/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-22T154652.236.jpg)
T Natarajan tests positive for COVID-19 Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்திற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட 6 வீரர்கள் தனிமைப்படுபட்டுள்ளனர் என்றும், ஹைதராபாத் - டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.