IPL 2021 Tamil News: ஐபிஎல் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெற்றியை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது.
முன்னதாக ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் தனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் பட்லருக்கு ‘ஜோஷ் பாய்’ என்ற பட்டப் பெயரை சூட்டிய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அணியினர் உற்சாகம் செய்தனர். “மைதானத்தில் வீரரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டதை நான் மிகவும் ரசித்தேன். சங்ககாரா கூறியது போல என்னால் சில நல்ல முடிவுகளை எடுக்க முடிகிறது. இவை அனைத்தும்சாத்தியமானது ஜோஸ் பாயின் உதவியதால் மட்டுமே” என்று டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்தவாறு அணியினரிடம் உரையாற்றினார்.
கேப்டன் சஞ்சு, ஜோஸ் பட்லரை ‘ஜோஷ் பாய்’ என்ற அழைத்ததற்கு அணியினர் உற்சாக வரவேற்பை அளித்ததோடு, சத்தத்தோடு சலசலப்பை ஏற்படுத்தினர்.
Sanju’s got a new nickname for Jos. 😋#JosBhai | #RoyalsFamily | @IamSanjuSamson | @josbuttler pic.twitter.com/wx1Y5yuYwq
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2021
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் வென்றது. அதில் கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றும் டேவிட் மில்லரின் அரைசதம் அணியின் வெற்றியை உறுதி செய்தது. அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான பட்லர் இன்னும் போட்டிகளில் அதிரடி காட்டவில்லை. அவர் இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கி 25 ரன்களை சேர்த்துள்ளார்.
அந்த அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விரல் காயத்தால் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். தற்போது இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்ற அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)