Advertisment

ஆரஞ்சு ஆர்மிக்காக துள்ளிக் குதிக்கும் காவ்யா: யார் இவர்?

SRH CEO Kavya Tamil News: ஆரஞ்சு ஆர்மிக்காக துள்ளிக் குதித்து உற்சாகம் செய்து வருகிறார் அந்த அணியின் நிர்வாக இயக்குனர் காவ்யா மாறான்.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: SRH CEO Kavya  jumping up in joy supporting her team

IPL 2021 Tamil News: ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இருப்பினும், அந்த அணியை தொடக்கம் முதல் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார் அந்த அணியின் இளம் ரசிகை காவ்யா. இப்படி ஆரஞ்சு ஆர்மியின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறாரே யார் இந்த இளம் ரசிகை? என்ற கேள்வி போட்டியை பார்த்த அனைவர் மனதிலும் எழுந்திருக்கும்.

Advertisment
publive-image
காவ்யா மாறான்.

ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தும் அந்த இளம் ரசிகையை அந்த அணியின் நிர்வாக இயக்குனர் என்று கூறினால் மிகையாகாது. ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் காவ்யா யார்? அவரின் பின்புலம் என்ன? இந்த பொறுப்பிற்கு அவர் எப்படி தேர்வானார் என்பது குறித்து இங்கு சுருக்கமாக காணலாம்.

publive-image
Kavya Maaran - காவ்யா மாறான்

25 வயதான காவ்யா மாறன் வணிக மேலாண்மை படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமத்தின் முதன்மை செயலாளர் கலாநிதி மாறனின் மகள் ஆவார். கிரிக்கெட்டிலும், மியூசிக்கிழும் ஆர்வமான இவர், சன் குழுமத்தின் மியூசிக் தொலைக்காட்சியையும், அதன் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் நிர்வகித்து வருகிறார். மேலும் சன் குழுமத்தின் முக்கிய பொறுப்புகளிலும் அங்கம் வகின்றார்.

publive-image
காவ்யா மாறான்.

இந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்வமாக பங்கேற்ற இவர், தற்போது அந்த அணி பங்கேற்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, துள்ளிக் குதித்து உற்சாகப் படுத்தி வருகிறார். சிங்கிளாக வலம் வரும் காவ்யாவிற்கு மியூசிக், ட்ராவல் மிகவும் பிடித்த ஒன்றாம்.

publive-image
காவ்யா மாறான்

ஐபிஎல் தொடர்களில் பங்குபெற்ற ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த அணியை சுமார் 425 கோடிக்கு சன் குழுமம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அணி 'சன்ரைசர்ஸ் ஐதராபாத்' என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Cricket Sports Kalanithi Maran Sun Network Ipl Cricket Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment