Punjab vs Rajasthan match Highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் லோகேஷ் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் படி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட எவின் லூயிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
முதல் 5 ஓவர்களில் அணிக்கு வலுவான அடித்தளமிட்ட இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரிகளை சிதறவிட்ட எவின் லூயிஸ் 36 (21) ரன்கள் நிலையில் பஞ்சாபின் அர்ஷ்தீப் சிங் வீசிய 5.3 வது ஓவரில் மாயங்க் அகர்வால் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை அதே ரன் ரேட்டில் நகர்த்திச் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சஞ்சு சதமடித்து மிரட்டி இருந்தார். மாறாக அவரோ இஷான் போரல் வீசிய 7.1 ஓவரில் கீப்பர் கேஎல் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
சஞ்சுவின் இடத்தை நிரப்ப களமிறங்கிய லிவிங்ஸ்டோன் தனது பங்கிற்கு 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டி 25 (17) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களத்தில் 14 ஓவர்கள் தாக்கு பிடித்த தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடக்க 1 ரன் எடுக்க முடியாமல் 49 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த இவர் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளை விளாசி இருந்தார்.
ராஜஸ்தான் அணி ஒருபக்கம் விக்கெட் சரிவை கண்டாலும் தொடர்ந்து களம் கண்ட வீரர்கள் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டு ரன் ரேட்டை உயர்த்தினர். குறிப்பாக, அந்த அணியின் மஹிபால் லோமோர் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 17.1 ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும், 17 பந்துகளில் 43 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
ராஜஸ்தான் அணியின் இந்த அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மஹிபால் லோமோரின் விக்கெட்டுக்கு பிறகு களம் கண்ட வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பஞ்சாப் அணி சார்பில் மிகத்துல்லியமாக பந்து வீசி அசத்திய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதே போல் கடைசி ஓவர்களில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றும் அந்த அணியின் இஷான் போரல், ஹர்பிரீத் பிரார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
186 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரன் ரேட்டை உயர்த்த வலுவான அடித்தளமிட்ட இந்த ஜோடியில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்ட மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து தனது அரைசத்தை கடந்தார்.
மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்ட மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 4 ரன்கள் மாட்டுமே தேவைப்பட்டது. ராஜஸ்தானின் கார்த்திக் தியாகி வீசிய இந்த கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த மார்க்ரம் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2வது பந்தில் 1 ரன் தட்டிக் கொடுக்கவே பேட்டிங் செய்ய நிக்கோலஸ் பூரன் வந்தார்.
மிகவும் கட்டுப்பாட்டுடன் 3வது பந்து வீசிய கார்த்திக் தியாகி நிக்கோலஸ் பூரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஆட்டமிழக்க செய்தார். அவரை தொடர்ந்து வந்த தீபக் ஹூடாவும் கார்த்திக் தியாகியின் வேகத்தில் சிக்கி வெளியேறினார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிகொள்ளவே ரன் ஏதும் எடுக்காமல் பஞ்சாப் அணியினர் ஏமாற்றினார். எனவே அந்த அணி ராஜஸ்தான் அணியிடம் 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த அணிக்காக கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவருடன் இணைத்து வெற்றிக்கு உழைத்த சேத்தன் சகாரியா மற்றும் ராகுல் தேவாடியா தலா 1 விக்கெட்டை சாய்த்து அசத்தினர். இந்த திரில் வெற்றி மூலம் முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதற்கு பதிலடி கொடுத்துள்ளது ராஜஸ்தான் அணி. மேலும், புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்திற்கு நகர்ந்துள்ளது.
Indian Premier League, 2021Dubai International Cricket Stadium, Dubai 29 June 2022
Punjab Kings 183/4 (20.0)
Rajasthan Royals 185 (20.0)
Match Ended ( Day – Match 32 ) Rajasthan Royals beat Punjab Kings by 2 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
ராஜஸ்தான் அணிக்காக கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
What a FINAL over this has been 😳😳RAJASTHAN ROYALS HAVE WON IT!#vivoipl #pbksvrr pic.twitter.com/rYJTgOBsBR
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 2 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்கிற நிலையில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய தீபக் ஹூடா டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்கிற நிலையில் உள்ள நிலையில் சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் பூரன் அவுட் ஆனார்.
தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடிய நிலையில், 43 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்
மிகச் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 11.5 ஓவர்களில் 120 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளார் ராகுல்.
“விக்கெட் கீப்பர் கேப்டன்சி கலையை கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்கள் எம்எஸ் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 10 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் சேர்த்து அசதியுள்ளது இந்த ஜோடி.
கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி 4 வது முறையாக 100 ரன் பார்னேர்ஷிப்.
6 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்ட பஞ்சாபின் மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து தனது அரைசத்தை கடந்தார்.
That's a brilliant FIFTY for @mayankcricket off 34 deliveries.He brings up his half-century with Maximum! 👏👏Live – https://t.co/hcPS4WcfeQ #pbksvrr #vivoipl pic.twitter.com/4bK6D11e6Y
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் அடித்து 3 கேட்ச்களை மிஸ் செய்துள்ளனர் ராஜஸ்தான் அணியினர். இது எந்த அளவிற்கு அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பஞ்சாப் அணி 9 ஓவர் முடிவில் – 81/0
186 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கியுள்ள கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியுள்ள நிலையில், 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசி மிரட்டியுள்ளார் கேஎல் ராகுல். அதே வேளையில் 6 பவுண்டரிகளை விரட்டியுள்ளார் மயங்க் அகர்வால்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்களில் சுருண்டது. எனவே பஞ்சாப்க்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான பந்து வீசி அசத்திய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Innings Break!5⃣ wickets for @arshdeepsinghh 3⃣ wickets for @MdShami11 #pbks bowl out Rajasthan Royals for 185. #pbks chase to begin shortly. Scorecard 👉 https://t.co/odSnFtwBAF #vivoipl #pbksvrr pic.twitter.com/hYrd5qg0vT
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
That’s a brilliant 5-wkt haul for @arshdeepsinghh 👏👏#vivoipl #pbksvrr pic.twitter.com/XuJNvwzdUQ
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
16 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது ராஜஸ்தான் அணி. அந்த அணியில் தற்போது களத்தில் உள்ள மஹிபால் லோமோர் 4 சிக்க்ஸர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டி வருகிறார்.
கடைசி 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்த ஓவர்களில் அந்த அணி இழந்திருந்தாலும், தொடர்ந்து ரன் குவிக்க முனைப்பு காட்டி வருகிறது. களத்தில் உள்ள ரியான் பராக் 4 ரன்களுடனும், மஹிபால் லோமோர் 42 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லூயிஸ் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இஷான் போரல் வீசிய 7.1 ஓவரில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சஞ்சு சதமடித்து மிரட்டிய நிலையில், தற்போது 4 ரன்னில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A stunner of a catch from @klrahul11 ends Sanju Samson's stay out there in the middle.Porel picks up his first wicket. #rr 68/2Live – https://t.co/odSnFtwBAF #pbksvrr #vivoipl pic.twitter.com/Xd8TRlCOcM
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரக களமிறங்கிய எவின் லூயிஸ் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளை சிதறவிட்டு வலுவான அடித்தளமிட்ட நிலையில், பஞ்சாபின் அர்ஷ்தீப் சிங் வீசிய 5.3 வது ஓவரில் மாயங்க் அகர்வால் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் பேட்டிங் செய்ய களம் கண்டுள்ள தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லூயிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது.
எவின் லூயிஸ் பவுண்டரிகளை விரட்டியுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளை விரட்டியுள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 53/0
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் கண்டுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லூயிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் களமிறங்கும் வெளிநாட்டு வீரர்கள்:
மார்க்ராம், ஆலன், ரஷீத், பூரன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் களமிறங்கும் வெளிநாட்டு வீரர்கள்:
எவின் லூயிஸ், லிவிங்ஸ்டோன், மோரிஸ், ஃபிஸ்
விளையாடும் 11ல் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல், ஷாருக் கான் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்கள் இல்லை
பஞ்சாப் கிங்ஸ் அணி:
லோகேஷ் ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) , மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், அடில் ரஷீத், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், இஷான் போரல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி.
A look at the Playing XI for #pbksvrr Follow the game here – https://t.co/odSnFtwBAF #pbksvrr #vivoipl https://t.co/5dELKgsyhU pic.twitter.com/YUfq6p3r96
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
#pbks have won the toss and they will bowl first against #rr.Live – https://t.co/odSnFtwBAF #pbksvrr #vivoipl pic.twitter.com/wtc8qhgGjz
— IndianPremierLeague (@IPL) September 21, 2021
பஞ்சாப் கிங்ஸ்: ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித் மற்றும் டேவிட் மாலன்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ டை மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி சற்றே சிறப்பான சாதனையை படைத்துள்ளது. அந்த அணிக்கு எதிராக 12 ஆட்டங்களில் வெற்றியை ருசித்துள்ள ராஜஸ்தான் அணி நடப்பாண்டு தொடரின் முதல் பாதியில் மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் அணி:
கே. எல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், அடில் ரஷித், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், முகமது ஷமி
ராஜஸ்தான் அணி: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பராக், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் தேவாடியா, கார்த்திக் தியாகி/ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.