ஹைதராபாத் அணியில் 4 வீரர்கள் மாற்றம்; யார்க்கர் மன்னனுக்கு வாய்ப்பில்லை!

MI vs SRH match nadarajan missed in the squad Tamil News: மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் முன்னணி வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

MI vs SRH match nadarajan missed in the squad Tamil News: மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் முன்னணி வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: MI vs SRH match natarajan missed in the squad

IPL 2021 Tamil News: தனது 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 10 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் வீரர்கள் வரிசையில் எந்த மாற்றமும் செய்யாமல் களம் கண்டுள்ளது. லீக் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை கண்ட சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி அதன் அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Advertisment

நான்கு வீரர்களை மாற்றங்களை கொண்டு வந்துள்ள ஹைதராபாத் அணியில், விருத்திமான் சஹா, ஜேசன் ஹோல்டர், ஷாபாஸ் நதீம் மற்றும் டி நடராஜன் ஆகியோருக்கு பதிலாக விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கலீல் அகமது ஆகியோரை சேர்த்துள்ளது.

நடராஜன் இடமில்லை

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கெதிரான இரண்டு ஆட்டங்களிலும் 4 ஓவர்களை வீசிய யார்க்கர் மன்னன் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Natarajan Ipl Live Score Ipl News Ipl Cricket Ipl Mi Vs Srh Ipl 2021

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: