Ipl 2021 tamil news: 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்க உள்ளது. கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெறாமல் வீடு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஹரிஷங்கர் தனது பந்து வீச்சில் அணியை மிரள வைத்துள்ளார். அதோடு அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனியை போல்ட் அவுட் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இளம் வீரர் ஹரிஷங்கர் வீசிய பந்து கண் இமைக்கும் நொடியில் கேப்டன் தோனியின் லெக் சைட் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. அதிரடியாக ஷாட் ஆட சென்ற தோனியோ அங்கு என்ன நடந்தது என்பவர்போல் திகைத்துள்ளார். இருப்பினும், இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தோனி 60 ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் உள்ளார் என்று கூறப்படுகிறது. தோனி போல்ட் அவுட் ஆனா இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
22-year-old Harishankar Reddy cleaned up MS Dhoni in the practice match ahead of IPL 2021. pic.twitter.com/VCmA1Y16hQ
— Johns. (@CricCrazyJohns) March 17, 2021
— 𝗞𝗶𝗥𝗔𝗡 (@KiRAN_RCB) March 17, 2021
இளம் வீரர் ஹரிஷங்கர் ஆந்திர அணியில் விளையாடி வருகிறார். சிறப்பான ஆட்டத்தால் கவனம் பெற்ற இவர், நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.
இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளதால் மீண்டும் அனைவரின் கவனமும் சென்னை அணி பக்கம் திரும்பியுள்ளது. அணிக்கு பேட்டிங்கில் வலு சேர்க்க அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட், சுரேஷ் ரெய்னா போன்றோர் உள்ளனர். அணிக்கு புதிய வருகையயாக வந்துள்ள ராபின் உத்தப்பா, ஆல்-ரவுண்டர்கள் மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் அணிக்கு மேலும் வலு சேர்ப்பார்கள்.
பந்து வீச்சில் கலக்க ஷரத்துல் தாக்கூர், சுட்டிக்குழந்தை சாம் கரண், லுங்கி நிகிடி, ஜடேஜா, தீபக் சாஹர் போன்ற படையே உள்ளது. எனவே இம்முறை சிஎஸ்கே அணி அதிரடி காட்டும் என நாம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil