நரேன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
156 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு வலுவான ஒரு தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 1 சிக்ஸர் 1 பவுண்டரி விளாசிய நிலையில் பும்ராவின் வேகத்தில் சிக்கி 13 ரன்களுடன் வெளியேறினார்.
எனவே மறுமுனையில் இருந்த வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் திரிபாதி. ரன் ரேட்டை உயர்த்த நிதானம் கலந்த அதிரடியை காட்டிய இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 63 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 10 ஓவர் முடிவில் 111 ரன்கள் சேர்த்த நிலையில், 26 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசிய வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ராகுல் திரிபாதியும் 29 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டுக்கு பிறகு ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த இயோன் மோர்கன் 1 சிக்ஸர் அடித்த நிலையில் பும்ராவின் வேகத்தில் சுருட்டப்பட்டு அவுட் ஆனார். களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்த திரிபாதி (42 பந்துகளில் 74 ரன்கள், 3 சிக்ஸர் 8 பவுண்டரிகள் உட்பட) தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதனால், மும்பை அணி நிர்ணயித்த 156 இலக்கை கொல்கத்தா அணி 15.1 ஓவரிலே எட்டி பிடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீண்டும் தொடங்கியுள்ள தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளை ருசித்துள்ள அந்த அணி புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2 தோல்வியால் துவண்டுள்ள மும்பை அணி 6 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Indian Premier League, 2021Sheikh Zayed Stadium, Abu Dhabi 12 August 2022
Mumbai Indians 155/6 (20.0)
Kolkata Knight Riders 159/3 (15.1)
Match Ended ( Day – Match 34 ) Kolkata Knight Riders beat Mumbai Indians by 7 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார்.
Another all-round performance 💪Another incredible win for @KKRiders as they beat #mumbaiindians by 7 wickets 👍Scorecard 👉 https://t.co/SVn8iKC4Hl#vivoipl #mivkkr pic.twitter.com/kEgrkLi4KH
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
Here's how the #vivoipl Points Table looks after Match 34 👇 #mivkkr pic.twitter.com/pM3jh5pme6
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டுக்கு பிறகு ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த இயோன் மோர்கன் 1 சிக்ஸர் அடித்த நிலையில் பும்ரா வேகத்தில் அவுட் ஆனார்.
3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசிய வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தை பதிவு செய்து 53 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ராவின் வேகத்தில் சிக்கி வெளியேறினார்
29 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசியுள்ள ராகுல் திரிபாதி தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
5⃣0⃣ for @tripathirahul52! 👍 👍The right-hander completes a quickfire half-century as @KKRiders continue to make merry with the bat. 👏 👏 #vivoipl #mivkkrFollow the match 👉 https://t.co/SVn8iKC4Hl pic.twitter.com/gfxWICzlio
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
26 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசியுள்ள வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
𝐀 𝐅𝐀𝐍𝐓𝐀𝐒𝐓𝐈𝐂 𝐅𝐈𝐅𝐓𝐘 🔥🔥#venkateshiyer – Remember the name 🙌#mivkkr #kkr #amikkr #korbolorbojeetbo িKKR #ipl2021 #crickettwitter pic.twitter.com/H5Q1smRdRC
— KolkataKnightRiders (@KKRiders) September 23, 2021
ரன் ரேட்டை உயர்த்த நிதானம் கலந்த அதிரடி காட்டி வரும் வெங்கடேஷ் ஐயர் – ராகுல் திரிபாதி ஜோடி 10 ஓவர் முடிவில் 111 ரன்கள் சேர்த்துள்ளது.
ராகுல் திரிபாதி 43 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் பவர் பிளேயில் கொல்கத்தா அணி 1 விக்கெட்டை இழந்துள்ள நிலையில், 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 63 ரன்கள் சேர்த்துள்ளது.
ராகுல் திரிபாதி 16 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
End of powerplay!6⃣3⃣ runs for @KKRiders as they are off to a flying start in the chase1⃣ wicket for @mipaltan Follow the match 👉 https://t.co/SVn8iKC4Hl#vivoipl #mivkkr pic.twitter.com/EF9X5H2vbp
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
கொல்கத்தா அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த சுப்மான் கில் 1 சிக்ஸர் 1 பவுண்டரி விளாசிய நிலையில் பும்ராவின் வேகத்தில் சிக்கி 13 ரன்களுடன் வெளியேறினார்
T. I. M. B. E. R! ☝️@Jaspritbumrah93 does the trick as @mipaltan strike! 👍 👍#kkr lose Shubman Gill after a brisk start. #vivoipl #mivkkrFollow the match 👉 https://t.co/SVn8iKC4Hl pic.twitter.com/ugiXCmXVO4
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.
கொல்கத்தா – மும்பை அணிகள் விளையாடி வரும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1 சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டிய பொல்லார்ட் அவருடன் மறுமுனையில் இருந்த க்ருனால் பாண்டியா தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளனர்.
மும்பை அணி அதன் முன்னணி வீரர்களை இழந்துள்ளது. எனினும், அந்த அணியின் கீரான் பொல்லார்ட் நம்பிக்கை நம்பிக்கை அளித்து வருகிறார்.
1 சிக்ஸரை பறக்கவிட்ட இஷான் கிஷன் 14 ரன்கள் சேர்த்த நிலையில் லாக்கி பெர்குசன் வீசிய 16.2 ஓவரில் ரஸ்ஸல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீசி வரும் நிலையில், மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் – ரோஹித் சர்மா ஜோடி அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்துள்ளது.
3 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசிய டி காக் 27 ரன்களுடனும், 4 பவுண்டரிகளை விரட்டியுள்ள ரோஹித் சர்மா 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு (கொல்கத்தா அணி) எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்சை அணிகள் மோதும் இன்றை ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் – ரோஹித் சர்மா ஜோடி பேட்டிங் செய்ய களமிறங்குகிறார்கள்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள மும்பை அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சraரப் திவாரி, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
Team News!1⃣ change for @mipaltan as @ImRo45 returns to captain the side. @KKRiders remain unchanged. #vivoipl #mivkkrFollow the match 👉 https://t.co/SVn8iKC4HlHere are the Playing XIs 🔽 pic.twitter.com/jlROlVxe57
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்சை அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
🚨 Toss Update 🚨@Eoin16 wins the toss & @KKRiders have elected to bowl against @mipaltan. #vivoipl #mivkkrFollow the match 👉 https://t.co/SVn8iKC4Hl pic.twitter.com/IEHDhhXS0u
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
மும்பைக்கு எதிராக கடைசியாக மோதிய 13 ஆட்டங்களில் 12-ல் தோற்றுள்ள கொல்கத்தா அணி அந்த தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை இன்றைய ஆட்டத்தில் பார்க்கலாம்.
மும்பை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் நேற்று அளித்த பேட்டியில் “ரோகித்தும், ஹர்திக் பாண்ட்யாவும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய ஆட்டத்துக்கான அணித் தேர்வுக்கு அவர்கள் தயாராக இருப்பார்களா? என்பது குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் நாள்தோறும் அவர்களது உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டார். ரோகித் சர்மா உடல்தகுதியை எட்டாவிட்டால் பொல்லார்ட் அணியை வழிநடத்துவார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று மாலை 7:30 மணிக்கு அரங்கேறும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Hello & welcome from Abu Dhabi for Match 3⃣4⃣ of the #vivoipl. 👋A cracking contest is on the cards as @mipaltan take on @KKRiders. 👌 👌Which team are you rooting for tonight❓ 🤔 🤔 #mivkkr pic.twitter.com/X3cBFQuyyX
— IndianPremierLeague (@IPL) September 23, 2021