Advertisment

'ரோல் மாடல்' கிறிஸ் கெயில் - நெகிழ்ச்சியுடன் தொப்பியை பெற்ற தமிழக வீரர் ஷாருக்…!

Tamilnadu player shahrukh khan receives cap from his role model Chris Gayle Tamil News: பஞ்சாப் அணியில் களமிறங்கும் தமிழக வீரர் ஷாருக்கான், அவரின் 'ரோல் மாடல்' கிறிஸ் கெயிலிடம் இருந்து பஞ்சாப் அணியின் கேப்பை நெகிழ்வுடன் பெற்று கொண்டார்.

author-image
WebDesk
Apr 12, 2021 21:42 IST
pl 2021 Tamil News: Punjab Kings vs Rajasthan Royals, tamilnadu player shahrukh khan receives cap from his role model Chris Gayle

Ipl 2021 Tamil News: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டிகள் பூட்டப்பட்ட மைதானங்களில் நடைபெற்று வந்தாலும் ரசிகர்களின் வரவேற்புக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவிற்கு உள்ளது. இந்த நிலையில் தொடரின் 4வது போட்டியின் நாளான இன்று, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் லீக் போட்டியிலே தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இடம் கிடைத்துள்ளது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த ஷாருக் இந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் கோப்பை தொடரில் தமிழக அணி சார்பில் களமிறங்கினார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இவர், பரோடா அணிக்கெதிரான இறுதி போட்டியில் அதிரடி காட்டி ஆட்டத்தை பினிஷ் செய்தார். இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணியால் சுமார் 5.25 கோடிக்கு வாங்கப்பட்டார். மேலும் அந்த அணியில் விளையாடிய மேக்ஸ்வெல் தொடரில் பெரிதும் சோபிக்காததால் கழட்டிவிடப்பட்டு, அவருக்கு பதில் ஷாருக் சேர்க்கப்பட்டார். தற்போது இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார்.

இந்த நிலையில் அறிமுக வீரர் ஷாருக்கானுக்கு அவரின் ரோல் மாடல் கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியின் கேப்பை வழங்கினார். பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ள ஷாருக், இந்த தொடரில் நிச்சம் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

#Punjab Kings Vs Rajasthan Royals #Chris Gayle #Ipl Cricket #Punjab Kings #Ipl #Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment