அறிமுக போட்டியில் மிரட்டிய கொல்கத்தா வீரர்; பேட்டிங் டிப்ஸ் கொடுத்த கேப்டன் கோலி (வைரல் வீடியோ)
Post match lessons from Kohl a memorable debut for Venkatesh Iyer Tamil News: கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயருக்கு கேப்டன் கோலி அறிவுரை வழங்கிய வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Post match lessons from Kohl a memorable debut for Venkatesh Iyer Tamil News: கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயருக்கு கேப்டன் கோலி அறிவுரை வழங்கிய வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
IPL 2021 KKR VS RCB Tamil News: மீண்டும் தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 31வது போட்டி நேற்று அபுதாபி நடைபெற்றது. இதில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிக விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த அந்த அணி 5வது இடத்திற்கு நகர்ந்தது.
Advertisment
இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய இவர் முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 82 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருந்தார். மேலும், 27 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் என மிரட்டி 41 ரன்களை குவித்து அசத்தினார்.
கொல்கத்தா அணிக்கு இதுவரை சரியான ஓப்பனர்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது 26 வயதான மத்திய பிரதேசத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் கிடைத்துள்ளார். இதனால், கொல்கத்தா அணிக்கு கூடுதல் நம்மிக்கையும் உத்வேகமும் கிடைத்துள்ளது.
வெங்கடேஷ் ஐயர் நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி சந்தித்து பேசினார். பவுண்டரி லைனுக்கு அருகில் நடந்த இந்த சந்திப்பில் அவரது பேட்டிங்கில் செய்யக்கூடிய மாற்றம் குறித்து சில டிப்ஸ்களை வழங்கினார் கேப்டன் கோலி. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பெங்களூரு அணி 92 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil