IPL 2021 Updates: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் 4 நான்கு வாரங்களில் 29 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தொற்று குறித்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டாலும், தொடரில் கலந்து கொண்டுள்ள கொல்கத்தா அணி வீரர்களுக்கும், சென்னை அணியின் நிர்வாகிகளுக்கும் நேற்று திங்கள் கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அகமதாபாத்தில் மோதவிருந்த நேற்றைய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 14 நாட்களில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய மற்ற நான்கு அணிகளின் வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி, பி.சி.சி.ஐ மற்றும் அவரது அணியின் உரிமையாளர்களின் அனுமதியுடன் தனது தோள் பட்டை ஸ்கேன் செய்ய அதிகாரப்பூர்வ சேனல் மூலம் உயிர் குமிழியை விட்டு வெளியேறிதாக கிரிக்கெட் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
“உயிர் குமிழியின் உள்ளே உள்ள வீரர்களுக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பதை நாங்கள் பார்க்கவுள்ளோம். வருண் சக்ரவர்த்தி ஸ்கேன் செய்யும் போது தொற்று பரவியிருக்கலாம். ஆனால் விவரங்களை சரிபார்க்காமல் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் ”என்று பிசிசிஐ அதிகாரி கூறினார்.
கடந்த 14 நாட்களில், டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கேவுக்கு எதிராக கொல்கத்தா அணியினர் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரின் கொரோனா வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட நபரின் “நெருங்கிய தொடர்பு” “ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்” மற்றும் “1, 3 மற்றும் 6 ஆம் தேதிகளில் 3 எதிர்மறை சோதனைகளை” வழங்க வேண்டும்.
இது கொல்கத்தா அணியினர் தொடர்ந்து தொடரில் பங்கேற்பார்களா என்பதில் கேள்வியை எழுப்பியது. மேலும் அந்த அணிக்கெதிராக விளையாடிய 4 அணிகள் குறித்த நிலைமையும் பெரும் கேள்வியாக இருந்தது.
சி.எஸ்.கே.யைப் பொறுத்தவரை, குமிழியில் தங்கியிருந்த இரண்டு வீரர்கள், “மற்றொரு சுற்று சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்”, அதே நேரத்தில் வீரர்கள் உட்பட ஒவ்வொரு தனிநபருக்கும் மேலும் சோதனைகள் செய்யப்படும் என பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஐபிஎல் லீக் ஆட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடந்தப்படுகின்றன. அதில் முதற்கட்டம் மும்பை மற்றும் சென்னை மைதானங்களில் நடந்தன. அதனைத் தொடர்ந்து அகமதாபாத் மற்றும் டெல்லி, பின்னர் கொல்கத்தா மற்றும் பெங்களூரு மைதானங்களிலும், தொடருக்கான பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஐபிஎல்நிர்வாகம் தொடரின் இறுதி போட்டியை மே 30ம் தேதி நடந்த திட்டமிட்டிருந்த நிலையில், அட்டவணையை மாற்றவோ அல்லது போட்டிகளை ஒத்திவைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. ஏனென்றால் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது. மேலும் ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கு 15 நாள் இடைவெளி தேவை.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
UPDATE: The Indian Premier League Governing Council (IPL GC) and Board of Control for Cricket in India (BCCI) in an emergency meeting has unanimously decided to postpone IPL 2021 season with immediate effect.
— IndianPremierLeague (@IPL) May 4, 2021
Details – https://t.co/OgYXPj9FQy pic.twitter.com/lYmjBId8gL
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)