RCB vs CSK match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன் படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவதூத் படிக்கல் களமிறங்கினர். அந்த அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி பவர் பிளே முடிவில் (6ஓவர்) 46 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த அதிரடி காட்டிய இந்த ஜோடியில் படிக்கல் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் கோலி 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து தனது ரன் வேட்டையை தொடர முயன்ற கோலி பிராவோ வீசிய 13.2 ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணி 1 விக்கெட்டை இழந்து இருந்தாலும் தொடர்ந்து அந்த அணி வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி 16 ஓவர்கள் முடிவில் 131 சேர்த்தது. அதிரடியாக விளையாடிய படிக்கல் 47 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து இருந்தார். அவருக்கு பக்கபலமாக டி வில்லியர்ஸ் தட்டிக்கொடுத்து ஆடி வந்தார். இந்த ஜோடியை உடைக்க முயன்ற கேப்டன் தோனி ஷர்துல் தாக்கூரை பந்து வீச அழைத்தார்.
சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர் 1 சிக்ஸரை பறக்கவிட்டு களத்தில் இருந்த ஏபி டி வில்லியர்ஸை அவுட் ஆக்கினார். அவருடன் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த படிக்கல் தாக்கூர் வீசிய அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு வலுவான அடித்தளமிட்ட தேவதூத் படிக்கல் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 70 ரன்கள் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் 1 ரன் சேர்த்து அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். மேக்ஸ்வெல் 11 ரன்னுடனும், ஹர்ஷல் பட்டேல் 3 ரன்னுடனும் ஆட்டமிழந்தார். இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 156 ரன்கள் சேர்த்தது. கடைசி 8 ஓவர்களில் பந்து வீச்சில் மிரட்டிய சென்னை அணிக்கு ரன்கள் 157 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி சார்பில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டையும், தீபக் சாஹர் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து 157 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கிய சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை அமைத்தது.
6 ஓவர் முடிவில் 59 சேர்த்த இந்த ஜோடியில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்கள் சேர்த்து கோலி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த டு பிளெசிஸ் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசிய 26 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்த 2 விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய மொயீன் அலி – அம்பதி ராயுடு ஜோடி சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டது. இதில், 2 சிக்ஸரை பறக்கவிட்டு 18 பந்துகளில் 23 ரன் சேர்த்த மொயீன் அலி ஹர்ஷல் படேல் வீசிய 13.6 ஓவரில் கோலி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு உறுதுணையாக ஆடிய அம்பதி ராயுடு 32 (22 பந்துகளில், 1 சிக்ஸர், 3 பவுண்டரி ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்ஷல் படேலின் வேகத்தில் சிக்கி வெளியேறினார்.
இந்த 4 விக்கெட்டுகளுக்கு பிறகு களத்தில் நின்று அதிரடியாக ரன் சேர்த்த கேப்டன் தோனி – ரெய்னா ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்ததது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 18.1 ஓவரிலேயே எட்டி அணியின் 7வது வெற்றியை பதிவு செய்தது. இந்த சிறப்பான வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மீண்டும் தொடங்கியுள்ள தொடரில் 2வது தோல்வியை சந்தித்துள்ள பெங்களூரு அணி பட்டியலில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
After Match 35 of the #VIVOIPL, @ChennaiIPL are back on the top of the Points Table whereas #RCB are third! #RCBvCSK pic.twitter.com/QwMaB3EWDG
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
Indian Premier League, 2021Sharjah Cricket Stadium, Sharjah 25 June 2022
Royal Challengers Bangalore 156/6 (20.0)
Chennai Super Kings 157/4 (18.1)
Match Ended ( Day – Match 35 ) Chennai Super Kings beat Royal Challengers Bangalore by 6 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பெங்களூரூ அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
Back to back wins for @ChennaiIPL! 👏 👏A convincing victory for #csk as they beat #rcb by 6⃣ wickets. 👌 👌 #vivoipl #rcbvcskScorecard 👉 https://t.co/2ivCYOWCBI pic.twitter.com/qKo58oFAJb
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
.@DJBravo47 was outstanding with the ball and won the Man of the Match award as @ChennaiIPL beat #rcb. 👏 👏 #vivoipl #rcbvcsk Scorecard 👉 https://t.co/2ivCYOWCBI pic.twitter.com/WcMbJCFKBK
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், கேப்டன் தோனி – ரெய்னா ஜோடி களத்தில் நின்று அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது.
பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 32 ரன்கள் தேவை. அம்பதி ராயுடு – ரெய்னா ஜோடி ஜோடி அதிரடியாக ரன் சேர்த்து வருகின்றனர்
2 சிக்ஸரை பறக்கவிட்டு 18 பந்துகளில் 23 ரன் சேர்த்த மொயீன் அலி கோலி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 47 பந்துகளில் 42 ரன்கள் தேவை. மொயீன் அலி – அம்பதி ராயுடு ஜோடி அதிரடியாக ரன் சேர்த்து வருகின்றனர்
சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் – டு பிளெசிஸ் ஆட்டமிழந்து உள்ள நிலையில் அந்த அணி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது.
#csk – 78 ( 0 wkts, 10 Over)
2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசிய டு பிளெசிஸ் 26 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் – டு பிளெசிஸ் ஆட்டமிழந்து உள்ளது
1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Match 35. 8.2: WICKET! R Gaikwad (38) is out, c Virat Kohli b Yuzvendra Chahal, 71/1 https://t.co/lrAvDTl5Qm #rcbvcsk #vivoipl #ipl2021
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி களமிறங்கியுள்ள நிலையில் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்துள்ளனர். அதிரடி காட்டி வரும் ருதுராஜ் – டு பிளெசிஸ் ஜோடி 6 ஓவர் முடிவில் 59 சேர்த்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 156 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 8 ஓவர்களில் பந்து வீச்சில் மிரட்டிய சென்னை அணிக்கு ரன்கள் 157 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் பெங்களூரூ அணி சார்பில் களமிறங்கியுள்ள நிலையில், 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.
1 சிக்ஸரை பறக்கவிட்ட ஏபி டி வில்லியர்ஸ் ஷர்துல் தாக்கூர் வேகத்தில் சிக்கி வெளியேறினார். டி வில்லியர்ஸை தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
Double-wicket over for @ChennaiIPL! 👏 👏@imShard strikes twice in an over to dismiss AB de Villiers & Devdutt Padikkal. 👍 👍 #vivoipl #rcbvcsk #rcb 3 down. Follow the match 👉 https://t.co/2ivCYOWCBI pic.twitter.com/LNiEf57cCv
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து இருந்தாலும் அந்த வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் படிக்கல் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்துள்ளார். 5 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள அவர் 47 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்துள்ளார்.
அவருடன் மறுமுனையில் இருக்கும் டி வில்லியர்ஸ் தட்டிக்கொடுத்து ஆடி வருகிறார். அவர் இதுவரை ஏதும் பெரிய ஷாட் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
41 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த கேப்டன் கோலி பிராவோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கோலி 1 சிக்ஸர் 6 பவுண்டரி அடித்து அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்திருந்தார்.
O. U. T! ☝️#rcb 111/1 as captain Virat Kohli departs after scoring a fine 53. @DJBravo47 strikes to give @ChennaiIPL a much-needed breakthrough. 👏 👏 #vivoipl #rcbvcsk Follow the match 👉 https://t.co/2ivCYOWCBI pic.twitter.com/4dF7uGPmV7
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி – தேவதூத் படிக்கல் அந்த அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. இந்த ஜோடியில் தேவதூத் படிக்கல் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்த நிலையில், கேப்டன் கோலி 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர் பிளே முடிவில் (6ஓவர்) விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது பெங்களூரு அணி.
#rcb – 55/0 (5 Overs)
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விரட்டியுள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 36ரன்கள் எடுத்துள்ளது பெங்களூரு அணி.
#rcb -36/0 (4Overs)
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது பெங்களூரு அணி.
#rcb -28/0 (3 Overs)
சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்
மணல் புயல் காரணமா சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் போடுவது தாமதமாகி வரும் நிலையில் 7:30 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் 7:45 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், மணல் புயல் காரணமா டாஸ் போடுவது தாமதமாகி வருகிறது. 7:25 மணிக்கு டாஸ் போட வாய்ப்புள்ளதாக ஐபிஎல் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🚨 Sandstorm Alert 🚨Toss delayed in Sharjah by 10 mins! #vivoipl #rcbvcsk pic.twitter.com/tERTPwrpGx
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், மணல் புயல் காரணமா டாஸ் போடுவது 10 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Virat Kohli and MS Dhoni bond in #ipl2021 pic.twitter.com/K0YquzFcAR
— Johns. (@CricCrazyJohns) September 24, 2021
சென்னை: பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு அல்லது உத்தப்பா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.
பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, கைல் ஜாமிசன், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இந்த இரு அணிகள் சந்தித்த 26 ஆட்டங்களில் சென்னை அணி 17 முறை வென்றுள்ளது. மேலும், கடைசியாக இந்த இரு அணிகள் ஆடிய 11 ஆட்டங்களில் 9ல் சென்னை அணி வென்றுள்ளது.
இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணி ஆதிக்கம் தொடருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு அமீரகத்தில் ஐ.பி.எல். நடந்த போது சார்ஜா மைதானத்தில் ரன்மழை பொழியப்பட்டது. பவுண்டரி தூரம் குறைவு, பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம்.
இந்த ஆடுகளத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இன்றைய ஆட்டத்திலும் இங்கு ரன் விருந்தை எதிர்பார்க்கலாம்.
சென்னை – பெங்களூரு அணிகள் ஏற்கனவே சந்தித்த முதற்கட்ட லீக் ஆட்டத்தில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
Hello & welcome from Sharjah for Match 3⃣5⃣ of the #vivoipl 👋All set for mouthwatering contest as @imVkohli's @RCBTweets square off against the @msdhoni-led @ChennaiIPL. 🔥 🧊Which team will come out on top tonight❓ #rcbvcsk pic.twitter.com/4efREDMgcx
— IndianPremierLeague (@IPL) September 24, 2021